பெட்ரோல் பைக் ஷோரூம்களை ஒருத்தரும் சீண்ட போறது இல்ல! ஏப்ரல் 30இல் தரமான சம்பவம் வெயிட்டிங்!

ஒபென் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக, இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் டீசர் (Teaser) படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒபென் எலெக்ட்ரிக் ஒன்றாகும். பெங்களூருவை சேர்ந்த இந்த நிறுவனத்தில் இருந்து ரோர் (Rorr) எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி புதிய ரோர் எலெக்ட்ரிக் பைக் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

oben electric bike teased

அதாவது, தற்சமயம் ஒபென் ரோர் இ.இசட் (EZ), ரோர் சிக்மா (Sigma) மற்றும் விலையுயர்ந்த ரோர் என மூன்று ரோர் எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த வரிசையில் 4வது ரோர் எலெக்ட்ரிக் பைக் களமிறக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இந்த பைக்கின் டீசர் ஒன்று முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீசரில், பைக்கின் தோற்றம் எதுவும் காட்டப்படாமல், பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய முகப்பு விளக்குகள் (DRLs) மட்டும் காட்டப்பட்டுள்ளன. வட்ட வடிவிலான புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட் உடன் வழங்கப்பட உள்ள இந்த எல்இடி டிஆர்எல்-கள் U-வடிவில் உள்ளன. தற்போதைய ஒபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்குகளிலும் வட்ட வடிவில்தான் ஹெட்லைட் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

oben electric bike teased

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டீசரில், பைக்கின் அறிமுக தேதியான ஏப்ரல் 30ஐயும் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மற்றப்படி, இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் பெயர் உள்பட எந்த விபரங்களும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த புதிய பைக் ஆனது ரோர் பைக்குகள் வரிசையில் இணையுமா என்பதை கூட உறுதியாக கூற முடியவில்லை.

ரோர் வரிசையில் இணையும் புதிய மாடலாக இது இருந்தால், தற்போதைய ரோர் பைக்குகளின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இது இருக்கலாம். ரோர் வரிசையில் இணையவில்லை என்றால், முற்றிலும் புதுமையான தோற்றத்தில் இந்த புதிய பைக் இருக்கலாம். "துணிச்சலை வெளிப்படுத்து" (Unleash The Bold) என்கிற வாசகத்துடன் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளதால், தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து ஒபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்குகளை காட்டிலும் இது கம்பீரமான தோற்றம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகள் அவற்றின் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரிக்கு பெயர் பெற்றவை ஆக விளங்குகின்றன. இதே LFP பேட்டரி தான் புதிய எலெக்ட்ரிக் பைக்கிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த பைக்கின் பேட்டரிக்கும் 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக்காக வருவதால், நிச்சயமாக இதில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், ரோர் எலெக்ட்ரிக் பைக்குகள் வரிசையில் இந்த பைக் கொண்டுவரப்பட்டால், அவற்றின் தற்போதைய தோற்றத்தில்தான் இந்த புதிய பைக் இருக்கும். ஆனால், டீசரில் பைக்கின் தோற்றம் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளதால், முற்றிலுமாக புதிய எலெக்ட்ரிக் பைக்கையும் ஒபென் நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.

Article Published On: Monday, April 27, 2026, 17:01 [IST]
English summary
Oben electric teased new electric bike ahead of april 30 launch check all details here
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+