எந்த கம்பெனியா இருந்தாலும் 10 வருடம் வாரண்டி தர யோசிக்கும்! தனது பைக்குகள் மீது இந்த அளவுக்கு நம்பிக்கையா!!

உலகின் முன்னணி பிரீமியம் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் (KTM), இந்தியாவில் தனது கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் எக்ஸ் (390 Adventure X) ஆகிய சாகச பைக்குகளுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் இந்த கேடிஎம் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவுள்ள சிறப்புப் பரிசுகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் இந்த புதிய சலுகையால், ரூ.10,000 மதிப்புள்ள அசல் கேடிஎம் ஆக்சஸரீஸ் (Accessories) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குகளுக்கான ஹெட்லேம்ப் புரோஜெக்டர், சகதி தெறிப்பதை தடுக்கும் மட்-ஃப்ளாப் எக்ஸ்டென்ஷன், தாழ்வான ஃபெண்டர், சென்டர் ஸ்டாண்ட், நீண்ட தூர பயணத்திற்கான அகலமான இருக்கை மற்றும் பைக் கவர் உள்ளிட்ட ஆக்சஸரீஸ் இதில் அடங்குகின்றன.

ktm india announces new offer

இவை பைக்கின் சாகச மற்றும் ஆஃப்-ரோடு (Off-road) பயன்பாடுகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,650 மதிப்புள்ள 10 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு சலுகைகள் ஆனது இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட கேடிஎம் டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms) அனைத்திலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

ஆனால், அந்த குறிப்பிட்ட காலம் எது வரையில் என்பதை கேடிஎம் அறிவிக்கவில்லை. ஆதலால், இந்த விலை குறைவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளை வாங்க திட்டமிட்டு வரும் வாடிக்கையாளர்கள் முடிந்தவரையில் விரைவாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கான 390 அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்கலாம். இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குகள் விரைவில் 350சிசி-க்கு குறைவான என்ஜினுடன் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ktm india announces new offer

மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) திருத்தத்தின் கீழ் 350சிசி வரை உள்ள பைக்குகளுக்கு 18% குறைந்த வரி பலனைப் பெறுவதற்காக கேடிஎம் இந்தியா நிறுவனம் இந்த மாற்றத்தை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வகையில் பார்த்தால், அந்த பெரிய மாற்றத்திற்கு முன்பாக இந்த சலுகைகள் தற்போதைய 390 அட்வென்ச்சர் பைக்குகளின் இறுதி காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டும் இயந்திர ரீதியாக வேறுப்படாமல், 399சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த என்ஜின் 46 எச்பி ஆற்றலையும், 39 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. மேலும், இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

ktm india announces new offer

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச ஆக்சஸரீஸ் உடன், 10 வருடங்களுக்கு கூடுதல் வாரண்டியும் இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருப்பது, கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் உரிமையாளர்களுக்கு நீண்ட கால மன அமைதியையும், கவலையின்றி கடினமான பயணங்களை மேற்கொள்ளும் நம்பிக்கையையும் அளிக்கும். மேலும், கேடிஎம் நிறுவனத்தின் 'சாகசத்திற்காக உருவாக்கப்பட்டது' என்ற தத்துவத்தையும் இது பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த பண்டிகை கால சலுகையின் மூலம், கேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பைக் உரிமையின் மதிப்பை மேம்படுத்துவதிலும், நீண்ட காலம் பைக்கை பயன்படுத்தும் நம்பிக்கையை அதிகரிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதை வெளிப்படுத்துகிறது. இது செயல்திறன், நீடித்துழைப்பு மற்றும் எந்தவொரு பாதையிலும் பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்ட அட்வென்ச்சர் பைக்குகளை விரும்புபவர்களுக்கு கேடிஎம் நிறுவனத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக முன்னிறுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 5, 2026, 23:25 [IST]
English summary
Ktm india announces new year offer with extended warranty on 390 adventure motorcycles
மேலும்... #ktm #special offer #Pongal 2026 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X