ஏப்ரல் 23ஆம் தேதி ஓட்டு போடும் நாளில் விற்பனைக்கு வரும் இரு புதிய பைக்குகள்! அவ்வளவு நல்ல நாளா அது...?

புதிய 2026-27ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் புதியதாக இரு மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த இரு பைக்குகளும் சரியாக தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ள ஏப்ரல் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த இரு புதிய பைக்குகளும் வெவ்வேறான பிராண்ட்களில் இருந்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இதில் ஒரு பைக்கிற்கு இன்று (ஏப்ரல் 19) முதல் முன்பதிவுகள் (Bookings) அறிமுகத்திற்கு முன்னதாகவே துவங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதினாலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இரு புதிய மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

new bike launches on april 23

பி.எம்.டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (BMW F 450 GS): இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் 'ஜிஎஸ்' மோட்டார்சைக்கிள்கள் வரிசையை புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக் மூலம் விரிவுப்படுத்துகிறது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் தான் ஏப்ரல் 19 முதல் துவங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் பைக்கான இது, விற்பனை நிறுத்தப்பட்ட முந்தைய பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் இடத்தை நிரப்பும் பொருட்டு கொண்டுவரப்படுகிறது. புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 420சிசி, டபுள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 48 பிஎச்பி மற்றும் 43 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த பைக்கின் எடை 178 கிலோ மட்டுமே ஆகும். பைக்கின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள குவாட்-எல்இடி டிஆர்எல்-கள் இதன் முக்கிய சிறப்பம்சம் ஆகும். வெளிநாடுகளில் இந்த பைக் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் சில வேரியண்ட்கள் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

2026 யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் (Yezdi Scrambler): மேற்கூறப்பட்ட பிஎம்டபிள்யூ பைக்கை போன்று இது முற்றிலும் புதிய பைக் கிடையாது. ஏற்கனவே விற்பனையில் உள்ள யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் அப்கிரேட் வெர்சன் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது (இன்னும் உறுதி செய்யப்படவில்லை). புதிய ஸ்க்ராம்ப்ளரில் முக்கிய அப்கிரேடாக பைக்கின் எடை குறைக்கப்படுகிறது.

new bike launches on april 23

தற்சமயம் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரின் எடை 182 கிலோவாக இருக்கும் நிலையில், புதிய மாடலின் எடை எப்படியிருந்தாலும் 10 கிலோ வரையில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பைக்கின் முன்பக்க விண்ட்ஸ்கிரீன் மாற்றப்படலாம். மேலும், புதிய கலர் ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்படலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த யெஸ்டி பைக்கின் தோற்றம் பெரிய அளவில் திருத்தியமைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

தோற்றத்தில் மட்டுமின்றி, பைக்கின் என்ஜின் உள்பட மெக்கானிக்கல் பாகங்களிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். அதன் மூலமாக, ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஸ்க்ராம் 440 (Scram 440) பைக்கிற்கு விற்பனையில் மிகுந்த சவாலாக யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் விளங்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பைக் மார்க்கெட்டிற்கு புதிய வருகைகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த 2026ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து பல புதிய பைக் அறிமுகங்களை பார்த்துள்ளோம். அந்த வகையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் இரு புதிய பைக்குகள் விற்பனைக்கு வருவது, அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவில் பைக்குகள் விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Sunday, April 19, 2026, 23:59 [IST]
English summary
New bike launches on april 23 tamilnadu legislative assembly election date in bmw and yezdi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+