புக் செய்த ஒவ்வொருத்தரும் ஹாப்பி... நாடே எதிர்பார்த்த பைக்கின் டெலிவிரிகள் துவக்கம்!

ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்கிற்கான டெலிவிரிகளை துவங்கியுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் துவங்கப்படவில்லை. தற்போதைக்கு பெங்களூருவில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையிலான படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் மென்பொருள் தலைநகரமான பெங்களூருவில் இருந்து பல இவி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்று, ஒபென் எலெக்ட்ரிக் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதத்தில் புதிய ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஒபென் ரோர் பைக்குகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதில் புதியதாக ரோர் எவோ என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

oben rorr evo electric bike deliveries start in bengaluru

அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த புதிய ஒபென் ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்கிற்கு 15 நாட்களுக்குள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்தன. இந்த நிலையில், ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்குகளை டெலிவிரி கொடுக்கும் பணிகள் பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் டெலிவிரிகள் வரும் வாரங்களில் துவங்கப்பட உள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு தற்சமயம் 150 டீலர்ஷிப் ஷோரூம்கள் நாடு முழுவதும் உள்ளன. அத்துடன், 18 மாநிலங்களில் 90 நகரங்களில் இந்த நிறுவனத்திற்கு சர்வீஸ் மையங்களும் உள்ளன. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள உற்பத்தி ஆலை ஆனது வருடத்திற்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.

oben rorr evo electric bike deliveries start in bengaluru

வாகனங்களுக்கான முக்கியமான பாகங்கள் அனைத்தும் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், ஒபென் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஸ்பேர் பாகங்களை பெறுவதில் பெரியதாக பிரச்சனை இருக்காது. "தேவையை உருவாக்குவது ஒரு மைல்கல்; ஆனால் அந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதே வாடிக்கையாளர்களின் நீடித்த நம்பிக்கையை வளர்க்கும்" என ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான மதுமிதா அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஒபென் ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஸ்மார்ட் iQ AI கொண்ட முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவாகும். இந்த ஸ்மார்ட் iQ AI தொழிற்நுட்பத்தின் மூலமாக பைக்கின் ரேஞ்ச் 15% வரையில் அதிகரித்துள்ளது. புரோஜெக்டர் ஹெட்லைட்டை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பேட்டரிக்கு 8 வருடங்களுக்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்கில் 9 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. 0-இல் இருந்து மணிக்கு 40கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 110கிமீ ஆகும். ரோர் எவோ பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 3.4kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 180கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக் கூடியதாக உள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன், இந்த பைக்கின் பேட்டரியை வெறும் 90 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பிவிடலாம். முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக 5-இன்ச் TFT டிஸ்பிளே, OTA அப்டேட்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஜியோ-ஃபென்சிங், ரிமோட் இம்மொபைலிசேஷன், வாகனம் கீழே விழுந்தால் அதுகுறித்த அவசரகால எச்சரிக்கை மற்றும் ARGUS கனெக்டட் டெக்னாலஜி பிளாட்ஃபார்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்குகள் வரிசையில் புதிய மிட்-ரேஞ்ச் மாடலாக களமிறக்கப்பட்டுள்ள புதிய ரோர் எவோ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,24,999 ஆகும். இத்தகைய பைக்கின் டெலிவிரிகள் தான் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனால், வரும் நாட்களில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை சாலைகளில் காணலாம்.

Article Corrections

ஒபென் எலெக்ட்ரிக் நிறுவன சிஇஓ-இன் கருத்துகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
Article Published On: Monday, July 6, 2026, 22:41 [IST]
English summary
Oben rorr evo electric bike deliveries start in bengaluru set to expand across india
மேலும்... #electric bike #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out