வெறும் ரூ.1.15 லட்சத்தில் விற்கப்படும் பைக், அமெரிக்காவில் ரூ.2.87 லட்சம்... ஆனா இங்கே யாருமே கண்டுகுறது இல்ல!

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டபிள்யூ175 மோட்டார்சைக்கிளை அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, இந்த பைக் முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை போன்றதான ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகளுக்கு இந்தியா உள்பட உலகளவில் வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக, அமெரிக்க சந்தையானது பழமையான தோற்றம் கொண்ட பைக்குகளுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கக்கூடிய இடமாகும். இதனாலேயே, கவாஸாகி நிறுவனம் தனது டபிள்யூ175 மோட்டார்சைக்கிளை தைரியமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

made-in-india kawasaki w175 bike

ஏற்கனவே கூறியதுபோல், CBU முறையில் முழு பைக்காக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டு, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அங்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. இவ்வாறு, முழுவதுமாக உருவாக்கப்பட்ட கவாஸாகி டபிள்யூ175 பைக்குகள் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உலகில் இந்த கவாஸாகி பைக் இரு நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒன்று இந்தியாவில், மற்றொன்று இந்தோனிஷியாவில் ஆகும். இருப்பினும், இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா கவாஸாகி டபிள்யூ175 பைக்குகள் தான் அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்பட உள்ளன. இந்தியாவில் மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் (IKM) நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் டபிள்யூ175 பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

made-in-india kawasaki w175 bike

இந்தியாவின் விலை குறைவான கவாஸாகி பைக்காக விளங்கும் டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் வெறும் ரூ.1.15 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதுவே, அமெரிக்காவில் இதன் விலை 2,999 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் தற்போதைய மதிப்பு ரூ.2.87 லட்சம் ஆகும்.

கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் 177சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. செமி-டபுள் தொட்டில் ஃபிரேமில் உருவாக்கப்படும் டபிள்யூ175 பைக்கில் மிகவும் சவுகரியமான இருக்கை பொசிஷன் வழங்கப்படுகிறது. இதற்கேற்ப தரையில் இருந்து இருக்கையின் உயரமும் தாழ்வாக வழங்கப்படுகிறது.

மேலும், இந்த பைக்கின் ஸ்டைலான எக்ஸாஸ்ட் குழாயும் பார்க்கும் எவரொவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது ஆகும். சிங்கிள்-சேனல் ABS, 17-இன்ச் அலாய் சக்கரங்கள், கிளாசிக்கான வட்ட வடிவில் ஹலோஜன் ஹெட்லைட் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை இந்த பைக்கில் இடம்பெறும் மற்ற அம்சங்கள் ஆகும். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்காவில் ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனத்திற்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அங்கு ஏற்கனவே டபிள்யூ230 மற்றும் டபிள்யூ800 உள்ளிட்ட பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அங்கு ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகளுக்கு மார்க்கெட் உள்ளது என கூறினாலும், டபிள்யூ175 பைக் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

ஏனெனில், அமெரிக்காவில் சற்று விலைமிக்க வாகனங்களை வாங்கவே அங்குள்ள மக்கள் விருப்பம் காட்டுவர். டபிள்யூ175 பைக் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது போல், டபிள்யூ230 பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், அது ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா, யெஸ்டி பிராண்ட் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

Article Published On: Wednesday, June 3, 2026, 16:47 [IST]
English summary
Made in india kawasaki w175 bike launched in united states check price here
மேலும்... #kawasaki #america
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out