ரூ.10,000 குறைவாக கிடைக்குதுனா வாங்கி போட இதுதான் சரியான நேரம்! ஓலாவின் அதிரடி திட்டம்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் சரிந்துவரும் அதன் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-wheelers) விற்பனையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர பல புதிய சலுகைகளையும், தள்ளுபடிகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக '#சாம்பியன் மஹோட்சவ்' (#ChampionMahotsav) என்கிற பெயரில் அதன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சுமார் ரூ.10,000 மதிப்பிலான சலுகைகளை ஓலா அறிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக், இந்தியாவில் குறுகிய காலத்தில் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக வளர்ந்த பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஓலாவின் விற்பனை பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இதை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். மேலும், இதனை சமாளிக்க தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் சலுகைகள் குறித்தும் பார்த்து வருகிறோம்.

ola electric champion mahotsav offer

அந்த வரிசையில் தற்போது #சாம்பியன் மஹோட்சவ் என்கிற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகையின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும் இது எதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது. சமீபத்தில் நடந்த உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடும் விதமாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையின்படி, எந்தவொரு ஓலா வாகனத்தை வாங்கினாலும் அதில் ரூ.10,000 பணம் தள்ளிபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தவொரு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கினாலும் இந்த பணம் தள்ளுபடி சலுகையை பெறலாம். ஆனால், இந்த சலுகை ஆனது வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ola electric champion mahotsav offer

இதற்கு முன்னதாக, மார்ச் 8ஆம் தேதி உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த சமயத்தில் 'மேட்ச் மஹோட்சவ்' (Match Mahotsav) என்கிற பெயரில் அதன் வாகனங்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சலுகையை வழங்கியது. அதற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, இந்தியா உலக கோப்பை வென்றதை 3 நாட்களுக்கு கொண்டாடும் விதமாக சாம்பியன் மஹோட்சவ் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் எஸ்1 (S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், ரோட்ஸ்டர் (Roadster) எலெக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனை செய்து வருகிறது. இதில், எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எஸ்1 புரோ+ ஸ்கூட்டர் ஆனது 5.2kWh மற்றும் 4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் ரூ.1,85,338 மற்றும் ரூ.1,65,338 என்கிற எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

அதுவே, எஸ்1 புரோ (Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4kWh மற்றும் 3kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1,39,999 மற்றும் ரூ.1,19,999 ஆகும். இவற்றை விட விலை குறைவான எஸ்1 எக்ஸ் மற்றும் எக்ஸ்+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் வெறும் ரூ.77,999இல் இருந்து துவங்குகின்றன.

ஓலா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரையில், 2.5kWh, 3.5kWh மற்றும் 4.5kWh பேட்டரிகளில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.74,999, ரூ.87,999 மற்றும் ரூ.94,999 ஆக தற்சமயம் உள்ளன. அதுவே ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1,04,999 மற்றும் ரூ.1,84,999 ஆக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவை சேர்ந்ததாக இருப்பினும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் ஓசூரில் தான் தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஓலா வாகனங்களை குறுகிய காலத்திற்கு ரூ.10,000 குறைவான விலையில் வாங்கலாம் என்பது அருமையான விஷயமாகும். இந்த நிறுவனத்தின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிப்பதற்கு இந்த புதிய சலுகைகள் எந்த அளவிற்கு கைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 10, 2026, 5:00 [IST]
English summary
Ola electric announced championmahotsav offer across all vehicles
மேலும்... #ola #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+