ஏப்ரல் 23இல் அறிமுகமாகும் நடிகர் விஜய் பயன்படுத்திய பைக் பிராண்டின் புதிய தயாரிப்பு! தேர்தல் அப்போவே புக்கிங்!

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதே தினத்தில் கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் அதன் யெஸ்டி (Yezdi) பைக் ஒன்றை அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் தற்சமயம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியை தான் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏனெனில், இந்த தினத்தில் தான் மாநிலத்தில் ஆட்சியை அடுத்த 5 வருடங்களுக்கு யார் நடத்த போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், இதே தினத்தில்தான் புதியதாக யெஸ்டி மோட்டார்சைக்கிள் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

new yezdi scrambler

அது வேறொன்றும் இல்லை, தற்சமயம் விற்பனையில் இருக்கும் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் அப்கிரேட் வெர்சனாகும். இந்த யெஸ்டி பைக்கிற்கும், புதியதாக அரசியல் கட்சியை துவங்கி முதல்முறையாக தேர்தலை சந்திக்க போகும் நடிகர் விஜய்க்கும் ஒரு தொடர்புள்ளது. 'வாரிசு' (Varisu) திரைப்படத்தில் நடிகர் விஜய், யெஸ்டி பைக் ஒன்றை பயன்படுத்தி இருப்பார்.

அதன்மீது விஜய் அமர்ந்திருக்கும் போஸ்டர் கூட அந்த சமயத்தில் வெளிவந்து வைரலாகியது. ஆனால், அது யெஸ்டி பிராண்டின் அட்வென்ச்சர் (Adventure) பைக் ஆகும். ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது, யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல் ஆகும்.

new yezdi scrambler

யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு சில வருடங்கள் மட்டுமே ஆகிறது என்றாலும், ஏப்ரல் 23ஆம் தேதியில் ஸ்க்ராம்ப்ளர் பைக் பெரிய அளவில் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பைக்கின் எடையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர யெஸ்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில், தற்சமயம் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் 181 கிலோவில் எடைமிக்கதாக உள்ளது. இதனால், குறிப்பாக கரடு முரடான ஆஃப்-ரோடுகளில் இந்த பைக்கை கண்ட்ரோல் செய்வது சிரமமாக உள்ளதால், புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கை குறைவான எடையில் யெஸ்டி களமிறக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக எடை குறைவான பாகங்கள் பயன்படுத்தப்படலாம்.

இந்த வகையில், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் என்ஜின் 10 கிலோ வரையில் குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், பைக்கின் என்ஜினிலும் சில மாற்றங்கள் இருக்கலாம். மேலும், ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440 (Royal Enfield Scram 440) பைக் உடனான போட்டியை சமாளிக்க ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் புதிய தொழிற்நுட்ப வசதியையும் யெஸ்டி வழங்கலாம்.

இவற்றுடன், பைக்கின் முன்பக்க தோற்றத்தை புதுமையானதாக காட்டும் விதமாக புதிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கான கலர் ஆப்ஷன்கள் மற்றும் கிராஃபிக்ஸையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் புதுமையானதாக வழங்கலாம். கிளாசிக் லெஜண்ட்ஸ் ஆனது இந்திய சந்தையில் ஜாவா (Jawa), யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ (BSA) பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2025ஆம் ஆண்டில் அப்கிரேட் செய்யப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கை போன்று யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் தோற்றமும் மாற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், மத்திய அரசின் ஜிஎஸ்டி (GST) குறைப்பால் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு புதிய யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2026, 7:52 [IST]
English summary
New yezdi scrambler expected to launch on april 23 check all details here
மேலும்... #yezdi #scrambler #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+