தரைமட்ட ரேட்டுக்கு இவி ஸ்கூட்டர்! 70 கி.மீ வேகம் 110 கி.மீ ரேஞ்ச்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஓமேகா சிக்கி மொபிலிட்டி நிறுவனம் இந்த ச கம்ண்டில் அதிக வேகத்தில் பயணம் செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஓமேகா செக்கி மொபிலிட்டி நிவனம் இந்தியாவில் தனது வெக்ஸ்டிரா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ90,900 அதாவது ரூ1 லட்சத்திற்கு ரூ100 குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வெக்ஸ்டிரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சிட்டி பயணத்திற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்றவாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கமர்ஷியல் எலெக்ட்ரிக் வாகனத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இந்த பயணிகள் வாகனம் களம் இறக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரை அதிக பெர்ஃபார்மென்ஸ் சிறப்பான ரேஞ்ச், கேட்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 70 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கி.மீ வரைபயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டரில் 3.45kWh ஐபி 67 ரேட் எல்எம்எஃப்-பி பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸ்டென்ஸாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3kW பிஎல்டிசி மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ரைடர்கள் 3 விதமான ரைடு மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய ஆப்ஷகள் உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் றா்கூட்டரில் 3.5 இன்ச் கலர் எல்சிடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரியில் உள்ள சார்ஜ் எவ்வளவு அதை வைத்து எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும். இந்த ஸ்கூட்டரில் சார்ஜிங் போர்ட்கள், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், ஜிஎஸ்எம் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 3.45kWh ஐபி 67 ரேட் எல்எம்எஃப்-பி பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸ்டென்ஸாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3kW பிஎல்டிசி மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ரைடர்கள் 3 விதமான ரைடு மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய ஆப்ஷகள் உள்ளது.
இநட்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 0-80 சதவீதம் சார்ஜ் ஏற்ற வெறும் 4 மணி நேரம் தான் ஆகும். முழுமையாக சார்ஜ் ஏற்ற 5 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் குறைவான செலவில் இயங்கும். அதே நேரம் குறைந்த விலையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இது சிறந்த மாற்றாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஓமேகா சிக்கி மொபிலிட்டி நிறுவனம் ஃபரிதாபாத்தில் உள்ள ஆலையில் வைத்து இந்த வாகனத்தை தயாரிக்கிறது. ஆண்டிற்கு 25000 வாகனங்களை தயாரிக்க இந்நிறுவனத்தால் முடியும். இது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதியாகிறுது. நிச்சயம் இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








