ஏர்பேக் எல்லாம் இருக்கா! வெறும் ஒன்னரை லட்சம்தான் அதிகம்! இந்திய மார்க்கெட்டை மிரள விட்ட ஹோண்டாவின் புது பைக்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா கோல்டு விங் (Honda Gold Wing). இதன் 2026 மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
இது லக்ஸரி டூரிங் பைக் ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்றாக இது உள்ளது. 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கின் விலை 44.30 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் ஹோண்டா கோல்டு விங் பைக்கின் முந்தைய மாடலின் விலை 42.82 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்தது. அதாவது புதிய மாடலின் விலை 1.48 லட்ச ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா கோல்டு விங் பைக்கின் முந்தைய மாடலில் பார்டெக்ஸ் ரெட் மெட்டாலிக் என்ற கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கில் அந்த கலர் ஆப்ஷன் இல்லை. அதற்கு பதிலாக புதிய பிளாக் கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கின் இன்ஜினில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் வழங்கப்பட்டு வந்த அதே 1,833 சிசி லிக்யூட் கூல்டு 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், 2026 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 126 ஹெச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கில் ரிவர்ஸ் கியர் மற்றும் வாக்கிங்-ஸ்பீடு மோட் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 400 கிலோ எடை கொண்ட 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கை குறைவான வேகத்தில் எளிமையாக இயக்க இவை உதவி செய்கின்றன. அத்துடன் 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கில் ட்யூயல் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்க்ரீன் ஆகிய அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, சவுண்ட் சிஸ்டம், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் போன்ற வசதிகளும், 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பிற்காக ஏர்பேக் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏர்பேக் வசதியை கொண்டுள்ள ஒரே பைக் இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பைக்கில் அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு 2026 ஹோண்டா கோல்டு விங் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் அதிநவீன வசதிகள் எல்லாம் 2026 ஹோண்டா கோல்டு விங் பைக்கின் ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications