அதே பழைய விலையில் புதிய கவாஸாகி பைக் அறிமுகம்! விலையை உயர்த்தாமல் இருந்ததற்கு பெரிய மனசு வேணும்!

கவாஸாகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக KLX230 S மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் KLX230 மற்றும் சாலையில் ஓட்ட அனுமதி இல்லாத KLX230R S பைக்குகளுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கை காட்டிலும் குறைவான உயரத்துடன் இந்த கவாஸாகி பைக்கை வாங்க விரும்புபவர்களுக்காக புதிய KLX230 S அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக KLX230 பைக்குகளின் வரிசையை கவாஸாகி நிறுவனம் இவ்வாறு விரிவுப்படுத்தி வருகிறது. இந்த வகையில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள KLX230 S பைக்கின் ஐந்து முக்கிய சிறப்பம்சங்களை பற்றிய விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kawasaki klx230 s motorcycle specifications

விலை
புதிய கவாஸாகி KLX230 S பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே விலையில்தான், ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.5,500 என்கிற டோக்கன் தொகை உடன் புதிய KLX230 S பைக்கிற்கான முன்பதிவுகள் நடைபெற்றுவரும் நிலையில், டெலிவிரிகள் செப்டம்பர் மாத மத்தியில் துவங்கப்பட உள்ளன.

என்ஜின்
ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கில் பொருத்தப்படும் அதே 233சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் புதிய KLX230 S பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,800 ஆர்பிஎம் வேகத்தில் 19 எச்பி மற்றும் 6,200 ஆர்பிஎம் வேகத்தில் 19 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

kawasaki klx230 s motorcycle specifications

சஸ்பென்ஷன்
புதிய KLX230 S பைக்கில் 160மிமீ டிராவல் உடன் 37மிமீ-இல் தலைக்கீழான டெலெஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், 163மிமீ டிராவல் உடன் அட்ஜெஸ் செய்யக்கூடிய ப்ரீலோடு வசதி உடன் யுனி-ட்ராக் மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கின் சஸ்பென்ஷன் டிராவல்களை காட்டிலும், இதன் சஸ்பென்ஷன் டிராவல்கள் சிறியதாகும். தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரத்தை குறைவாக அமைப்பதற்காக இவ்வாறு சஸ்பென்ஷன் டிராவல்களின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

தரையில் இருந்து ரைடர் இருக்கை உயரம்
மேற்கூறப்பட்ட காரணத்தினால், புதிய KLX230 S பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரம் ஆனது 830மிமீ ஆக உள்ளது. இது ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கின் ரைடர் இருக்கையின் உயரத்தை விட சுமார் 50மிமீ குறைவாகும்.

கிரவுண்ட் க்ளியரென்ஸ்
அதேபோல், கிரவுண்ட் க்ளியரென்ஸ் எனப்படும் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரமும் ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கை காட்டிலும் இதில் 35மிமீ தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கில் 255மிமீ-இல் கிரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்படும் நிலையில், புதிய KLX230 S பைக்கில் 220மிமீ-இல் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி, ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கை போல தான் புதிய KLX230 S பைக்கிலும் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கவாஸாகி KLX230 S மற்றும் ஸ்டாண்டர்ட் KLX230 பைக்குகள் மெக்கானிக்கலாக ஒரே மாதிரியானவை. அதே என்ஜின், டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ், சக்கரங்கள், டயர்களை தான் ஒன்றோடு ஒன்று பரிமாறிக் கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால், LED ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய சிங்கிள்-சேனல் ABS உள்ளிட்டவை கூட இரண்டிலும் கிடைக்கும்.

ஸ்டாண்டர்ட் KLX230 உடன் ஒப்பிடுகையில் புதிய KLX230 S வேறுப்படும் முக்கிய இடம் என்று பார்த்தால், அது தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரம் ஆகும். ஏனெனில், உயரம் குறைவானவர்களுக்காகவே பிரத்யேகமாக KLX230 S உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதன் காரணமாக KLX230 S பைக்கில் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி சற்று தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.

Article Published On: Friday, June 26, 2026, 23:59 [IST]
English summary
New kawasaki klx230 s motorcycle five important specifications
மேலும்... #kawasaki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out