இந்த ஒரு ஸ்கூட்டரை வெச்சி டிவிஎஸ்-க்கு ஆட்டம் காட்டும் பஜாஜ்! 43 ஆயிரம் பேர் வாங்கி இருக்காங்க!

இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தை நாளுக்கு நாள் பெரியதாகி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களில் கிட்டத்தட்ட 10% எலெக்ட்ரிக் 2-வீலர்கள் ஆகும். அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் 10இல் ஒரு 2-வீலர் நிச்சயமாக எலெக்ட்ரிக் 2-வீலராக உள்ளது.

TVS மோட்டார், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களாக உள்ள நிலையில், அவற்றுடன் சேர்த்து தற்சமயம் இந்தியாவின் டாப்-5 இடத்தில் இருக்கும் எலெக்ட்ரிக் 2-வீலர் கம்பெனிகளையும், அவற்றின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகளையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

june 2026 ev two-wheeler sales charts

5. ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric)
குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக வளர்ந்த ஓலா நிறுவனம், அதன் பின் ஏனோ சற்று சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூனில் அதிகளவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ள இந்த பெங்களூரு நிறுவனம் 16,144 எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்துள்ளது.

4. ஹீரோ விடா (Hero Vida)
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான துணை நிறுவனமாக விடா விளங்குகிறது. வேகமாக இல்லாவிடினும் நேர்த்தியான முறையில் வளர்ச்சியைக் கண்டுவரும் ஹீரோ விடாவில் இருந்து கடந்த மாதத்தில் 21,792 எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 ஜூன் மாதத்தை விட சுமார் 175% அதிகமாகும்.

june 2026 ev two-wheeler sales charts

3.ஏத்தர் எனர்ஜி (Ather Energy)
ஓலாவை போல, பெங்களூருவை சேர்ந்த இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமும் கடந்த 6 ஆண்டுகளில் கவனிக்கத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலேயே மிகவும் அதிக எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக முதலிடத்தை ஏத்தர் பெற்றுள்ளது. ஏத்தரில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 31,188 எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2. பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)
இந்தியாவின் நீண்ட கால வரலாறு கொண்ட முன்னணி நிறுவனமான பஜாஜ், சேத்தக் என்கிற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் மூலம் இந்த இரண்டாவது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 43,234 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் மார்க்கெட்டில் 22% பங்களிப்பை சேத்தக் வழங்குகிறது.

1. டிவிஎஸ் மோட்டார் (TVS Motor)
பஜாஜை போன்று முன்னணி நிறுவனமான TVS தற்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக விளங்குகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 46,999 TVS எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இந்திய எலெக்ட்ரிக் 2-வீலர் மார்க்கெட்டில் 24% ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்த 2-வீலர்கள் விற்பனையிலும் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் TVS உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 2-வீலர்களையும் சேர்த்து பார்த்தால், ஹீரோ மற்றும் ஹோண்டாவை காட்டிலும் முன்னிலையாக TVS முதலிடம் வகிக்கிறது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள TVS தொழிற்சாலை ஓய்வே இன்றி இயங்குவதாக சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் கூட பார்த்து இருந்தோம்.

இருப்பினும், எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையை பொறுத்தவரைக்கும், TVS நிறுவனத்தை காட்டிலும் பஜாஜ் தான் கெத்து என சொல்ல வேண்டும். ஏனெனில், ஒரேயொரு சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மூலமாக இத்தகைய இடத்தை பஜாஜ் பெற்றுள்ளதை மறந்துவிட வேண்டாம். TVS மோட்டாரில் இருந்து பல்வேறு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Article Published On: Wednesday, July 8, 2026, 6:27 [IST]
English summary
Ola electric falls to 5th as tvs and bajaj conquer the june 2026 ev charts
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out