இதுதான் ஒரேவழி... மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க முண்டாசு கட்டிய ஓலா எலெக்ட்ரிக்!

விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேரடி விற்பனையில் கவனத்தை குறைத்து, டீலர்கள் மூலமாக விற்பனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவை மற்றும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தற்போது விற்பனையில் தொய்வை சந்தித்து வருகிறது. பல்வேறு புதுமையான அம்சங்களுடன் மிகப்பெரிய திட்டத்துடன் மார்க்கெட்டில் அதிரடியாக களமிறங்கிய ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. இதனுடன், பல புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் சிறந்த தயாரிப்புகளுடன் வரிசை கட்டியதால், ஓலாவுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

OLA EV

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், தனது விற்பனை மற்றும் சர்வீஸ் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை பின்பற்றி வந்த நேரடி வாடிக்கையாளர் விற்பனை (Direct-to-Consumer) முறையை மட்டும் சார்ந்திருக்காமல், இனி நாடு முழுவதும் அதிக விற்பனை நிலையங்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஓலா முடிவு செய்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் தனது முதல் ஸ்கூட்டரை 2021-ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவந்தது. அதுமுதல், நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டோர்கள் மூலமாகவே பெரும்பாலும் விற்பனை செய்து வந்தது. இதன் மூலம் பாரம்பரிய டீலர் கட்டமைப்பை தவிர்த்து, வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் மாடலை உருவாக்கியது. ஆனால் தற்போது சந்தை சூழ்நிலை மாறியுள்ள நிலையில், இந்த நடைமுறையில் இருந்து நிறுவனம் படிப்படியாக விலகுகிறது.

OLA Store

இனி டீலர்களுக்கும் முக்கிய பங்கு

ஓலா நிறுவனத்தின் புதிய திட்டத்தின்படி, உள்ளூர் டீலர் பார்ட்னர்கள் விற்பனை, சர்வீஸ் மற்றும் சந்தை விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். இதன் மூலம் தற்போது நிறுவனத்துக்கு சொந்தமான கடைகள் இருக்கும் பகுதிகளைத் தாண்டி, சிறிய நகரங்கள் மற்றும் அதிகமான உள்ளூர் சந்தைகளிலும் ஓலா தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும்.

நிறுவனத்தின் சொந்த ஸ்டோர்கள் முழுமையாக மூடப்படாது. அவை படிப்படியாக நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் அனுபவ மையங்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள்ளூர் விற்பனை மற்றும் சேவை நடவடிக்கைகளில் டீலர் பார்ட்னர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குவார்கள்.

OLA EV Scooter

ஏன் இந்த மாற்றம்?

கடந்த சில காலமாக ஓலா எலக்ட்ரிக் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஏத்தர் போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் வலுவாக வளர்ந்து வரும் நிலையில், ஓலாவின் சந்தைப் பங்கு மற்றும் விற்பனை செயல்பாடுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

Year Ola Electric Sales
2022 1,16,541
2023 2,77,610
2024 4,29,187
2025 2,04,533
2026 YTD 82,041
Source: Vahan Portal

இதனுடன், வாடிக்கையாளர்களுக்கான சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் கிடைப்பது தொடர்பான பிரச்சினைகளும், அதுதொடர்பான புகார்கள் மற்றும் விவாதங்களும் ஓலாவுக்கு சவாலாக இருந்தன. இது நிறுவனத்தின் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2025 அக்டோபரில் சுமார் 9 நாட்களாக இருந்த சர்வீஸ் செய்வதற்கான காலம், கடந்த மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு நாளாக குறைந்துள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது. உதிரிபாகங்கள் தொடர்பான பிரச்சினைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

OLA EV Scooter

புதிய முயற்சி

டீலர்களை நியமிக்கும் புதிய நடைமுறைக்கு மாறுவதன் மூலம் அதிக இடங்களில் விற்பனை மற்றும் சேவை வசதியை ஏற்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு எளிதான சேவையையும் வழங்க முடியும் என ஓலா எதிர்பார்க்கிறது. இதற்காக மல்டி-பிராண்ட் ஷோரூம் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வணிக நிறுவனங்களையும் தனது டீலர் பார்ட்னர் திட்டத்தில் இணைக்க நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

மேலும், வரும் தீபாவளிக்குள் நாடு முழுவதும் புதிய டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் இலக்குடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விற்பனையை அதிகரிப்பதுடன், விற்பனைக்குப் பிந்தைய சேவை அனுபவத்தையும் மேம்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது.

மொத்தத்தில், ஓலா எலக்ட்ரிக் ஆரம்பத்தில் பெருமையாக முன்னெடுத்த D2C விற்பனை மாடலில் இருந்து தற்போது டீலர் அடிப்படையிலான கட்டமைப்புக்கு மாறுவது, நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் ஓலாவின் விற்பனை சரிவை கட்டுப்படுத்தி, மீண்டும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் வலுவான இடத்தைப் பிடிக்க உதவுமா என்பதை வரும் மாதங்களில் பார்க்கலாம்.

Article Published On: Saturday, August 8, 2026, 15:24 [IST]
English summary
Ola electric dealer network sales strategy change
மேலும்... #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X