புதிய நார்ட்டன் 450 பைக்கை அறிமுகப்படுத்திய டிவிஎஸ் தலைவர் சுதர்சன் வேணு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆதரவுடன் புத்துயிர் பெற்றுள்ள இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் EICMA 2026 கண்காட்சியில் தனது புதிய 450 அர்பன் ரோட்ஸ்டர் கான்செப்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இப்புதிய பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

நார்ட்டன் நிறுவனத்தின் புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள் வரிசையில் இடம்பெறும் இந்த பைக், நகர்ப்புறப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடுத்தர ரக பைக்குகளை விரும்பும் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இதன் வடிவமைப்பும் தொழில்நுட்பங்களும் அமைந்துள்ளன.

Norton 450 Urban Cruiser

எஞ்சின் விபரம்

நார்ட்டன் 450 அர்பன் ரோட்ஸ்டர் பைக்கில் முற்றிலும் புதிய 454சிசி, லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8,000 ஆர்பிஎம்மில் 47 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 45 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கியர்களை மாற்றும்போது கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்கும் குயிக் ஷிஃப்டர் வசதியும் இடம்பெற்றுள்ளது. குறைந்த வேகத்திலேயே சிறப்பான இழுவைத்திறன் கிடைக்கும் வகையில் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read

ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன்

இந்த பைக்கில் அலுமினிய ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 43 மிமீ KYB அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் KYB மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. இதன் ரீபவுண்ட் மற்றும் பிரீலோடு அமைப்புகளைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். பிரேக்கிங் வசதிக்காக முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இவை ByBre பிரேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கார்னரிங் ஏபிஎஸ் வசதி வளைவுகளில் பிரேக் பிடிக்கும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். இரண்டு மாடல்களிலும் 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெறுகின்றன. மேலும், இந்த பைக்கின் எடை 180 கிலோவிற்கும் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற போக்குவரத்தில் எளிதாக கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

இரண்டு வேரியண்ட்டுகள்

நார்ட்டன் 450 அர்பன் ரோட்ஸ்டர் பைக் இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகமாகிறது. முதல் வேரியண்ட் வழக்கமான சாலைப் பயணங்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டாவது வேரியண்ட் ஸ்கிராம்ப்ளர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் எஞ்சின் மற்றும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் ஒரே மாதிரியாக உள்ளன.

ஸ்கிராம்ப்ளர் வேரியண்ட்டில் கருப்பு நிற அலாய் வீல்கள், சாம்பல் நிற ஃப்ரேம், நீளமான மட்கார்டுகள், ஹேண்ட் கார்டுகள் சிறிய விண்ட்ஸ்கிரீன் ஆகியவை இடம்பெறுகின்றன. இதன் இருக்கை வடிவமைப்பும் தனித்துவமாக உள்ளது. நீலம், வெள்ளி, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரையில் டைனமிக் எல்இடி ஹெட்லைட், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கீலெஸ் இக்னிஷன், ஸ்மார்ட்போன் இணைப்பு, ஹீட்டட் கிரிப்ஸ் ஆகிய வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன. இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சமாக 8 அங்குல டிஎஃப்டி தொடுதிரை இருக்கிறது. இதில் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

நார்ட்டன் 450 அர்பன் ரோட்ஸ்டர் பைக்கின் விற்பனை வரும் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஒரே காலகட்டத்தில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ பெயர், விலை உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்தியாவில் அறிமுகமாகும்போது ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450, கேடிஎம் 390 டியூக் உள்ளிட்ட பைக்குகளுக்குப் போட்டியாக அமையும். நார்ட்டன் நிறுவனத்தின் பாரம்பரிய பிரிட்டிஷ் வடிவமைப்பையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த புதிய பைக், 450சிசி பிரிவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, November 4, 2026, 10:44 [IST]
English summary
Norton 450 urban roadster concept eicma 2026 engine features specifications
மேலும்... #norton
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out