ஓசூர் TVS ஆலையில் தயாரிக்கப்படும் பைக்குகளை பயன்படுத்தும் யுகே மக்கள்! நம்மூர் விலையை விட டபுள் மடங்கு அதிகம்!

இந்தியாவில் உருவாக்கப்படும் பி.எம்.டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் யுகே சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.8.10 லட்சத்தில் யுகே சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மேட்-இன்-இந்தியா பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் சமீபத்திய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் எஃப்450 ஜிஎஸ் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டதை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக எஃப்450 ஜிஎஸ் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

made-in-india bmw f 450 gs for united kingdom market

இந்த பைக் தற்போது யுகே என சுருக்கமாக அழைக்கப்படும் யுனிடெட் கிங்டமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுகே சந்தையில் பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கின் விலை 6,990 பவுண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.8.10 லட்சம் ஆகும். ஆனால், இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வெறும் ரூ.4.70 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

இத்தனைக்கும் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்குகள் தான் யுகே சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதாவது, அங்கு இந்த காரை புக் செய்பவர்களுக்கு இந்தியாவில் இருந்து தான் இந்த பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு டெலிவிரி செய்யப்பட உள்ளன.

made-in-india bmw f 450 gs for united kingdom market

இன்னும் சொல்லப்போனால், இவ்வாறு இந்த பைக்கை ஏற்றுமதி செய்யும் பணிகளை ஏற்கனவே பிஎம்டபிள்யூ நிறுவனம் துவங்கிவிட்டது. அதன் மூலமாகவே யுகே-இல் இந்த பைக்கை டெஸ்ட் ரைடு செய்துப் பார்க்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஆலையில் இந்த பைக் உற்பத்தி செய்யப்படுவதற்கு காரணம், டிவிஎஸ் மோட்டாரும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனமும் கூட்டணியில் இருப்பது ஆகும்.

அதுமட்டுமின்றி, எஃப்450 ஜிஎஸ் பைக்கை டிவிஎஸ் நிறுவனத்தின் உதவியுடன் தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கியது. எஃப்450 ஜிஎஸ் பைக்கில் 420சிசி இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜினை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் வழங்குகிறது. அதிகப்பட்சமாக 48 பிஎச்பி மற்றும் 43 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மேலும், இந்த பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் ஸ்லிப்பர் & அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. அட்வென்ச்சர் வகையை சேர்ந்த பைக் என்பதால் கரடு முரடான பாதைகளிலும் எளிதாக கண்ட்ரோல் செய்வதற்காக வெறும் 178 கிலோவில் எடை குறைவானதாக உருவாக்கப்படும் பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கில் முன் சக்கரம் சற்று பெரியதாக 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

பள்ளம், மேடான வழித்தடங்களில் எளிதாக இயங்குவதற்காக இந்த பைக்கில் நீண்ட டிராவல் கொண்ட கயாபா சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படுகிறது. அதேநேரம், 6.5 இன்ச்சில் TFT டிஸ்பிளே, ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல், ABS புரோ, பல்வேறு ரைடிங் மோட்கள், என்ஜின் டிரேக் டார்க் கண்ட்ரோல் போன்ற மாடர்ன் வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கிற்கு மாற்றாக புதிய எஃப்450 ஜிஎஸ் பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் களமிறக்கியது. 350சிசி-க்கு மேல் என்ஜினை கொண்டிருப்பதால், இந்தியாவில் இந்த பைக்கிற்கான GST அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்தியாவை காட்டிலும் சுமார் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான விலையில் யுகே-இல் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

Article Published On: Tuesday, June 9, 2026, 23:24 [IST]
English summary
Made in india bmw f 450 gs adventure bikes for united kingdom market
மேலும்... #bmw motorrad #england
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out