தமிழ்நாட்டு மக்களை பெருமைப்படுத்திய டிவிஎஸ் மோட்டார்.. பிரிட்டன் பைக் தயாரிப்பு தமிழ்நாட்டில் தொடக்கம்!

பிரிட்டன் ஆட்டோமொபைல் நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸின் தயாரிப்பு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2020ம் ஆண்டு வரை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமாக இருந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ், அதன் பின்பு டிவிஎஸ் மோட்டாரின் துணை நிறுவனமானது. திவாலாகும் நிலையில் இருந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை 2020ம் ஆண்டு தான் டிவிஎஸ் வாங்கியது.

அதன் பின்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மறுசீரமைப்பில் ஈடுபட்டிருந்த டிவிஎஸ், அடுத்த மாதம் தான் அந்த நிறுவனத்தின் மூலம் முதல் பைக்கை வெளியிடவுள்ளது. முன்பு விற்பனையில் இருந்த நார்டன் பைக்குகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் புதிய வடிவமைப்பில், ஃப்யூச்சரிஸ்டிக்கான லுக்கில் புதிய நார்டன் பைக்குகள் வெளியாகவிருக்கின்றன.

Norton Atlas bike production started in Tamilnadu

மங்க்ஸ், மங்க்ஸ் R, அட்லஸ் மற்றும் அட்லஸ் R ஆகிய நான்கு பைக்குகள் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின் கீழ் வெளியிடப்படவிருக்கின்றன. இதில் மங்க்ஸ் (Manx) சீரிஸ் பைக்குகளை அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பைக்குகளாக இருக்கப்போகின்றன. அட்லஸ் (Atlas) சீரிஸ் பைக்குகளானது சற்று சிறிய இன்ஜினுடன் (585 சிசி) உருவாக்கப்பட்டிருக்கின்றன. மங்க்ஸ் சீரிஸை விட குறைவான விலையையே இந்த அட்லஸ் பைக் சீரிஸ் கொண்டிருக்கும்.

இந்நிலையில் இந்த அட்லஸ் சீரிஸ் பைக்கின் தயாரிப்பே தமிழ்நாட்டில், ஓசுரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கே தயாரிக்கப்பட்டு நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவிருக்கிறது இந்த ப்ரீமியம் பெர்பாமன்ஸ் பைக். நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு UK-யிலேயே ஒரு தயாரிப்பு தொழிற்சாலை இருக்கிறது. எனினும் அங்கே, ஃபிளாக்ஷிப் மங்க்ஸ் சீரிஸ் பைக்குகளின் தயாரிப்பிறகு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

Norton Atlas

மேலும், இந்த அட்லஸ் சீரிஸ் பைக்குகளை இந்தியாவிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்ய விரும்புகிறது டிவிஎஸ். வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு பரிசீலனை செய்யும் விலையில் இந்த பைக்கை இந்தியாவில் வெளியிட வேண்டும் என்றால், இந்தியாவிலேயே இதனை தயாரிப்பதும் மிகவும் முக்கியம். இதுவும் இந்த சிறிய இன்ஜின் கொண்ட பைக்கை (நார்டன் லைன்-அப்பில் சிறிய இன்ஜின் கொண்ட பைக்) இந்தியாவில் உற்பத்தி செய்ய டிவிஎஸ் திட்டமிட்டதற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் இந்த அட்லஸ் சீரிஸ் பைக்குகளை UK-யில் வெளியிடவுள்ளது நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் இதன் இந்திய வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். டிவிஎஸ் பேடாக் (TVS Paddock) என்ற பிரத்தியேக ஷோரூம் அல்லது டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாக, நார்டனின் பைக்குகள் மற்றும் தாங்கள் வெளியிடவிருக்கும் புதிய ஹை பெர்ஃபாமன்ஸ் பைக்குகளை விற்பனை செய்ய டிவிஎஸ் திட்டமிட்டு வருகிறது.

குறிப்பிட்ட பைக் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஷோரூம் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த முடிவை டிவிஎஸ் எடுத்திருக்கிறது. ஏற்கனவே ஹீரோ நிறுவனம், ஸ்டாண்டர்டு ஷோரூம்களுடன், ப்ரீமியா என்ற தனி டீலர்ஷிப் நெட்வொர்க்கை இதேபோல் ப்ரீமியமான பைக்குகளுக்காக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தப் புதிய ப்ரீமியம் டீலர்ஷிப் நெட்வொர்க்கை இந்தியாவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும் டிவிஎஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைக்குகளை தயாரித்துக் கொடுப்பது டிவிஎஸ்ஸுக்குப் புதிதல்ல. ஏற்கனவே BMW-வின் சப் 500 சிசி இன்ஜின் பைக்குகளை டிவிஎஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸின் தொடக்கநிலை பைக்கும் சேர்ந்திருக்கிறது. அடுத்ததாக புதிய அட்லஸ் பைக்கை டிவிஎஸ் என்ன விலையில் இந்தியாவில் வெளியிடும் என்பதைப் பார்க்கவே ஆர்வமாக இருக்கிறது. UK-யில் இந்திய மதிப்பிற்கு 10.56 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, June 25, 2026, 6:51 [IST]
English summary
Norton atlas bike production started in tvs facility at hosur launch next month
மேலும்... #norton #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out