இனிமே எல்லாரும் இந்த ஸ்கூட்டரை தான் வாங்க போறாங்க.. அதிக பவர் மற்றும் அசத்தலான வசதிகளுடன்!

கிளாஸியான ஸ்கூட்டர் மாடல்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் வெஸ்பா (Vespa) ஸ்கூட்டர்கள் தான் முதலிடத்தில் இருக்கும். லுக், பெர்ஃபாமன்ஸ் மற்றும் வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவை வெஸ்பா ஸ்கூட்டர்கள். இந்த நிலையில் பெரிய இன்ஜினுடன் சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சில ஸ்கூட்டர்களை மேம்படுத்தியிருக்கிறது வெஸ்பா. அது குறித்துப் பார்க்கலாம்.

இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது வெஸ்பா. இந்தோனேஷியாவில் பிரைமவேரா (Primavera) மற்றும் ஸ்பிரிட் (Sprint) ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை 125 சிசி மற்றும் 150 சிசி இன்ஜின்களுடன் விற்பனை செய்து வந்தது. இதில் 150 சிசி இன்ஜினுக்கு மாற்றாக தற்போது சற்று பெரிய 180 சிசி இன்ஜினைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது அந்நிறுவனம்.

Vespa Primavera 180

புதிதாக 174.1 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைக் கொண்டு பிரைமவேரா மற்றும் ஸ்ப்ரிட் ஸ்கூட்டர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த இன்ஜினானது 8,250 rpm-ல் 14.7 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 13.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது முந்தைய 150 சிசி இன்ஜின் உற்பத்தி செய்ததை விட 2.5 hp கூடுதல் பவர் மற்றும் 1.2 Nm கூடுதல் டார்க்காகும்.

இன்ஜின் மாற்றத்துடன் இந்த ஸ்கூட்டர்களில் பல்வேறு புதிய அம்சங்களையும் கொடுத்து மேம்படுத்தியிருக்கிறது வெஸ்பா. முழுமையான கலர் LCD டிஸ்பிளே, புதிய அலாய் வீல்கள், குரோம் ஃபினிஷ் கொண்ட வட்ட வடிவ மிரர்கள், கீலெஸ் இக்னிஷன் சிஸ்டம், டாப் எண்டு வேரியன்டில் 5 இன்ச் TFT டிஸ்பிளே, ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட பல்வேறு புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களை பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களில் கொடுத்திருக்கிறது வெஸ்பா.

Vespa Primavera 180

இன்ஜின் பவர் கூடியிருக்கும் போது பாதுகாப்பு அம்சமும் மேம்பட வேண்டும் அல்லவா. எனவே அனைத்து வேரியன்ட்களிலும் சிங்கிள் சேனல் ABS வசதியையும் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். ஸ்பிரின்ட் டெக் 180 வேரியன்டில் மட்டும் டூயல் சேனல் ABS வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தோனேஷியாவில் மட்டுமே இந்த ஸ்கூட்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐரோப்பா அல்லது இந்திய வெளியீடு குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

பிரைமவேரா 180 ஸ்கூட்டர் மாடலானது இந்திய மதிப்பிற்கு ரூ.2.99 லட்சம் என்ற விலையிலும், ஸ்பிரின்ட் 180 மாடலானது இந்திய மதிப்பிற்கு ரூ.3.18 லட்சம் என்ற விலையிலும் இந்தோனேஷியாவில் வெளியாகியுள்ளது. டாப் எண்டான ஸ்பிரின்ட் டெக் 180 வேரியன்டானது இந்திய மதிப்பிற்கு ரூ.3.59 லட்சம் என்ற விலையைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெஸ்பா, வெஸ்பா S, கலா (Qala, சிறப்பு எடிஷன்), அஃபீஸினா 8 (சிறப்பு எடிஷன்), வெஸ்பா 946 ஹார்ஸ் ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். சர்வதேச அளவில் பயன்பாட்டில் இருக்கும் அதே 125 சிசி மற்றும் 150 சிசி இன்ஜின்களே இந்திய வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ரூ.1.14 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி வெஸ்பா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக வெஸ்பா ஸ்கூட்டர்களும் இருந்து வருகின்றன. இதன் சிறப்பம்சமே அதன் டிசைன் தான். பார்த்தவுடன் கண்களைக் கவரும் வகையிலான டிசைன் கொண்டவை இவை. இந்தோனேஷியாவில் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் 180 சிசி ஸ்கூட்டர்கள் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றே நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2026, 20:15 [IST]
English summary
New vespa scooters with 180 cc engine launched in indonesia check all details here
மேலும்... #vespa #scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+