50,000 ரூபாயை கழிச்சிட்டா ஸ்கூட்டரின் விலையில் ஒண்ணுமே இருக்காதே! ஓலா ஒரு முடிவோட தான் இருக்கு!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தனது வாடிக்கையாளர் தளத்திற்காக, 'ஓலா இன்சைடர்ஸ்' (Ola Insiders) என்கிற பிரத்யேக வாடிக்கையாளர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், ஏற்கனவே பயன்படுத்தும் ஓலா வாகனங்களை மேம்படுத்துதல், கூடுதல் வாகனங்களை வாங்குதல் மற்றும் பரிந்துரைகள் போன்ற பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.

இந்த 'ஓலா இன்சைடர்ஸ்' திட்டத்தின்படி, ஓலா ஜென் 1 (Gen 1) மற்றும் ஜென் 2 ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வாகனங்களுக்குப் பதிலாக, புதிய ஜென் 3 எஸ்1 (S1) ஸ்கூட்டர்கள் அல்லது ரோட்ஸ்டர் (Roadster) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை வாங்கும்போது, ரூ.50,000 வரை சலுகைகளைப் பெறுவார்கள்.

ola electric introduces ola insiders

இதில், ஓலா நிறுவனம் தனது தொழிற்சாலையிலேயே சொந்தமாக உருவாக்கும் '4680 பாரத் செல்' (4680 Bharat Cell) பேட்டரிகளை கொண்ட வாகனங்களும் அடங்கும். தற்போது ஓலா வாகனம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதே பதிவு செய்யப்பட்ட பெயரில் மற்றொரு ஓலா வாகனத்தை வாங்கும் பட்சத்தில், ரூ.20,000 வரையிலான பணம் தள்ளுபடி (Cashback) மற்றும் மூவ் ஒஎஸ் (MoveOS) அப்கிரேட்கள் உட்பட சலுகைகளைப் பெறலாம்.

மேலும், பரிந்துரை திட்டத்தின் கீழ், ஓலா வாகனத்தைப் பரிந்துரைத்து, டெலிவரி (Delivery) செய்யப்பட்டால் ரூ.5,000 ஓலா கிரெடிட்ஸைப் பெறலாம். பரிந்துரைப்பில் வாங்குபவருக்கும் ரூ.1,000 பணம் தள்ளுபடி கிடைக்கும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்துக் கூறுகையில், "பத்து இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன், எங்கள் சமூகமே எங்கள் பயணத்தின் மையம் ஆகும்.

ola electric introduces ola insiders

ஓலா இன்சைடர்ஸ் அறிமுகம் மூலம், வாகனத்தை மேம்படுத்தி கொள்வதையும், பல ஓலா வாகனங்கள் கொண்ட குடும்பங்களையும், அதிக மக்களை எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டிற்குள் கொண்டு வருவதையும் ஆதரிக்கும் ஒரு திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்" என்றார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் ஜென் 3 எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது.

பிரீமியம் எஸ்1 ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில், எஸ்1 புரோ+ (5.2kWh, 4kWh) மற்றும் எஸ்1 புரோ (4kWh, 3kWh) ஆகிய மாடல்கள் உள்ளன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.1,90,338, ரூ.1,70,338, ரூ.1,44,999 மற்றும் ரூ.1,24,999 ஆகும்.

ஓலா நிறுவனத்தின் விலை குறைவான அடிப்படை ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், ஜென் 3 எஸ்1 எக்ஸ் ஆனது 2kWh, 3kWh, 4kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களில் முறையே ரூ.82,999, ரூ.98,999, ரூ.1,14,999 விலைகளில் கிடைக்கிறது. அதேநேரம், 4kWh பேட்டரி உடன் மட்டுமே கிடைக்கும் ஜென் 3 எஸ்1 எக்ஸ்+ ரூ.1,19,999 என்கிற விலையில் கிடைக்கிறது.

ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில், 2.5kWh, 3.5kWh, 4.5kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் பைக் முறையே ரூ.99,999, ரூ.1,09,999, ரூ.1,24,999 விலைகளிலும், 4.5kWh மற்றும் அளவில் பெரியதான 9.1kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ ரூ.1,29,999, ரூ.1,89,999 விலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் குறுகிய காலத்தில் பிரபலமான பிராண்ட் ஆக, வாடிக்கயாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு சமீப மாதங்களாக நேரம் சுத்தமாக சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, ஓலா எலெக்ட்ரிக்கின் விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதனை சரிச்செய்து, ஓலா இழந்த தனது இடத்தை வரும் மாதங்களில் மீண்டும் பிடிக்க இவ்வாறான சலுகை அறிவிப்புகள் அவசியமாகின்றன. குறிப்பாக, புதிய வாடிக்கையாளர்களை கவரும் அதேநேரத்தில், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஓலாவின் முயற்சி பாராட்டத்தக்கது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 2, 2026, 9:58 [IST]
English summary
Ola electric introduces exclusive community program ola insiders with benefits upto rs 50000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+