ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டி இனி தான் ஆரம்பம்! பஜாஜின் செயலால் ஆட்டம் சூடுப்பிடிக்குது!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் புதிய 'டிராக்கர் 400' (Tracker 400) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த பைக்கை இந்தியாவில் 350சிசி என்ஜின் உடன் டிரையம்ப் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. பார்க்கவே மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புதிய டிரையம்ப் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மத்திய அரசாங்கத்தின் 350சிசி மற்றும் அதற்கு கீழான மோட்டார்சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி (GST) வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக டிரையம்ப் உள்பட பல பைக் நிறுவனங்கள் அவற்றின் 350சிசி மேலான என்ஜின் கொண்ட பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு மாற்றி வருகின்றன. அந்த வகையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமும் அதன் 400சிசி பைக்குகளை புதிய 350சிசி என்ஜினுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

new triumph tracker 400 motorcycle specifications

அதன்படி, டிரையம்ப் ஸ்பீடு 400 (Speed 400), ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) உள்ளிட்ட 400சிசி பைக்குகள் 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவற்றின் அறிமுகத்துடன் சேர்த்து இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்த டிராக்கர் 400 பைக்கையும் நேரடியாக 350சிசி என்ஜின் உடன் டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி உள்ளது. புதிய டிராக்கர் 400 பைக்கை பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

என்ஜின்: டிராக்கர் 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 349சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 40 எச்பி மற்றும் 32 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 (Thruxton 400) பைக்கை போன்று அதிக என்ஜின் இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய பைக்காக புதிய டிராக்கர் 400 விளங்குகிறது.

new triumph tracker 400 motorcycle specifications

ஏனெனில், ஸ்பீடு 400 பைக்கிலும் சரி, டிராக்கரை விட அதிக விலையை கொண்ட ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கிலும் சரி அதிகப்பட்சமாகவே 37 எச்பி வரையிலான இயக்க ஆற்றல் தான் கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால், வெளிநாட்டில் 398சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் டிராக்கர் 400 பைக்கின் என்ஜின் ஆற்றலை விட இந்திய மாடலின் என்ஜின் ஆற்றல் வெறும் 2 எச்பி மட்டுமே குறைவாகும்.

ஆனால், டிராக்கர் 400 பைக்கில் 40 எச்பி என்கிற அதிகப்பட்ச இயக்க ஆற்றலை பெற கூடுதலாக 250 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜினை இயங்க வைக்க வேண்டும். அதாவது, அந்த அளவிற்கு கூடுதலாக ஆக்ஸலரேஷனை கொடுக்க வேண்டும். டிராக்கர் 400 பைக்கில் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் & தொழிற்நுட்ப அம்சங்கள்: சஸ்பென்ஷனுக்கு டிராக்கர் 400 பைக்கில் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. விலை குறைவான ஸ்பீடு டி4 பைக்கை தவிர்த்து, மற்ற அனைத்து 400சிசி டிரையம்ப் பைக்குகளிலும் இந்த என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஸ்பீடு 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளில் இருந்து வேறுப்பட்ட டிசைனிலான அலாய் சக்கரங்கள் டிராக்கர் 400 பைக்கில் எம்.ஆர்.எஃப் ரெவ் இசட் எஃப்டி1 (MRF REVZ FD1) டயர்களுடன் பொருத்தப்படுகின்றன.

தோற்றத்தில் டிராக்கர் 400 பைக் ஆனது பந்தய கள பைக்குகளை போன்று தட்டையான டிசைனை கொண்டுள்ளது. பெட்ரோல் டேங்க் ஆனது பெட்டகம் வடிவில் உள்ள நிலையில், இந்த பைக்கில் ஃபிளைஸ்க்ரீன், நம்பர்-போர்டு-ஸ்டைல் பேனல்கள் மற்றும் வண்ண நிறங்களிலான சீட் கௌல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. த்ரக்ஸ்டன் 400 பைக்கை போன்று செவ்வக வடிவிலான எல்இடி டெயில்லைட் மற்றும் பின் இருக்கையை டிராக்கர் 400 கொண்டுள்ளது.

எடை & இருக்கை உயரம்: புதிய டிராக்கர் 400 181 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இது, 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்ட ஸ்பீடு 400 பைக்கை விட 2 கிலோ மட்டுமே எடைமிக்கது ஆகும். இத்தகைய குறைவான எடை உடன், தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 805மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளதால் பைக்கை ஹேண்ட்லிங் செய்வது எளிதாக இருக்கும்.

விலை: புதிய டிராக்கர் 400 பைக்கை ரூ.2.46 லட்சம் என்கிற விலையில் டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது டிரையம்ப் 400சிசி பைக்குகள் வரிசையில் அதிகமும் கிடையாது; அதேநேரத்தில் குறைவும் கிடையாது. ஏனெனில், இதனை காட்டிலும் ரூ.14,000 குறைவான விலையில் ஸ்பீடு 400 பைக்கும், ரூ.14,000 அதிகமான விலையில் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஸ் பைக்குகளை போன்றதான டிசைன் தான் புதிய டிரையம்ப் டிராக்கர் 400 பைக்கின் முக்கியமான அடையாளம் மற்றும் சிறப்பம்சம் ஆகும். இது பைக்கிற்கு கம்பீரமான மற்றும் மற்ற 400சிசி டிரையம்ப் பைக்குகளில் இருந்து தனித்துவமான தோற்றத்தை வழங்கியுள்ளது. இத்தகைய தோற்றத்துடன் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு என்கிற கண்ணை கவரக்கூடிய வண்ணங்களில் இந்த பைக் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும். அத்துடன், கூடுதலான என்ஜின் ஆற்றலும் இந்த பைக்கிற்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2026, 11:23 [IST]
English summary
New triumph tracker 400 motorcycle specifications new design extra engine power all details here
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+