15 நாட்களில் சுமார் 25 ஆயிரம் பேர் புக் செய்த எலெக்ட்ரிக் பைக் இதுதான்! அறிமுக விலை ரூ.99,999 மட்டுமே!

ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 'ரோர் எவோ' என்கிற எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், இந்த எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு இந்தியாவில் மார்க்கெட் இல்லையென்றாலும், புது, புது எலெக்ட்ரிக் பைக்குகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றதாக விளங்குகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் பைக், ரோர் எவோ ஆகும்.

oben rorr evo electric bike booking

ரோர் இ.இசட் உள்ளிட்ட ரோர் எலெக்ட்ரிக் பைக்குகள் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் நிலையில், அந்த வரிசையில் புதியதாக ரோர் எவோ சேர்க்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட போதே இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், முன்பதிவுகளின் எண்ணிக்கை 25 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது.

அதாவது, அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 15 நாட்களில் பைக்கிற்கான முன்பதிவுகள் 25 ஆயிரம் மைல்கல்லை கடந்துள்ளன. அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,500இல் இருந்து 1,700 ரோர் எவோ பைக்குகள் முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் இந்த அளவிற்கு வேகமாக எந்தவொரு எலெக்ட்ரிக் பைக்கும் இதுவரையில் முன்பதிவானது கிடையாது என கூறப்படுகிறது.

oben rorr evo electric bike booking

முன்பதிவு செய்பவர்களுக்கு புதிய ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்குகள் டெலிவிரி செய்யப்படுவது வருகிற ஜூன் மாதம் முதல் துவங்கப்படும் என ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கை முன்பதிவு செய்துள்ள முதல் 10 ஆயிரம் கஸ்டமர்களுக்கு ரோர் எவோவின் விலை வெறும் ரூ.99,999 மட்டுமே ஆகும்.

அதன்பின் புக் செய்தவர்களுக்கான பைக்கின் விலை ரூ.1,24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு தற்சமயம் 18 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 150க்கும் அதிகமான ஷோரூம்கள் உள்ளன. 2027 மார்ச் மாதம் முடிவதற்குள் இந்த எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்கும் முனைப்பில் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் உள்ளது.

ஷோரூம்களுடன், ஒபென் கேர் சர்வீஸ் சென்டர்களும் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பல பகுதிகளில் உள்ளன. ஒபென் ரோர் எவோ பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் IPMSM எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 9 கிலோவாட்ஸ் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

அரிய வகை தனிமங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த IPMSM எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது ஐபி68 சான்று பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது முன்பை விட 40% சிறியதாகவும், அதேநேரம் 20% கூடுதல் இயக்க ஆற்றலை வழங்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் 3.4kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 180கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக் கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை புதிய ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், வெறும் 15 நாட்களில் எலெக்ட்ரிக் பைக் ஒன்றிற்கு 25 ஆயிரம் முன்பதிவுகள் என்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

Article Published On: Tuesday, May 19, 2026, 14:07 [IST]
English summary
Oben rorr evo electric bike booking crossed 25000 milestone in just 15 days after launch
மேலும்... #electric bike #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+