51 வருடங்களுக்கு பின் இந்தியா வந்த பைக் பிராண்டின் 2வது பைக்! ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை பிடிக்க முயற்சி!

கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தில் இருந்து நேற்று, ஏப்ரல் 23ஆம் தேதி இரு ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, யெஸ்டி (Yezdi) பிராண்டில் இருந்து யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர். மற்றொன்று, பிஎஸ்ஏ (BSA) பிராண்டில் இருந்து ஸ்க்ராம்ப்ளர் 650 (Scrambler 650) ஆகும். இதில், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலின் அப்கிரேட் வெர்சன் ஆகும். அதுவே, பிஎஸ்ஏ ஸ்க்ராம்ப்ளர் 650 ஆனது முற்றிலும் புதிய பைக் ஆகும்.

சில வருடங்களுக்கு முன் பிஎஸ்ஏ பிராண்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவந்த கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதில் இதுநாள் வரையில் கோல்டு ஸ்டார் 650 (Gold Star 650) பைக்கை மட்டுமே விற்பனை செய்துவந்த நிலையில், இரண்டாவது பைக்காக ஸ்க்ராம்ப்ளர் 650-ஐ களமிறக்கியுள்ளது. ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளை போன்று பழமையான ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் இந்த பைக்கில் பவர்ஃபுல்லான 650சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

new bsa scrambler 650 vs royal enfield bear 650

ராயல் என்ஃபீல்டு என்றவுடன் தான் நினைவிற்கு வருகிறது... ராயல் என்ஃபீல்டின் பியர் 650 (Bear 650) பைக் இந்த புதிய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளுக்கு விற்பனையில் நேரடி போட்டியாக இருக்கும். அந்த அளவிற்கு, ராயல் என்ஃபீல்டின் 650சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கான பியர் 650-ஐ போட்டியாக கொண்டு புதிய பிஎஸ்ஏ ஸ்க்ராம்ப்ளர் 650 உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய பைக் ஆனது ஓர் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பைக் ஆகும்; அதுவே ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆனது 2-சிலிண்டர் என்ஜின் பைக் ஆகும். இருப்பினும், என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் இந்த இரு பைக்குகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. புதிய பிஎஸ்ஏ ஸ்க்ராம்ப்ளர் 650 பைக்கில் 652சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், DOHC, 4-வால்வு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

new bsa scrambler 650 vs royal enfield bear 650

பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பொருத்தப்படும் அதே 652சிசி என்ஜினான இது அதிகப்பட்சமாக 44.5 பிஎச்பி மற்றும் 55 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. மறுப்பக்கம், ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கில் 648சிசி, இன்லைன், 2-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், SOHC என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 46.75 பிஎச்பி மற்றும் 56.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. 2-சிலிண்டர் என்ஜின் என்பதால் இயக்க ஆற்றல் மிகவும் சிறிது அதிகமாக கிடைக்கிறது. இந்த பைக்கின் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படும் நிலையில், புதிய பிஎஸ்ஏ ஸ்க்ராம்ப்ளர் 650 பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

விலை: புதிய யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் 650 பைக் ஆனது மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெவென் பிளாக், விக்டர் மஞ்சள், தண்டர் கிரே என்பன அவை ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.3,24,950 முதல் ரூ.3,40,950 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆனது போர்ட்வால்க் வெள்ளை, பெட்ரோல் பச்சை, வைல்ட் ஹனி, கோல்டன் ஷேடோவ், 249 என ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறங்களில் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை ரூ.3.75 லட்சம் - ரூ.3.98 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பியர் 650 பைக்கின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், ராயல் என்ஃபீல்டு பிராண்டில் இருந்து விற்பனையாகுவதால் கணிசமான மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் யெஸ்டி பிராண்டில் புதியதாக ஸ்க்ராம்ப்ளர் 650 பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. விலை, என்ஜின் உள்ளிட்டவை ஒரே மாதிரியாக இருந்தாலும், இந்த இரு பைக்குகளில் ஒன்றை வாங்க நினைப்பவர்கள் ராயல் என்ஃபீல்டின் பரந்த சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் பக்கமே செல்வர் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Friday, April 24, 2026, 16:34 [IST]
English summary
New bsa scrambler 650 vs royal enfield bear 650 bike comparison
மேலும்... #BSA #royal enfield #bike comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+