24-கேரட் தங்க தகடு உடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! அட்சய திருதியைக்கு இந்த ஆஃபரை யாரும் எதிர்பார்க்கல!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் 'ஓலா சோனா வீக்கெண்ட்' (Ola Sona Weekend) என்கிற பெயரில் குறுகிய காலத்திற்கான சலுகையை அறிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19 என இரண்டு நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுகிய கால சலுகையின்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகப்பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகள் உடன் பெறலாம்.
ஓலா எலெக்ட்ரிக், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. கடந்த சில மாதங்களாக விற்பனை குறைந்ததை அடுத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளாக வாரி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளில் சிறப்பு விலைகள், ஃபைனான்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பேக்கேஜ்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

அத்துடன், பிரத்யேகமான ஓலா எஸ்1 புரோ சோனா (S1 Pro Sona) என்கிற எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷனை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம். இதில் 24-கேரட் தங்க தகடு பதிக்கப்பட்ட எலிமெண்ட்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரின் மூவ் ஓ.எஸ் டாஷ்போர்டு திரையில் 'சோனா மூட்' என்கிற தங்க நிற தீம்-ஆல் ஆன இண்டர்ஃபேஸும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை திட்டத்தின்படி, 2kWh பேட்டரி உடன் ஓலாவின் ஜென் 3 எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 2.5kWh பேட்டரி உடன் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் பைக் ஆனது வெறும் ரூ.49,999-இல் கிடைக்கும். அதேபோல், 9.1kWh பேட்டரி உடன் கிடைக்கும் விலையுயர்ந்த ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் விலையும் சுமார் ரூ.50,000 குறைக்கப்பட்டு குறுகிய கால சலுகை விலையாக ரூ.1,39,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் அனைத்து நேரங்களிலும் ஓலாவின் இந்த புதிய ஓலா சோனா வீக்கெண்ட் சலுகையை பெற முடியாது. இந்த இரு நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே பெற முடியும். இந்த நேரங்களில் ரூ.40,000 வரையிலான தள்ளுபடிகளுடன், பேங்க் ஆஃப் பரோடா, யெஸ் பேங்க், எச்டிஎஃப்சி, எச்.எஸ்.பி.சி, ஐடிஎஃப்சி மற்றும் ஸ்காபியா ஃபெடெரல் உள்ளிட்ட வங்கிகளின் கிரெட் கார்ட் மூலம் மாதத்தவணையில் ஓலா வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும்.
மேற்கூறப்பட்ட சலுகைகள் உடன் 8 வருடத்திற்கான நிச்சய நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் ஓலாவின் அனைத்து வாகனங்களிலும் பெறலாம். இந்த சலுகைகள் உடன், தனது 4680 பாரத் செல் டெக்னாலஜியையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஹைலைட்டாக சுட்டிக் காட்டியுள்ளது. ஓசூரில் உள்ள ஓலாவின் தொழிற்சாலையில் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் இந்த பேட்டரி டெக்னாலஜியால் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் விலையை கூட ஓலா நிறுவனத்தால் குறைவாக நிர்ணயிக்க முடிகிறதாம்.
இதற்கிடையில் சமீபத்தில் எஸ்1 எக்ஸ்+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புதியதாக 5.2kWh பேட்டரி உடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.1,29,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5.2kWh பேட்டரி தொகுப்பில் 4680 பாரத் செல் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜி மூலமாக அதிக ரேஞ்சை பெற முடிவது மட்டுமின்றி, அதிக செயல்படுதிறனையும் வாகனத்தில் பெற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ச்சியாக சலுகைகளை அறிவித்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை ஆனது அட்சய திருதியை முன்னிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்கூட்டரில் தங்க தகடு பதிக்கப்பட்ட பாகங்கள் என்பது கொஞ்சம் டூ மச் என்றுதான் சொல்ல வேண்டும். இது, ஓலாவின் விற்பனையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








