பெட்ரோல் பைக்கை கூட இப்போ இந்த விலையில் வாங்க முடியுறது இல்ல! இந்த 2 நாட்களில் வாங்கினால்தான் உண்டு!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் மீண்டும் தனது பழைய இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து புது, புது சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது 'ஹோலி மஹோட்சவ்' (Holi Mahotsav) என்கிற பெயரில் புதிய சலுகையை அதன் ரோட்ஸ்டர் (Roadster) எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பலத்தரப்பட்ட மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று என்பதினாலேயே ஒவ்வொரு வருடமும் ஹோலி சமயத்தில் பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு சலுகைகளை அறிவிப்பது உண்டு. அந்த வகையில்தான் தற்போது ஓலா நிறுவனமும் ஹோலி மஹோட்சவ் சலுகையை ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு அறிவித்துள்ளது.

ola holi mahotsav special price

மார்ச் 3 மற்றும் 4 என இரு நாட்களுக்கு மட்டுமே குறுகிய கால சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின்படி, ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்கை பெட்ரோல் பைக்குகளுக்கு இணையாக ரூ.79,999-இல் வாங்கலாம் என ஓலா அறிவித்துள்ளது. இது இல்லாமல், 'முகூர்த்த மஹோட்சவ்' (Muhurat Mahotsav) என்கிற பெயரில் இந்த இரண்டு நாட்களில் குறிப்பிட்ட சுப முகூர்த்த 90 நிமிடங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மேலும் சிறப்பு விலைகள் அறிவிக்கப்படும் எனவும் ஓலா தெரிவித்துள்ளது.

அந்த சிறப்பு முகூர்த்த விலை விபரங்கள், அந்த குறிப்பிட்ட 90-நிமிட நேரத்தில் மட்டும் நேரலையாக வெளியிடப்படும் எனவும், அந்த சமயத்தில் வாகனத்தை புக் செய்து அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு நாட்களில் சுப முகூர்த்த நேரத்தில் 3kWh அல்லது 4kWh பேட்டரி உடன் ஓலா எஸ்1 புரோ (S1 Pro) மற்றும் 4kWh பேட்டரி உடன் ஓலா எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் 8 வருடத்திற்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறலாம் ஓலா அறிவித்துள்ளது.

ola holi mahotsav special price

இந்த ஹோலி மஹோட்சவ் சலுகை மட்டுமின்றி, 'ஓலா இன்சைடர்ஸ்' (Ola Insiders) சலுகைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ஓலா அறிவித்துள்ளது. இதன்படி, ஓலாவின் ஜென்1 மற்றும் ஜென்2 எஸ்1 மற்றும் ரோட்ஸ்டர் வாகனங்களை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் தங்களது அந்த வாகனங்களை கொடுத்து ரூ.50,000 வரையிலான சலுகைகள் உடன் ஜென் 3 எஸ்1 மற்றும் ரோட்ஸ்டர் வாகனங்களாக அப்கிரேட் செய்துக் கொள்ளலாம்.

அவ்வாறு கிடைக்கும் ஜென் 3 எஸ்1 மற்றும் ரோட்ஸ்டர் வாகனங்கள் ஓலா நிறுவனம் சொந்தமாக தயாரிக்கும் 4680 பாரத் செல் (4680 Bharat Cell) பேட்டரிகளை கொண்டிருக்கும். அதேநேரம், ஓலா கஸ்டமர்கள் மேலும் ஒரு புதிய ஓலா வாகனத்தை வாங்கினால் ரூ.20,000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதில் பணம் தள்ளுபடி மற்றும் மூவ் ஓஎஸ் (MoveOS) உள்ளிட்டவை அடங்கும்.

ஆனால், இதற்கு நீங்கள் முந்தைய ஓலா வாகனத்தை உங்களது பெயரில் வாங்கியது மட்டுமில்லாமல், புதிய வாகனத்தையும் அதே பெயரில் வாங்க வேண்டும். இவை மட்டுமின்றி, ஓலா இன்சைடர்ஸ் வாயிலாக வாடிக்கையாளர்கள் 'பரிந்துரைப்பு சலுகை'-யும் பெறலாம். அதாவது, உங்களது பரிந்துரைப்பில் ஒருவர் ஓலா வாகனத்தை வாங்கினால் உங்களுக்கு ரூ.5,000 வரையில் வெகுமதி கிடைக்கும்.

அதேபோல், நீங்கள் பரிந்துரைத்த நபருக்கும் ரூ.1,000 பணம் தள்ளுபடி கிடைக்கும். மார்ச் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சுப முகூர்த்த 90 நிமிடங்கள் சமயத்தில் ஓலா இன்சைடர்ஸ் சலுகையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் கூடுதலாக ரூ.5,000 மதிப்பிலான சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ என்கிற இரு விதமான ரோட்ஸ்டர் பைக்குகளை விற்பனை செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையும் அதைதான் காட்டுகிறது. ஆதலால், தனது பழைய நிலையை மீண்டும் பெறுவதற்காக ஓலா இவ்வாறு சலுகைகளை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது. இதற்காக ஹோலி பண்டிகை காலத்தை பயன்படுத்திக் கொள்ள இருக்கும் ஓலா நிறுவனத்திற்கு இதற்கு பிறகாவது நல்லது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் வாங்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2026, 16:35 [IST]
English summary
Ola electric announces holi mahotsav special price for its roadster electric bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+