சூப்பர் வசதிகளுடன் வெளியான புதிய 125 சிசி பைக்.. விலை என்னனு தெரியுமா?

இத்தாலியைச் சேர்ந்த ரேஸிங் பைக் பிராண்டான மார்பிடெல்லி (Morbidelli) புதிய ப்ரீமியமான 125 சிசி பைக் ஒன்றை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பைக்குளை விற்பனை செய்து வரும் சீனாவைச் சேர்ந்த கீவே (Keeway) நிறுவனம் தான் இந்த மார்பிடெல்லியையும் வாங்கியிருக்கிறது. கீவேயின் கீழ் தான் தற்போது இந்த இத்தாலிய பைக் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தான் தற்போது N125V என்ற புதிய ப்ரீமியமான 125 பைக் மாடலை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மார்பிடெல்லி. A1 மற்றும் B196 வாகன உரிமம் வைத்திருப்பவர்களை மையப்படுத்தி இந்தப் புதிய பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது மார்பிடெல்லி. இந்தியாவைப் போல இல்லாமல் ஐரோப்பாவில் இன்ஜின் அளவைப் பொறுத்து வாகன ஓட்டுநர் உரிமமும் மாறுபடும்.

Morbidelli N125V

16 வயது நிரம்பியவர்கள் A1 வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். இந்த வகையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 125 சிசிக்கு மேலான பைக்குகளை ஓட்ட முடியாது. அதே போல் B196 என்பது கார்களை ஓட்டுவதற்கான உரிமம். ஆனால் 25 வயது நிரம்பி, 5 ஆண்டுகள் வரை இந்த உரிமத்தைக் கொண்டிருந்தால் அவர்கள் 125 சிசி வரையிலான இன்ஜின் கொண்ட பைக்குகளை ஓட்டலாம்.

எனவே தான் இந்த ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை மையப்படுத்தி புதிய N125V பைக்கை வெளியிட்டுள்ளது மார்பிடெல்லி. மேலும் இதனை பிரதானமாக ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்வதற்காக மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். முதற்கட்டமாக ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

Morbidelli N125V

125 சிசி பைக் தான் என்றாலும் ட்வின் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்த N125V. இந்த பைக்கில் 124.9 சிசி, V-ட்வின் லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 13.8 hp பவர் மற்றும் 10.9 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைவான அதிர்வுகளுடன், ஸ்மூத்தான டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் இந்த பைக்கை வடிவமைத்துள்ளது மார்பிடெல்லி.

125 சிசி பைக் தான் என்றாலும், அனைத்து வகைகளிலும் ப்ரீமியமான அம்சங்களையே இந்த பைக் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 99 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த N125V பைக்கிற்கு, முன்பக்கமும் பின்பக்கமும் 300 மிமீ மற்றும் 240 மிமீ டிஸ்க பிரேக்குகளுடன், டூயல் சேனல் ABS வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரைடரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த மேம்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சொகுசான பயணத்தை உறுதி செய்ய பைக்கின் முன்பக்கம் 41 மிமீ KYB USD ஃபோர்க் (120 மிமீ டிராவலுடன்) மற்றும் மோனோஷாக் (34.5 மிமீ டிராவலுடன்) சஸ்பென்ஷன் செட்டப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீட்டின் உயரம் 795 மிமீ ஆக உள்ளது. 165 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் மற்றும் 16 லிட்டர் எரிபொருள் டேங்கைக் கொண்டிருக்கும் இந்த பைக்கானது 185 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது. ஒரு 125 சிசி பைக்கிற்கு இது கூடுதலான எடை தான்.

LED விளக்குகள், ஸ்கல்ப்டட் ஃப்யூல் டேங்க், ஸ்டைலிஷான ஸ்போர்ட்டியான டிசைன் என அனைத்து வகையிலும் ப்ரீமியமாகவே காட்சியளிக்கிறது இந்த மார்பிடெல்லி N125V. நான்கு விதமான தனித்துவமான நிறங்களில் இந்த பைக் வெளியாகியிருக்கிறது. யமஹா MT-125, கேடிஎம் 125 டியூக், ஏப்ரிலியா டுவோனோ 125, ஹோண்டா CB125R மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலன் 125 ஆகிய ப்ரீமியம் 125 சிசி பைக்குகளுக்குப் போட்டியாக இந்த மார்பிடெல்லி N125V பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பார்வையில் இருந்து இந்த பைக்கைப் பார்க்கும் போது, பைக் மட்டும் தான் 125 சிசி, மற்ற எல்லா அம்சங்களுமே இந்தியாவில் ப்ரீமியமான சொகுசு பைக்குகளுக்கு இணையாக இருப்பதாகவே இருக்கிறது. மேற்கூறிய அம்சங்களுடன் இந்தியாவில் ஒரு பைக் வெளியாகிறதென்றால், குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் பெர்ஃபாமன்ஸ் பைக் என்றால் 150 சிசியில் இருந்து தான் தொடங்குகிறது. அவற்றையுமே இந்த 125 சிசி பைக்குடன் நாம் ஒப்பிட முடியாது. எனவே இந்த பைக் எந்த வகையிலும் இந்தியாவில் வெளியாகும் என நாம் எதிர்பார்க்க முடியாது என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனினும், முன்பு இருந்ததை விட சற்று கூடுதல் அம்சங்களுடன் கூடிய 125 சிசி பைக்குகளை இந்தியாவில் நாம் இனி எதிர்பார்க்கலாம்.

Article Published On: Thursday, April 30, 2026, 18:45 [IST]
English summary
Morbidelli n125v bike debuted with premium features check all details here
மேலும்... #125 cc model #bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+