கூடுதல் சிறப்பம்சங்களுடன் யெஸ்டி பைக்குகள் அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் தனது பைக் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது அட்வென்ச்சர், ரோட்ஸ்டெர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களில் சில மாற்றங்களை செய்து 2026 மாடல்களாக கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக, யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் முக்கிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்களுடன் ஸ்போக்ஸ் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களை கவரும் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட ட்யூப் டயர்களைவிட இந்த ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு இருப்பதால் வழியில் பஞ்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் எளிதாக கையாள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் யெல்லோ ஃபால்கன் என்ற புதிய மஞ்சள் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், ஏற்கனவே உள்ள டொர்னாடோ பிளாக், க்ளாஸ் ஒயிட் மற்றும் நெபுலா புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். இந்த பைக்கில் அதே 334சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 29.6 பிஎச்பி பவரையும், 29.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டிராக்ஷன் கன்ட்ரோல், ரோடு, ரெயின் மற்றும் ஆஃப்ரோடு என வெவ்வேறு சாலை மற்றும் தட்பவெப்ப நிலைகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் மூன்று ஏபிஎஸ் மோடுகளும் உள்ளன.
அடுத்து யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக் மாடலில் புதிய க்ரீந் மாம்பா என்ற வண்ணத் தேர்வும், பழுப்பு வண்ணத்திலான குயில்ட் இருக்கையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத மாடலிலும் 334சிசி ஆல்ஃபா2 எஞ்சின்தான் உள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளன.
மூன்றாவது மாடலான யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் புதிய சாம்பல் வண்ணத் தேர்வும், பழுப்பு வண்ணத்திலான விசேஷ இருக்கையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 334சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய யெஸ்டி அட்வென்ச்சர் யெல்லோ ஃபால்கன் வண்ண மாடலுக்கு ரூ.2.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ட்யூப்லெஸ் மாடலுக்கு ரூ.2.32 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்ட இதர வண்ணத் தேர்வுகளுக்கு ரு.2.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கூறப்பட்டுள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டெர் க்ரீன் மாம்பா மாடலும், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் கிரே பாந்தர் மாடலும் ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.
யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் ட்யூப்லெஸ் டயர் மற்றும் ஸ்போக்ஸ் வீல்கள் இல்லாதது குறையாக இருந்தது. அந்த குறையை போக்கும் விதத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருப்பதும், புதிய வண்ணத் தேர்வுகளும் இளம் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பண்டிகை காலத்தில் பைக் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தேர்வில் யெஸ்டி இடம்பிடிப்பதற்கு இந்த கூடுதல் அப்டேட்டுகள் மதிப்பு கொடுக்கும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications