இந்த கலரில் இன்னும் யாரும் வாங்கி இருக்க மாட்டாங்க... ஏரியாவில் முதல் ஆளா இந்த கேடிஎம் வாங்கி போடலாம்!

கேடிஎம் (KTM), இந்தியாவில் பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிறுவனம். பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கேடிஎம்-இன் டியூக் 250 (Duke 250)-க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனாலேயே இந்த 250சிசி நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் கேடிஎம் மறக்காமல் அப்கிரேட் செய்து விடுகிறது.

அந்த வகையில் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 2026 கேடிஎம் டியூக் 250 மோட்டார்சைக்கிளுக்கு புதியதாக சில்வர் மெட்டாலிக் மற்றும் ஸ்லேட் கிரே ஆகிய இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 250சிசி ஸ்ட்ரீட்பைட்டர் பிரிவில் டியூக் 250-இன் கவர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2026 ktm duke 250 motorcycle launch

ஏற்கனவே இருந்த எபோனி பிளாக், எலெக்ட்ரானிக் ஆரஞ்சு, அட்லாண்டிக் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் புதிய கலர் ஆப்ஷன்கள் இணைந்துள்ளன. புதிய நிறங்களுடன், ட்யூக் 250 பைக்கின் பெட்ரோல் டேங்க்கிற்கும், டேங்க் ஷிரவுட்களிலும் புதிய ஃபினிஷ்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மாறவில்லை.

நீளமான பெட்ரோல் டேங்க், கூர்மையான பின்பக்க டெயில் பகுதி மற்றும் கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் மூலம் டியூக் 250 தனது ஸ்போர்ட்டியான மற்றும் ஆக்ரோஷமான ஸ்ட்ரீட்பைட்டர் தோற்றத்தைத் தொடர்கிறது. அதேபோல், வழக்கமான 249.07சிசி சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் புதிய டியூக் 250 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 31 பிஎஸ் ஆற்றலையும், 7,250 ஆர்பிஎம்-இல் 25 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பவர்-அசிஸ்டட் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் குயிக் ஷிஃப்டர் பிளஸ் ஆகியவை கியர்களை மென்மையாக மாற்ற உறுதியளிக்கின்றன.

சஸ்பென்ஷன் அமைப்பில் 43மிமீ-இல் தலைகீழான அபெக்ஸ் யுஎஸ்டி (Apex USD) ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், 10 நிலைகளில் சரிசெய்யக்கூடிய ப்ரீலோடுடன் கூடிய தலைகீழான அபெக்ஸ் மோனோஷாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. கேடிஎம் நிறுவனத்தின் இரண்டாக பிரிக்கப்பட்ட டிரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் அலுமினியத்திலான சப்-ஃபிரேமில் உருவாக்கப்பட்ட புதிய ட்யூக் 250 சிறந்த கட்டமைப்பு உறுதித்தன்மையையும், துல்லியமான ஹேண்ட்லிங்கையும் வழங்குகிறது.

பிரேக்கிங்கிற்கு முன் சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இவை ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல்-சேனல் ஏபிஎஸ் (ABS) மற்றும் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் மோட் ஆகியவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, டியூக் 250 பைக்கில் 5 இன்ச் TFT டிஸ்ப்ளே உள்ளது.

2026 ktm duke 250 motorcycle launch

ட்ராக் மற்றும் ஸ்ட்ரீட் முறைகளில் திரையை காட்டும் இந்த டிஸ்பிளேவை ப்ளூடூத் உடன் இணைத்து பயணத்திற்கான வழிக்காட்டுதலை பெறுவதுடன், ஹெட்செட்டை இணைத்தல், எளிதான மெனு கட்டுப்பாட்டிற்கான 4-வே ஸ்விட்ச் கியூப் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 2026 டியூக் 250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-ஐ ரூ.2.13 லட்சம் என கேடிஎம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் பஜாஜ் டோமினார் 250, சுஸுகி ஜிக்ஸர் 250, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் போன்ற பிரிமியம் 250சிசி மோட்டார்சைக்கிள்களுடன் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகி வரும் சூழலில், கேடிஎம் ட்யூக் 250 பைக்கிற்கு இவ்வாறான அப்கிரேட்கள் அவசியமாகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 24, 2026, 22:55 [IST]
English summary
Ktm india launches 2026 duke 250 motorcycle with new colour options
மேலும்... #ktm #duke #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+