நாளை மறுதினம் அறிமுகமாகிறது புதிய பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 மாடல்கள்... என்னென்ன மாற்றங்கள்?

பஜாஜ் பல்சர் வரிசையில் விற்பனையாகும் பைக் மாடல்களுக்கு இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது பிரிவினரிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. மிக நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பல்சர் பைக் மாடல்கள் கச்சிதமாக பூர்த்தி செய்து வருகின்றன. இந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு பல்சர் 125 மற்றும் 150 மாடல்கள் புதிய தலைமுறை மாடல்களாக அதிக மாற்றங்களுடன் வர இருக்கின்றன.

கடந்த 12ந் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு புதிய பல்சர் பைக் மாடல்களும் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 24) விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், அதிகாரப்பூர்வ டீசரும் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த புதிய மாடல்கள் டீலர்களுக்கு வந்துள்ளது குறித்தும் சமூக வலைத்தளங்களில் படங்களும், தகவல்களும் அறிமுகம் செய்வதற்கு முன்னரே பரபரக்கின்றன.

150

இந்த புதிய பல்சர் பைக் மாடல்களில் இந்த முறை டிசைன் மாற்றங்கள் மட்டுமின்றி, புதிய பிளாட்ஃபார்ம், புதிய ஃப்ரேம், மோனோஷாக் சஸ்பென்ஷன், புதிய இன்ஜின் மற்றும் நவீன வசதிகள் என பல முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனால் தற்போதைய பல்சர் 125 மற்றும் 150 மாடல்களுடன் ஒப்பிடும்போது புதிய பைக்குகள் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

புதிய பல்சர் 125

புதிய பல்சர் 125-ன் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய எல்இடி ஹெட்லைட், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், புதிய சைடு பேனல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பின்புற பகுதி ஆகியவை முக்கியமானதாக இருக்கும். அதே நேரத்தில், வழக்கமான பல்சர் டிசைன் அடையாளங்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

125

தற்போதைய இரட்டை ஷாக் அப்சார்பர்களுக்கு பதிலாக பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட உள்ளது. தற்போதைய மாடலில் டபுள் க்ராடில் ஃப்ரேம் உள்ள நிலையில், புதிய மாடலில் சிங்கிள் க்ராடில் சேஸீ பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய 125சிசி எஞ்சின் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 12 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க்கையும் வழங்கும் வகையில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை மறுதினம் உண்மையான விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Also Read

புதிய பல்சர் 125 பைக்கில் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருக்கும். டாப் வேரியண்ட்டில் 5 இன்ச் TFT டிஸ்ப்ளே கொடுக்கப்படும் என தெரிகிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், போன் அழைப்புகள் மற்றும் SMS அலர்ட்டுகள் போன்ற வசதிகள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வேரியண்ட்களில் கலர் LCD கன்சோல் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய பல்சர் 150

புதிய பல்சர் 125 மாடலில் இருக்கும் அதுபோன்ற பெரிய மாற்றங்கள் புதிய பல்சர் 150 பைக்கிலும் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய எல்இடி ஹெட்லைட், புதிய டிசைனில் பெட்ரோல் டேங்க் மற்றும் பின்புற டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெறும். சிங்கிள் சீட் மற்றும் ஸ்பிளிட் சீட் என இரு வகையான தேர்வுகளும் கிடைக்கலாம்.

புதிய பல்சர் 150 சிசி மாடலில் மேம்படுத்தப்பட்ட புதிய ஆயில் கூல் சிஸ்டம் இடம்பெறுவது ஸ்பை படங்களின் மூலமாக தெரியவந்துள்ள முக்கிய தகவலாக இருக்கிறது. இதன் மூலம் தற்போதைய மாடலைவிட எஞ்சின் குளிரூட்டும் திறன் மேம்பட வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் 14 பிஎஸ் பவரை வழங்க வல்லதாக இருக்கும். 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் தொடரும் என கூறப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை?

புதிய பல்சர் 125 மற்றும் 150 பைக்குகளின் அதிகாரப்பூர்வ விலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நாளை மறுதினம் அறிவிக்க உள்ளது. தற்போதைய மாடல்களைவிட புதிய தலைமுறை பைக்குகளின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். தற்போதைய தகவல்களின் அடிப்படையில், புதிய பல்சர் 125 பைக் ரூ.90,000 ஆரம்ப விலையில் இருந்தும், பல்சர் 150 பைக் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் இடையிலான விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, August 22, 2026, 18:29 [IST]
English summary
New bajaj pulsar 125 150 launch august 24 2026
மேலும்... #bajaj pulsar #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out