இந்தியாவில் டிவிஎஸ் வெளியிடும் புத்தம் புதிய பைக் இது தான்.. பட்டைய கிளப்புறாங்க!

டிவிஎஸ்ஸின் கீழ் செயல்பட்டு வரும் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமானது யுகே-யில் தங்களுடைய புதிய அட்வென்சர் பைக்கான அட்லஸை (Atlas) வெளியட்டுள்ளது. இதற்கு முன்னர் நார்டன் வெளியிட்ட மங்க்ஸ் (Manx) பைக் மாடலை விட சிறிய இன்ஜினுடன் அட்லஸ் வெளியாகியிருக்கிறது. இந்த அட்லஸ் பைக் ஓசுரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படும் நிலையில், இந்தியாவிலும் இதனை வெளியிட டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த 2026ம் ஆண்டின் இறுதியில் புதிய அட்லஸ் அட்வென்சர் பைக்கின் வெளியீட்டை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். சரி இப்போது இந்த அட்லஸ் பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள், யுகே-யில் இந்த பைக் என்ன விலையில் வெளியாகியுள்ளது, இந்தியாவில் என்ன விலையில் வெளியாகலாம் ஆகிய விவரங்களை எல்லாம் பார்க்கலாம்.

Norton Atlas

முதலில் இன்ஜின். புதிய பைக் ஒன்று வெளியாகும் போது அது என்ன விதமான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் வகையிலான இன்ஜினைக் கொண்டிருக்கும் என்பது தான் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் அம்சமாக இருக்கும். அந்த வகையில் இந்த அட்லஸ் பைக்கில் 585 சிசி, DOHC, பேரலல் ட்வின் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ்.

அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 69 hp பவர் மற்றும் 57.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினின் கியர்பாக்ஸ் பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர் வசதியையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Norton Atlas

ப்ரீமியமான பைக் என்பதால் வசதிகள் ரீதியில் எந்தக் குறையும் இருக்காது. 2 இன் 1 எக்சாஸ்ட், ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேம், கேஸ்ட் அலுமினியம் ஸ்விங் ஆர்ம், அட்ஜஸ்டபிள் ஹேண்டு லீவர்கள், அலுமினியம் ஃபுட் பெக், LED ட்வின் ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 8 இன்ச் TFT டச்ஸ்கிரீன், 5 ரைடிங் மோடுகள் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது அட்லஸ்.

வேரியன்ட் மற்றும் மாடலுக்கு ஏற்ப 188 கிலோ முதல் 192 கிலே வரையிலான எடையைக் கொண்டிருக்கும் இந்த அட்வென்சர் பைக்கானது 845 மிமீ சீட் உயரத்தைக் கொண்டுள்ளது. 220 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸுடன் அனைத்து வகையான பாதைகளையும் எளிதாகக் கடக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஷனுக்காக USD ஃபோர்க் (180 மிமீ டிராவலுடன் முழுவதுமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில்) மற்றும் மோனோஷாக் (ப்ரீலோடு அட்ஜஸ்டிங் மட்டும்) யூனிட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரேக்கிங்கிற்காக 320 மிமீ மற்றும் 270 மிமீ டிஸ்க்குகள் முன்பக்கமும் பின்பக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் வீல்களும் உண்டு.

இந்த பைக்கை அட்லஸ் மற்றும் அட்லஸ் GT என இரண்டு மாடல்களாக விற்பனை செய்யவுள்ளது நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ். அட்லஸ் மாடலானது ஆஃப்-ரோடு பைக்காக, ஆஃப்-ரோடிங்கிற்கென தனித்துவமாக இருக்கும் பல்வேறு வசதிகளையும் டிசைனையும் கொண்டிருக்கும். அட்லஸ் GT பைக்கானது டூரிங்கை மையப்படுத்தும் விதமாக, அது தொடர்பான அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டிருக்கும்.

இந்த அட்வென்சர் பைக்கை யுகே-யில் இந்திய மதிப்பிற்கு 10.56 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கி விற்பனை செய்யவுள்ளது நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ். இந்த பைக் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தாலேயே தயாரிக்கப்படவிருப்பதால் சற்று குறைவான விலையிலேயே நாம் எதிர்பார்க்கலாம். 4.70 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட BMW F 450 GS மற்றும் 7.44 லட்சம் ரூபாய் விலை கொண்ட ஹோண்டா NX500 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இந்தியாவில் அட்லஸ் பைக் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2020ம் ஆண்டு நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை டிவிஎஸ் வாங்கிய பிறகு, இந்தாண்டு தான் புதிய தயாரிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. நார்டனின் இந்தப் புதிய பைக்குகள் எந்தளவிற்கு ஒரு பிரிட்டன் நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கிறதோ, அதே அளவிற்கு இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு என்றும் நாம் கூறலாம். அந்த வகையில் முதல் நார்டன் பைக்கின் இந்திய வெளியீட்டிற்காக இன்னும் எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியிருக்கிறது.

Article Published On: Friday, June 12, 2026, 22:18 [IST]
English summary
Norton atlas bike launch in india in the end of 2026
மேலும்... #norton #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out