ராயல் என்ஃபீல்டில் விலையுயர்ந்த பைக்கை வாங்குவதை விட இது சிறந்ததா? புதிய புல்லட் பைக் மீது எல்லாரது பார்வையும்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து புதியதாக புல்லட் 650 மோட்டார்சைக்கிள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டில் இருந்து பல்வேறு விதமான 650சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் ஒன்றாக புதிய புல்லட் 650 இணைந்துள்ளது. இந்த வகையில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு 650சிசி பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தோற்றம்: புதிய புல்லட் 650 பைக்கில் பெட்ரோல் டேங்கில் பிரத்யேகமாக கையால் மேற்கொள்ளப்பட்ட வேலைப்பாடுகள் கிடைக்கும். இந்த புதிய பைக்கில் பின்பக்கத்தில் சதுர வடிவில் பெட்டகமான ஃபெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே, சூப்பர் மீட்டியோர் 650 ஆனது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த 650சிசி பைக் ஆகும். அதற்கேற்ப பளபளப்பான, தாழ்வான க்ரூஸர் ரக பைக்காக இது உருவாக்கப்படுகிறது.

new royal enfield bullet 650

இந்த இரு பைக்குகளிலும் ஹெட்லைட்டை சுற்றிலும் க்ரோம்-ஆல் ஆன வளையம் வழங்கப்படுகிறது. புல்லட் பைக்கில் லைன்கள் தெளிவானவைகளாக வழங்கப்பட்டுள்ளன. க்ரோம்கள் குறைவாக உள்ளது. மொத்தத்தில் அலங்காரங்கள் குறைவாக, நேர்த்தியான தோற்றத்தில் புதிய புல்லட் 650 உள்ளது. இதனால், ஓர் பக்காவான புல்லட் பைக்கை வாங்க விரும்புபவர்களுக்கு புதிய புல்லட் 650 ஏற்றதாக விளங்குகிறது.

இருக்கை அமைப்பு: சூப்பர் மீட்டியோர் 650 ஆனது தாழ்வான உடலமைப்பை கொண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கை ஓட்டுபவர் தனது கால்களை நன்கு முன்னோக்கி வைத்து பைக்கை ஓட்ட முடிவதால், இது நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மறுப்பக்கம், புல்லட் 650 பைக்கில் ஒரே துண்டாக, படிக்கட்டு டிசைனில் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் இருக்கை செட்-அப்பில் தடிமனாக பேடிங் செய்யப்பட்டுள்ளது.

royal enfield super meteor 650

ரைடிங் பொசிஷனை பொறுத்தவரையில், சூப்பர் மீட்டியோர் 650 பைக் அளவிற்கு இல்லையென்றாலும் அசவுகரியம் ஏற்படாத வகையில் ரைடிங் பொசிஷன் புல்லட் 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப வலிமையான பின்பக்க சஸ்பென்ஷன் புல்லட் 650 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹேண்டில்பார் பொசிஷனும் கிளாசிக் 650 பைக்கிற்கு இணையாக புல்லட் 650-இல் சிறப்பாக உள்ளது. இதனால், தொடர்ந்து 2 மணிநேரத்திற்கும் மேல் பயணம் செய்தாலும் அசவுகரியம் இருக்காது.

என்ஜின் & மெக்கானிக்கல் பாகங்கள்: இந்த இரு பைக்குகளிலும் வழக்கமான 648சிசி ஏர்/ஆயில்-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 47 எச்பி மற்றும் 5,650 ஆர்பிஎம்-இல் 52.3 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இவற்றுடன் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச்சும் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு புதிய புல்லட் 650 பைக்கில் முன்பக்கத்தில் 120மிமீ டிராவல் உடன் வழக்கமான ஷோவா டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 90மிமீ டிராவல் உடன் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதுவே, சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் 43மிமீ-இல் பிரீமியம் தரத்திலான தலைக்கீழான ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், ட்வின்-ஷாக் அப்சார்பர்கள் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன.

விலை: கெனான் பிளாக் மற்றும் பேட்டில்ஷிப் நீலம் என்கிற இரு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புல்லட் 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.65 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. வேரியண்ட்டை பொறுத்து மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சற்று அதிகமாக ரூ.4.03 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்குகளுக்கே உண்டான பழமைத்துவத்தை விரும்புபவராக இருந்தால், புதிய புல்லட் 650 பைக்கை தாராளமாக வாங்கலாம். ரைடிங் பொசிஷன் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப்பை எல்லாம் வைத்து பார்த்தால், இது தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதுவே, சூப்பர் மீட்டியோர் 650 ஆனது அன்றாட சிட்டி பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, அதன் தாழ்வான மற்றும் ரிலாக்சான ரைடிங் பொசிஷனால் நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

Article Published On: Saturday, May 30, 2026, 20:35 [IST]
English summary
New royal enfield bullet 650 vs super meteor 650 check full bike comparison here
மேலும்... #royal enfield #bike comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out