இன்று வெளியாகும் ராயல் என்ஃபீல்டு பைக் பார்க்க எப்படி இருக்கும்? அறிமுகத்திற்கு முன் கசிந்த தகவல்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய குரில்லா 450 (Guerrilla 450) மோட்டார்சைக்கிளை இன்று (மார்ச் 27) மாலை அறிமுகம் செய்ய உள்ளது. விலைகள் அறிவிக்கப்பட்டு பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், புதிய 2026 குரில்லா 450 பைக்கில் என்னென்ன மாதிரியான புதிய அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் கடந்த சில வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. அதன்படி இந்த முறை புதிய அப்கிரேட் செய்யப்பட்ட குரில்லா 450 பைக்கை மார்க்கெட்டில் களமிறக்க ராயல் என்ஃபீல்டு தயாராகி வருகிறது.

முதன்முதலாக 2024 ஜூலை மாதத்தில் குரில்லா 450 அறிமுகம் செய்யப்பட்டது. மார்க்கெட்டில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக்கின் மற்றொரு வெர்சனாக குரில்லா 450 அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு 1.5 வருடங்களுக்கு மேலாகி விட்டதாலும், விற்பனை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருவதாலும் குரில்லா 450 பைக்கை அப்கிரேட் செய்ய ராயல் என்ஃபீல்டு முடிவெடுத்துள்ளது.
ரைடிங் அனுபவத்தில் மாற்றம்: புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அப்கிரேட்களுள் ஒன்று, பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றப்படும் என்பதாகும். ஏனெனில், இந்த பைக்கில் பள்ளம், மேடான சாலைகளில் செல்லும்போது பயண சவுகரியம் சிறப்பாக இல்லையென சில கஸ்டமர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், முன்பக்க சஸ்பென்ஷனையும், முன்பக்க பிரேக் செட்-அப்பையும் கூட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது. முன்பக்க பிரேக் செட்-அப்பில் குறைந்தப்பட்சம் டிஸ்க் பேடின் அளவு ஆவது மாற்றப்படலாம். இது ஷார்ப்பான பிரேக்கிற்கு வழிவகுக்கும். இவற்றுடன், எளிமையான ஹேண்ட்லிங்கிற்காக ஹேண்டில்பார் செட்-அப்பும் அப்டேட் செய்யப்படலாம்.
சாலையில் கூடுதல் பிடிமானம்: தற்சமயம் விற்பனையில் உள்ள குரில்லா 450 பைக்கில் சாதாரணமான சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலை என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய டயர்கள் வழங்கப்படுகின்றன. அதுவே, புதிய குரில்லா 450 பைக்கில் முற்றிலுமாக சாதாரணமான சாலைக்கு மட்டுமே ஏற்ற டயர்கள் பொருத்தப்படலாம். இதன் மூலம், ஹிமாலயன் 450 பைக்கிற்கான கஸ்டமர்களையும் பாதுகாக்க முடியும். மேலும் இதன் மூலமாக, சாலையில் கூடுதல் பிடிமானத்தை பெறலாம்.
புதிய வேரியண்ட்கள் மற்றும் விலைகள்: குரில்லா 450 பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்கள் உடன் புதிய வேரியண்ட்களையும் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலமாக, இன்றைய கால மாடர்ன் தரத்திற்கு ஏற்ப இந்த பைக்கை மாற்றுவதுடன், கூடுதல் கஸ்டமர்களையும் ஈர்க்க முடியும். விலையை பொறுத்தவரையில், எங்களுக்கு தெரிந்தவரையில் குரில்லா 450 பைக்கின் தற்போதைய ரூ.2.56 லட்சத்தில் இருந்து ரூ.5,000- ரூ.7,000 அதிகரிக்கப்படலாம்.
மாற்றம் இல்லாதது: மேலே கூறப்பட்ட அப்கிரேட்கள் உடன் புதிய குரில்லா 450 பைக்கில் பெரும்பாலான ஹார்ட்வேர் பாகங்கள் மாற்றப்பட போவதில்லை. அவற்றுள் முக்கியமானது, பைக்கின் 452சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகும். அதேபோல், என்ஜின் பொருத்தப்படும் ஸ்டீல் ட்வின்-ஸ்பர் ஃபிரேமும் மாற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய குரில்லா 450 பைக்கில் நிறைய அப்கிரேட்களை நாம் எதிர்பார்த்தாலும், இந்த பைக்கில் அந்த அளவிற்கான அப்கிரேட்களை ராயல் என்ஃபீல்டு வழங்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப குறைந்தப்பட்சம் பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பை ஆவது ராயல் என்ஃபீல்டு அப்கிரேட் செய்யலாம். புதிய குரில்லா 450 பைக்கில் என்னென்ன அப்கிரேட்கள் வழங்கப்பட உள்ளன என்பதை அறிய தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் இணைப்பில் இருங்கள்.
Note: Current Royal Enfield Guerrilla 450 Images Used For Representation


Click it and Unblock the Notifications








