மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் பிராண்டின் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. புனே நகரை சேர்ந்த இ-மோட்டாராட் நிறுவனம் இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் பிரிமீயம் ரகத்திலான இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரியர்களின் கவரும் வகையில் இருக்கின்றன.

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் வரிசையில் City Edition, Track Edition மற்றும் Rallye Edition என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் ரூ.4.20 லட்சம் முதல் ரூ.7.60 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். அனைத்து விலைகளும் GST உட்பட நிர்ணயிக்கப்பட்ட ஆன்ரோடு விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்களின் டெலிவரி இந்த மாதத்தின் மத்தியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Benz Petronas E Bikes

இந்த வரிசையில் City Edition ஆரம்ப நிலை மாடலாக உள்ளது. இதன் விலை ரூ.4.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. Track Edition மாடலின் விலை ரூ.5.70 லட்சமாகவும், உயர்விலை வேரியண்ட்டான Rallye Edition மாடலின் விலை ரூ.7.60 லட்சமாகவும் உள்ளது.

மூன்று மாடல்களிலும் 250W திறன்கொண்ட மின் மோட்டார் பின்சக்கரத்திற்கு நேரடியாக பவரை வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. பயணத்திற்கு ஏற்ப Comfort, Sport மற்றும் Sport Plus என மூன்று ரைடிங் மோடுகளை தேர்வு செய்யலாம். அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ வேகம் வரை செல்லும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 100 கி.மீ வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read

வடிவமைப்பிலும் நவீன தொழில்நுட்பத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஹேண்டில்பாரில் 5.5 இன்ச் வண்ண டிஸ்ப்ளே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், 6061 அலுமினிய அலாய் ஃபிரேம் மற்றும் ஃபோர்க்ஸ், Tektro ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் Pirelli டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், ஸ்மார்ட் புளூடூத் ஹெல்மெட் மற்றும் சார்ஜரும் இந்த மின்சார சைக்கிளுடன் உடன் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் பொறுப்பை இ-மோட்டாராட் ஏற்றுள்ளது. விற்பனைக்கு பிந்தைய சேவைகளையும் இந்த நிறுவனமே கவனிக்கும்.

CONCEPT AMG GT XX

குர்கானில் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டூடியோ

எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகத்துடன் மற்றொரு முக்கிய நிகழ்வாக, இந்தியாவின் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டூடியோ குர்கானில் திறக்கப்பட்டுள்ளது. டெல்லி NCR பிராந்தியத்தில் உள்ள டிஎல்எஃப் ஒன் ஹரிசான் சென்டர் வணிக வளாகத்தில் இந்த புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. வழக்கமான கார் ஷோரூம்களைப் போல இல்லாமல், மெர்சடிஸ் பென்ஸ் பிராண்டை வேறு ஒரு கோணத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த ஸ்டூடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் உலகளாவிய Welcome Home என்ற புதிய அனுபத்தை தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இங்கு, கார்கள் மட்டுமின்றி கலை, வடிவமைப்பு, கைவினைத்திறன், உணவு மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Also Read

உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. கோபன்ஹேகன், லாஸ் ஏஞ்சல்ஸ், டோக்கியோ, சிங்கப்பூர், வார்சா, முனிச் மற்றும் புக்கரெஸ்ட் உள்ளிட்ட நகரங்களுடன் தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. உலகளவில் இதுபோன்ற ஸ்டூடியோ அமைந்துள்ள 14 நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

என்னென்ன வசதிகள்?

இந்த ஸ்டூடியோவில் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு அனுபவங்கள் தரும் வசதிகள் உள்ளன. இதில் Lavonne Café, Mercedes-AMG PETRONAS X adidas தயாரிப்புகள் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஓட்டிப் பார்க்கும் டெஸ்ட் டிரைவ் அனுபவம் ஆகியவை முக்கியமானதாக குறிப்பிடலாம். மேலும், இந்தியாவில் முதன்முறையாக CONCEPT AMG GT XX காரும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் எதிர்கால உயர் செயல்திறன் கொண்ட மின்சார வாகன தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கான்செப்ட் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

Article Published On: Saturday, September 5, 2026, 10:36 [IST]
English summary
Mercedes amg petronas e bikes launched india price features specs accessories service details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out