1 லட்ச ரூபாயை குறைத்தால் ஸ்கூட்டருக்கு பாதி விலை கூட இருக்காதே! ஓலா ஷோரூம் வருபவர்களுக்கு மட்டும்தானாம்!!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் 2026ஆம் ஆண்டுக்கான தனது 'முகூர்த்த மஹோட்சவம்' (Muhurat Mahotsav) சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்படும் புதிய 4680 பாரத் செல் (Bharat Cell) கொண்ட ஓலா எஸ்1 புரோ+ (S1 Pro+) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ (Roadster X+) போன்ற தயாரிப்புகள் குறுகிய காலத்திற்கு சிறப்பு விலையை பெற்றுள்ளன.
ஜனவரி 14 முதல் தொடங்கும் இந்த குறுகிய காலச் சலுகையின் விலை விவரங்கள் ஓலா எலெக்ட்ரிக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த 'முகூர்த்த மஹோட்சவம்' திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.1 லட்சம் வரையிலான பல்வேறு பலன்களைப் பெறலாம். பேட்டரி பேக்குகளின் அடிப்படையில், 1.5 kWh திறன் கொண்ட எஸ்1 புரோ+ மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5.2 kWh திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ.49,999 மற்றும் 9.1 kWh வாகனங்களுக்கு ரூ.99,999 எனச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகைகளை ஓலா எலெக்ட்ரிக் ஷோரூம்களில் மட்டுமே பெற முடியும். அதாவது, ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
தங்களது பழைய ஓலா வாகனங்களை கொடுத்து புதிய 4680 பாரத் செல் ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள சிறப்பு போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் (ICE) வாகனங்களில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் மாடல்களுக்கு மாறுபவர்களுக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus) உண்டு.

இந்த விற்பனைக் காலத்தில், சலுகையை கழிக்காமல் எஸ்1 புரோ+ 5.2 kWh ரூ.1,39,999-க்கும், ரோட்ஸ்டர் எக்ஸ்+ 9.1 kWh ரூ.1,49,999-க்கும் (ஷோரூம்களில் மட்டும்) கிடைக்கும். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், 3ஆம் ஜென்ரேஷன் எஸ்1 புரோ+ ஸ்கூட்டர் 5.2 kWh மற்றும் 4 kWh பேட்டரிகளுடனும், சாதாரண எஸ்1 புரோ 4 kWh மற்றும் 3 kWh பேட்டரிகளுடனும் கிடைக்கின்றன.
மலிவு விலையிலான 3ஆம் ஜென்ரேஷன் எஸ்1 எக்ஸ்+ ஸ்கூட்டர் 4 kWh பேட்டரியுடனும், எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டர் 4 kWh, 3 kWh மற்றும் 2 kWh பேட்டரி ஆப்ஷன்களுடனும் விற்பனை செய்யப்படுகிறது. எஸ்1 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,19,999 ஆகவும், டாப் எஸ்1 புரோ+ வேரியண்ட்டின் விலை ரூ.1,54,999 ஆகவும் உள்ளது.

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மோட்டார்சைக்கிள் 4.5 kWh, 3.5 kWh மற்றும் 2.5 kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிக பிரீமியம் கொண்ட ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக் 9.1 kWh மற்றும் 4.5 kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.99,999இல் இருந்து தொடங்குகின்றன, அதன் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.1,29,999இல் இருந்து துவங்குகிறது.
இதுகுறித்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், "2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எங்கள் 4680 பாரத் செல் தளத்தை முகூர்த்த மஹோட்சவம் மூலம் கொண்டாடுகிறோம். இந்த 4680 பாரத் செல் கட்டமைப்பு ஆனது பேட்டரி பேக்குகள், அவற்றில் வழங்கப்படும் செல்கள் மற்றும் வாகன தளங்கள் என அனைத்தும் ஓலா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை வலுப்படுத்துகிறது," என்று தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவர்ச்சிகரமான விலையுடன், பாரத் செல் மூலம் இயங்கும் எஸ்1 மற்றும் ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த தூய்மையான எரிசக்தி உடன் வாகனங்கள் இயங்கும் தன்மையில் இந்தியாவின் மாற்றத்தை ஓலா எலெக்ட்ரிக் விரைவுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications









