கேடிஎம் வெளியிட்ட புது எலெக்ட்ரிக் பைக்.. விலை என்னனு கேட்டா அசந்து போவீங்க!

கேடிஎம் நிறுவனம் புதிய ஃப்ரீரைடு இ (Freeride E) என்ற எலக்ட்ரிக் டர்ட் பைக்கை அப்டேட் செய்துள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பைக்கை தற்போது மேலும் மேம்படுத்தியிருக்கிறது. முன்பை விட பவர்ஃபுல்லாக மற்றும் வசதிகள் நிறைந்ததாக புதிய பைக் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

கேடிஎம்மின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஆஃப்-ரோடு பைக் என்றால் அது இந்த ஃப்ரீரைடு இ தான். பார்ப்பதற்கு சிறியதாக இருக்கிறதே, குழந்தைகளுக்கானதோ என நினைத்து விட வேண்டாம். இதனை ஆஃப்-ரோடு அட்வென்சரஸ் பயண அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக கேடிஎம் விற்பனை செய்து வருகிறது. இதன் சீட் உயரம் 910 மிமீ. எனவே எந்த வகையான பாதையையும் எளிதாகக் கடக்கும் திறன் கொண்டது.

KTM Freeride E

ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கின் சீட் உயரம் 785 மிமீ தான். இந்தியாவின் மிகவும் பிரபலமான அட்வென்சர் பைக்கான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் சீட் உயரம் 825 மிமீ தான். அப்படியென்றால் இந்த கேடிஎம் ஃப்ரீரைடு இ-யின் சீட் உயரம் எவளவு இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்.

முன்பை விட அதிக பவரைக் கொண்ட பைக்காகவே புதிய ஃப்ரீரைடு இ-யை மேம்படுத்தியிருக்கிறது கேடிஎம். இந்த பைக்கில் 25.5 hp பவர் மற்றும் 37 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பிற்கான ஆற்றலை 5.5 kWh பேட்டரி பேக் வழங்குகிறது. 112 கிலோ எடையைக் கொண்டிருக்கும் இந்த பைக்கில் பேட்டரியின் எடை மட்டும் சுமார் 29 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

KTM Freeride E

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்திருந்தால் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை கரடுமுரடான பாதைகளில் எண்டூரோ ரைடிங் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது கேடிஎம். இதன் பேட்டரி பேக்கை 660 W சார்ஜர் மூலமாக 8 மணி நேரத்திலும், 3.3 kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 1.5 மணி நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியுமாம். இந்த பைக்கானது அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.

குரோம்-மாலிடெனம் ஸ்டீல் ஃபிரேமுடன் மேலே கூறியது போல மிகவும் எடை குறைவான எலெக்ட்ரிக் பைக் மாடலாக இருக்கிறது இந்த ஃப்ரீரைடு இ. பைக்கின் மற்ற பாகங்களுக்கும் மிகவும் எடை குறைவான, ஆனால் உறுதியான பொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 21 இன்ச் மற்றும் 18 இன்ச் வீல்களைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இரண்டு பக்கமும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிகிற வகையிலான WP சஸ்பென்ஷன் செட்டப்புகளே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாத இறுதியில் இருந்து உலகமெங்கும் இருக்கும் கேடிஎம் டீலர்ஷிப்களிடமிருந்து இந்த எலெக்ட்ரிக் பைக்கை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவிலும் இந்த பைக் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால் இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை கேடிஎம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கை இந்தியாவில் வெளியிடும் திட்டமும் கேடிஎம்மிடம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எண்டூரோ ரைடிங் அல்லது ஆஃப்-ரோடு ரைடிங்கிற்கு எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் அளவிற்கு இந்திய சந்தை இன்னும் வளரவில்லை. பட்ஜெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய வாடிக்கையாளர்களை கையக்கபடுத்தி வருகின்றன. இந்திய சந்தை இந்த பைக்கிற்குத் தயாராகும் போது கண்டிப்பாக இந்தியாவிலும் இது வெளியாகும். கேடிஎம் நிறுவனம் இப்போது பஜாஜின் கைகளில் தான் இருக்கிறது என்பதை நாம் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 8, 2026, 17:26 [IST]
English summary
Ktm freeride e electric dirt bike updated check all details here
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+