ரூ.2.01 லட்சத்தில் ஸ்பெஷலான ஜாவா 42 பைக் ... 6 கலக்கல் நிறங்களில் அறிமுகம்!!

ரெட்ரோ தோற்றத்துடன் நவீன அம்சங்களை வழங்கும் ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கு புதிய அவதாரம் கிடைத்துள்ளது. க்ளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் 2026ம் ஆண்டுக்கான ஸ்பெஷல் எடிசன் ஜாவா 42 எஃப்ஜே ஆல் ஸ்டார்ஸ் என்ற பெயரில் புதிய எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் ஆறு விதமான புதிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலானது ரூ.2,01,942 என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும்.

புதிய வண்ணத் தேர்வுகள்

ஜாவா 42 பைக்கின் புதிய ஆல் ஸ்டார்ஸ் வரிசையில் சிவப்பு, பச்சை ஆகியவை ரூ.2,01,942 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கின்றன. இதற்கு அடுத்த நிலையில் நீலம், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு- சிவப்பு மற்றும் மேட் ஃபினிஷ் கொண்ட கருப்பு ஆகிய நிறங்கள் ரூ.2,07,942 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Jawa 42 FJ All Stars

இதன் விலை உயர்ந்த தேர்வாக ஆல் ஸ்டார்ஸ் க்ரோம் மாடலுக்கு ரூ.2,15,942 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய வண்ணத் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது புதிய வரிசையின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, டாப் வேரியண்ட்டின் விலை ரூ.10,992 வரை உயர்ந்துள்ளது.

Also Read

ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்துவமான வடிவமைப்பு தாத்பரியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் சில்வர் ஃபெண்டர்கள் மற்றும் டூயல்-டோன் டேங்க் இடம்பெறுகிறது. அரோரா க்ரீன் என்ற பச்சை நிறம் பைக்கிற்கு ராணுவ வாகனம் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு நிறங்களில் சிவப்பு அல்லது முழுமையான கருப்பு ட்ரீட்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. க்ரோம் பதிப்பில் பல முக்கிய பாகங்கள் க்ரோம் பூச்சு ஈர்க்கும் அம்சமாக உள்ளது.

எஞ்சினில் மாற்றம் இல்லை

புதிய வண்ணத் தேர்வுகள் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசனின் முக்கிய அம்சமாக உள்ளது. எஞ்சின் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் தொடர்ந்து சிங்கிள் சிலிண்டருடன் கூடிய 334cc, லிக்யூட் கூல்டு, DOHC, எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 28.77 பிஎச்பி பவரையும் 29.62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இடம்பெற்றுள்ளது.

Also Read

முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 5 ஸ்டெப் பிரீலோடு அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் 320மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பாதுகாப்பும் உள்ளது.

மேலும், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லைட் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் தொடர்கின்றன. தரையிலிருந்து இதன் இருக்கை உயரம் 790மிமீ என்பதுடன், 178மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

தோற்றம் மற்றும் வண்ணத் தேர்வுகள் மூலமாக ஜாவா 42 எஃப்.ஜே மாடலை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவரும் முயற்சியாக இந்த ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் புதிய ஜாவா 42 வாங்க திட்டமிடுவோருக்கு இந்த சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Article Published On: Friday, August 28, 2026, 9:24 [IST]
English summary
New jawa 42 fj all stars launched india six new colours price features
மேலும்... #new launches #jawa motorcycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out