டிவிஎஸ் வெளியிட்ட சூப்பர் பைக் மாடல்.. உலகமே மிரண்டு போய் நிக்குது!

டிவிஎஸ் (TVS) நிறுவனத்திடமிருந்து இருந்து எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய பைக் அறிமுகமாகியிருக்கிறது. டிவிஎஸ் என்றால் நேரடியாக டிவிஎஸ் நிறுவனம் கிடையாது, டிவிஎஸ்ஸின் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles) இங்கிலாந்தில் தங்களுடைய புதிய 'மேங்க்ஸ் R' (Manx R) சூப்பர்பைக் மாடலை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் அனைத்து அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது அந்நிறுவனம்.

1900-களில் இருந்து இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் ஒரு பாரம்பரிய பைக் தயாரிப்பு நிறுவனம் தான் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ். திவாலாகும் நிலையில் இந்த இந்த நிறுவனத்தை 2020ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த நம்முடைய டிவிஎஸ் நிறுவனம் வாங்கியது. இந்த பைக் நிறுவனத்தை மீண்டும் பழைய பாரம்பரியத்திற்கு மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் டிவிஎஸ் ஈடுபட்டிருக்கிறது.

Norton Manx R

டிவிஎஸ் நிர்வாகத்தின் கீழ் முதல் சில ஆண்டுகளில் நிறுவனத்தின் நிர்வாகத்தை சரி செய்து, கடந்த சில ஆண்டுகளாகவே புதிய பைக் உருவாக்கத்தில் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் கவனம் செலுத்தத் தொடங்கியது. முன்னர் விற்பனையில் இருந்த பைக் மாடல்களை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, முற்றிலும் புதிய டிசைனில் நான்கு பைக் மாடல்கள் நார்டன் பிராண்டின் கீழ் வெளியிடத் திட்டமிடப்பட்டன.

அதில் முதல் பைக்காக மேங்க்ஸ் R இப்போது அறிமுகமாகியிருக்கிறது. நார்டன் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பைக் மாடலாகவும் இந்த மேங்க்ஸ் R-யே இருக்கப் போகிறது. இதனைத் தற்போது இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. நார்டன் மோட்டார்சைக்கிள்ஸின் புதிய பைக்குகளை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக முன்பே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. சரி, புதிய பைக்கின் சிறப்பம்சங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

Norton Manx R Upside

புதிய மேங்க்ஸ் R பைக் மாடலில், 1,200 சிசி, 72 டிகிரி V4 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 11,500 rpm-ல் 206 hp பவர் மற்றும் 9,000 rpm-ல் 130 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக்கை, ஸ்டாண்டர்டு, ஏபெக்ஸ், சிக்னேச்சர் மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் என நான்கு வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ்.

இந்த பைக்கில் 8 இன்ச் TFT டிஸ்பிளே, பிரெம்போ ஹைப்யூர் காலிப்பர் பிரேக்குகள், முன்பக்கம் அட்ஜஸ்டபிள் மர்ஸோச்சி USD ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அம்சங்களும் ப்ரீமியமான ஒன்றாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து செதுக்கியிருக்கின்றன நார்டன் மோட்டார்சைக்கிள்ஸும், டிவிஎஸ் நிறுவனமும்.

பைக்கை ஓட்டும் போது மிகச்சிறப்பான கண்ட்ரோலுக்காக, ட்ராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல் ஆகிய அடங்கிய சிக்ஸ் ஆக்சிஸ் IMU செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு ரைடிங் மோடுகளும் இந்த ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நாம் பார்த்த அனைத்து அம்சங்களும், இந்த பைக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டிருக்கும். எந்த மாற்றமும் இருக்காது.

எங்கே மாற்றம் இருக்கிறது என்றால் சஸ்பென்ஷன் செட்டப் அட்ஜஸ்ட்மன்ட் மற்றும் வீல்களில் தான். மேங்க்ஸ் R பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியன்டில் சஸ்பென்ஷன் செட்டப்புகளை மேனுவலாகவே அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். இதுவே மற்ற மூன்று வேரியன்ட்களிலும் எலெக்ட்ரானிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் செமி ஆக்டிவ் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஸ்டாண்ர்டு வேரியன்டில் கேஸ்ட் அலுமினியம் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏபெர்ஸ் வேரியன்டில் சற்று எடை குறைவான OZ ரேஸிங் ஃபோர்ஜ்டு அலுமினியம் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டாப் எண்டான சிக்னேச்சர் மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் வேரியன்ட்களில் ரோட்டோபாக்ஸ் புல்லட் ப்ரோ கார்பன் ஃபைபர் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி விதவிதமான வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பது பைக்கின் எடையைப் பாதித்து, அதன் மூலம் உயர்நிலை பெர்ஃபான்ஸையும் பாதிக்கிறது.

ஸ்டாண்டர்டு வேரியன்டானது 210 கிலோ எடையையும், டாப் எண்டு வேரியன்டானது 201 கிலோ எடையையும் கொண்டுள்ளது. ஆனால் அனைத்து 17 இன்ச் வீல்களிலும் ஒரே மாதிரியாக, பைரெல்லி டியாப்ளோ சூப்பர்கோர்ஸா SP V4 டயர்களே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை.

ப்ரீமியம் பைக் என்று சொல்லும் போதே விலையும் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று நீங்கள் கணித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் 20,250 பவுண்டுகள் என்ற விலையில் மேங்க்ஸ் R பைக்கின் அடிப்படையான ஸ்டாண்டர்டு வேரியன்ட் விற்பனை செய்யப்படவுள்ளது. இது இந்திய மதிப்பிறகு 26.03 லட்சம் ரூபாயாகும். ஏபெக்ஸ் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட்கள் இந்திய மதிப்பிற்கு முறையே 31.80 லட்சம் ரூபாய் மற்றும் 49.77 லட்சம் ரூபாய் விலையைக் கொண்டுள்ளன.

டாப் எண்டான ஃபர்ஸ்ட் எடிஷன் வேரியன்டிற்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை லிமிடட் எடிஷனாக வெறும் 150 யூனிட்டுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் முடிவு செய்துள்ளது. மற்ற வேரியன்ட்களில் இல்லாத வகையில் பல்வேறு தனித்துவமான காஸ்மெடிக் அம்சங்களுடன் இந்த லிமிடட் எடிஷன் வேரியன்ட் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கேற்ப விலையும் அதிகமாகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இந்த பைக் வெளியாகும் என்றாலும், அதிக விற்பனையை மையப்படுத்தி இது இந்தியாவில் வெளியிடப்படாது என்றே தெரிகிறது. மாறாக நார்டன் மோட்டார்சைக்கிள்ஸின் பிராண்டு வேல்யூவை இந்தியாவில் அதிகரிக்கும் விதமான ஒரு ஹேலோ தயாரிப்பாகவே இது இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது சற்று விலை குறைவான 500 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்குகளைத் தான். அதுவே என்ன விலையில் வெளியிடப்படும் என்பதைத் தெரிந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். 10 லட்சம் ரூபாய்க்கு உள்ளான விலையில் அந்த பைக் வெளியிடப்படலாம் என்பது எங்களின் கருத்தாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Thursday, May 7, 2026, 20:10 [IST]
English summary
Norton motorcycles reveals their first bike model manx r as their flagship in uk
மேலும்... #norton #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+