ரூ.7.30 லட்சத்தில் பயிற்சிக்கான ரேஸ் பைக்குகளை களமிறக்கியது ஓவல் நிறுவனம்!

இத்தாலியைச் சேர்ந்த ஓவல் (Ohvale) நிறுவனத்தின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படு பந்தய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமான இருசக்கர வாகனங்களைப் போல இல்லாமல், இவை முழுக்க ரேஸ் டிராக் மற்றும் பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்தியாவில் ஓவல் பயிற்சி மோட்டார்சைக்கிள்களை HOM Auto Solutions நிறுவனம் அதிகாரப்பூர்வமான வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் தற்போது GP-0 110 Automatic, GP-0 160 4-Speed மற்றும் GP-2 190 4-Speed என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.7.30 லட்சத்தில் தொடங்குகிறது. அதிகபட்சமாக GP-2 190 Race மாடலின் விலை ரூ.12.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ohavale Motorcycles

ரேஸ் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்க விரும்பும் சிறியவர்கள் முதல் அனுபவம் வாய்ந்த பந்தய வீரர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ரகத்திலும், விலையிலும் இந்த புதிய மாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக GP-0 160 மாடல் இளம் ரைடர்களுக்கான MotoMini போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் MotoMini தொடரிலும் இந்த மாடல் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் GP-2 190 போன்ற அதிக திறன் கொண்ட மாடல்கள் அனுபவம் வாய்ந்த ரைடர்களையும் இலக்காகக் கொண்டுள்ளன.

Also Read

இந்த மூன்று மாடல்களிலும் காற்று குளிர்விக்கப்படும் அமைப்புடன் ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. GP-0 110 மாடலில் 106.7cc எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.7.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பநிலை ரேஸிங் பயிற்சியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல், இளம் ரைடர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

அடுத்ததாக GP-0 160 மாடலில் 155.5cc எஞ்சின் மற்றும் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் Race மாடல் ரூ.9.50 லட்சம் விலையில் வழங்கப்படுகிறது. Race பதிப்பில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 35mm OhRacing முன்புற சஸ்பென்ஷன் உள்ளிட்ட ரேஸிங் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.

Also Read

இந்திய வரிசையில் அதிக திறன் கொண்ட மாடலாக GP-2 190 உள்ளது. இதில் 187.18cc டேடோனா எஞ்சின் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இதன் ஸ்டான்டர்டு மாடலின் விலை ரூ.9.90 லட்சமாகவும், ரேஸ் மாடலின் விலை ரூ.12.75 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 12 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று பைக்குகளிலும் ஸ்டீல் டிரெல்லிஸ் ஃபிரேம், அலுமினியம் ஸ்விங்கார்ம், தலைகீழ் முன்புற சஸ்பென்ஷன் மற்றும் ரேஸ் பயன்பாட்டுக்கான பிரேக்கிங் உபகரணங்கள் இடம்பெறுகின்றன. உயர்நிலை பதிப்புகளில் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் எலக்ட்ரானிக் குயிக் ‌ஷிஃப்டர் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய ஓவல் பைக்குகளை சிறிய ரேஸ் டிராக்குகளில் கூட இவற்றை பயன்படுத்த முடியும். பிரேக்கிங், ஆக்சிலரேட்டர் கட்டுப்பாடு, கார்னரிங் மற்றும் உடல் நிலையை மாற்றுவது போன்ற அடிப்படை ரேஸிங் திறன்களை முறையாக கற்றுக்கொள்ள இந்த வகை பைக்குகள் உதவும். இவை பொதுச் சாலைகளில் பயன்படுத்த முடியாது.

இந்தியாவில் ரேஸிங் துறையில் ஈடுபடுவதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சி இடங்களும், இதுபோன்ற பந்தயத்தில் ஈடுபடுவதற்கு ஏற்ப பிரத்யேக பயிற்சி பைக்குகள் மற்றும் உபகரணங்கள் அவசியமாகிறது. அதற்கு இந்த ஓவல் பந்தய பைக்குகள் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, October 2, 2026, 15:57 [IST]
English summary
Ohvale racing bikes gp 0 110 gp 0 160 gp 2 190 launched india price features specs
மேலும்... #bike #motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out