ஓலா பைக்கின் அதே விலையில் கிடைக்கும் இரு எலெக்ட்ரிக் பைக்குகள்! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக ரோர் எவோ (Rorr Evo) என்கிற எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் பைக்குகள் இல்லாததால், ரோர் எவோ அறிமுகத்தின் மீது மக்கள் மத்தியில் பலத்த கவனம் ஏற்பட்டுள்ளது.
ரோர் எவோ ஆனது ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய பைக்காக இருப்பினும், இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த ரோர் எலெக்ட்ரிக் பைக்குகளின் அதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதே ஆகும். இருப்பினும், புதிய ரோர் எவோவுக்காக புதிய டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரிவோல்ட் (Revolt) நிறுவனத்தின் ஆர்வி400 பி.ஆர்.இசட் (RV400 BRZ) மற்றும் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் ரோட்ஸ்டர் எக்ஸ்+ (Roadster X+) எலெக்ட்ரிக் பைக்குகள் போட்டியாக விளங்குகின்றன.

எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப்: எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து கிடைக்கும் ஆற்றல் மற்றும் டாப்-ஸ்பீடு உள்ளிட்டவற்றில் எல்லாம் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ முன்னிலை வகிக்கிறது. ஏனெனில், இந்த ஓலா பைக்கில் 11 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. ரிவோல்ட் ஆர்வி400 பிஆர்இசட் பைக்கில் 4.1 கிலோவாட்ஸ் மோட்டார் வழங்கப்படுகிறது.
| Specification | Oben Rorr Evo | Revolt RV400 BRZ | Ola Roadster X+ 4.5kWh |
| Peak Motor Output | 9kW | 4.1kW | 11kW |
| Rated Torque | 250Nm | 180Nm | 58Nm |
| Claimed Top Speed | 110kph | 85kph | 126kph |
| Battery Capacity | 3.4kWh | 3.24kWh | 4.5kWh |
| Fast-Charging Time (0-80%) | 90 mins | 80 mins | 5.9 hrs |
| IDC Range | 180km | 150km | 252km |
இவை இரண்டிற்கும் மத்தியில் புதிய ஓபென் ரோர் எவோ நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த பைக்கில் 9 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், டார்க் திறனில் ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கையே மிஞ்சும் அளவிற்கு சுமார் 250 என்.எம் வரையிலான டார்க் திறனை வழங்கக்கூடியதாக ரோர் எவோ உருவாக்கப்பட்டுள்ளது.

அளவு & எடை: புதிய ரோர் எவோவில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை ஓபென் நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால், மற்ற ரிவோல்ட் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் பைக்குகளை காட்டிலும் ரோர் எவோ நீளமானதாக உள்ளது; அமர்வதற்கும் அதிக இடவசதி கிடைக்கிறது. அதேநேரம், தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கையின் உயரமும் சற்று குறைவாக உள்ளதால், பைக்கை பேலன்ஸ் செய்வது எளிதாக இருக்கும்.
| Specification | Oben Rorr Evo | Revolt RV400 BRZ | Ola Roadster X+ 4.5kWh |
| Wheelbase | 1433mm | NA | 1301mm |
| Seat Height | 780mm | 815mm | 777mm |
| Ground Clearance | 200mm | 200mm | 180mm |
| Kerb Weight | 140kg | 115kg | 130.7kg |
ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் ரோர் எவோவை காட்டிலும் 3மிமீ குறைவான உயரத்தில் ரைடர் இருக்கை வழங்கப்படுகிறது என்றாலும், அது இரண்டிற்கும் இடையே பெரியதாக வித்தியாசமாக தெரியாது. கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரமானது மூன்றிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. எடையை பொறுத்தவரையில், மற்ற இரு பைக்குகளை காட்டிலும் எடைமிக்கதாக புதிய ரோர் எவோ உருவாக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் & பிரேக்: முன்பக்க சஸ்பென்ஷனுக்கு ரோர் எவோ மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்குகளில் டெலெஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்படுகிறது. ரிவோல்ட் பைக்கில் மட்டும் ஸ்டைலான யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்படுகிறது. பின்பக்க சஸ்பென்ஷனுக்கு ரோர் எவோ மற்றும் ஆர்வி400 பிஆர்இசட் பைக்குகளில் மோனோஷாக்கும், ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் ட்வின்-ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன.
| Chassis & Hardware | Oben Rorr Evo | Revolt RV400 BRZ | Ola Roadster X+ 4.5kWh |
| Suspension (F/R) | Telescopic fork / Monoshock | USD fork / Monoshock | Telescopic fork / Twin-shock absorbers |
| Brakes (F/R) | 270mm Disc / 270mm Disc | 240mm Disc / 240mm Disc | Disc / Drum |
| Tyres | 110/70-17 (F), 130/70-17 (R) | 90/80-17 (F), 110/80-17 (R) | 80/100-R18 (F), 110/80-R17 (R) |
பிரேக்கை பொறுத்தவரையில், இந்த மூன்று பைக்குகளிலும் டிஸ்க் பிரேக்குகளை பெறலாம். ஆனால், ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் மட்டும் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. புதிய ரோர் எவோ மற்றும் ஆர்வி400 பிஆர்இசட் பைக்குகளில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டாலும், ரோர் எவோவில் சற்று பெரிய அளவிலான டிஸ்க்குகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழிற்நுட்ப வசதிகள்: இந்த மூன்று எலெக்ட்ரிக் பைக்குகளிலும் எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்கிற அடிப்படையான 3 ரைடு மோட்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் மட்டும் அதன் புதிய ரோர் எவோ பைக்கில் 4வது ரைடு மோட் ஆக ஸ்மார்ட் ஐ.க்யூ -ஐ வழங்கியுள்ளது. மேலும், மற்ற இரு பைக்குகளில் எல்சிடி திரை வழங்கப்படும் நிலையில், ரோர் எவோவில் 5-இன்ச் டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் மூன்றையும் ரிவர்ஸிலும் இயக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் ஆராய்ந்து பார்த்ததில், ரிவோல்ட் ஆர்வி400 பிஆர்இசட் எலெக்ட்ரிக் பைக் மட்டும் சற்று மதிப்பு குறைந்ததாக உள்ளது. ஏனெனில் இந்த பைக்கில் 4.1 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் மட்டுமே பொருத்தப்படுகிறது. ஆனால், மற்ற இரண்டை காட்டிலும் இதன் விலை அதிகமாக உள்ளது. ஓபென் ரோர் எவோ மற்றும் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களும், ஒரே அளவிலான விலையில் கிடைப்பதால் இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications