கேடிஎம் பைக் வாங்கும் ஆசையை குழி தோண்டி புதைச்சுருங்க... எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ அது நடக்க போகுது!

கேடிஎம் நிறுவனம் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் அதன் பைக்குகளின் விலைகளை இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் கேடிஎம் விற்பனை செய்யும் எண்ட்ரி-லெவல் 160சிசி பைக்குகளில் இருந்து விலையுயர்ந்த 390சிசி பைக்குகள் வரையில் அனைத்தின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அவ்வப்போது விலைகளை உயர்த்தும் நிறுவனங்களுள் ஒன்று கேடிஎம் ஆகும். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் இது செயல்படுகிறது. புனேவில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில் தான் கேடிஎம் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் ட்யூக், RC மற்றும் அட்வென்ச்சர் வரிசைகளில் கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ktm bike prices hike

கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய ஜிஎஸ்டி திருத்தத்தால், 350சிசி-க்கு மேல் உள்ள பைக்குகளுக்கு ஜிஎஸ்டி அதிகரித்தது. இதனால், பஜாஜ் மற்றும் அதன் கீழ் செயல்படும் மற்றொரு நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் உள்ளிட்டவை 350சிசி என்ஜினுக்கு தங்களது 400சிசி பைக்குகளை மாற்றின.

ஆனால், கேடிஎம் நிறுவனம் தனது 390சிசி பைக்குகளை தொடர்ந்து 390சிசி என்ஜின் உடன் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வருகிற ஜூன் 1 முதல் 390சிசி பைக்குகள் உடன் சேர்த்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த கேடிஎம் பைக்குகளின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ktm bike prices hike

வழக்கம்போல், இந்த விலை உயர்வுக்கும் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன உற்பத்தி செலவுகளையும், மெட்டீரியல்களுக்கான விலை அதிகரிப்பையும் மற்றும் போக்குவரத்து செலவுகளையும் கேடிஎம் காரணமாக கூறவுள்ளது. இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டு வரும் போதிலும் இந்திய இளைஞர்களின் பிடித்தமான பைக்குகளாக கேடிஎம் பைக்குகள் விளங்குகின்றன.

குறிப்பாக, அதிவேகமான பைக் பயணத்தை விரும்புவோரின் பிரதானமான தேர்வுகளாக கேடிஎம் பைக்குகள் உள்ளன. இதனாலேயே இந்தியாவில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் கேடிஎம் நிறுவனம் தொடர்ந்து ஈடுப்பாட்டுடன் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் 160 ட்யூக் மற்றும் ஆர்சி160 பைக்குகளை இந்திய சந்தையில் புதியதாக கேடிஎம் அறிமுகப்படுத்தியது.

இந்த பைக்குகளின் விலைகளும் வருகிற ஜூன் மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளன. முன்பு விற்பனையில் இருந்த 125சிசி கேடிஎம் பைக்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய 160சிசி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், கேடிஎம் ஆர்சி160 ஆனது நேரடியாக பிரபலமான யமஹா ஆர்15 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக அமைந்துள்ளது.

கேடிஎம் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் 160 ட்யூக், ஆர்சி 160, 200 ட்யூக், ஆர்சி 200, ட்யூக் 250, 250 அட்வென்சர், 390 ட்யூக், 390 ட்யூக் ஆர், 390 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் எஸ், 390 அட்வென்ச்சர் எக்ஸ், 390 அட்வென்ச்சர் ஆர் மற்றும் ஆர்சி 390 உள்ளிட்ட பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் பைக்குகளின் குறைந்தப்பட்ச விலை ஏற்கனவே ரூ.1.74 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இத்தனைக்கும் இந்த ரூ.1.74 லட்சம் ஆனது ஓர் 160சிசி பைக்கின் விலை ஆகும். அப்படியிருக்க, வருகிற ஜூன் மாதத்தில் இருந்து கேடிஎம் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட உள்ளன. பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்படும் டிரையம்ப் நிறுவனமும் வருகிற ஜூன் முதல் விலை அதிகரிப்பை ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, May 29, 2026, 6:02 [IST]
English summary
Ktm to increase the prices of its motorcycles starting from june 1 in india
மேலும்... #ktm #bike price hike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out