ஆர்15 பைக்கின் அதே விலையில் 300சிசி டிவிஎஸ் பைக்... பணத்தை எதில் முதலீடு பண்றோம் என்பதுதான் முக்கியம்!

யமஹா (Yamaha) நிறுவனத்தின் பிரபலமான ஆர்15 (R15) பைக்குகளின் விலைகள் மிக சமீபத்தில் இந்த மே மாதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான விலை அதிகரிப்பு கிடையாது. வெறும் ரூ.4,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பால் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 (Apache RTX 300) பைக்கை விலையில் யமஹா ஆர்15 எம் நெருங்கியுள்ளது.

ஆர்15 எம் மற்றும் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்குகள் ஒன்றுக்கொன்று வேறுப்பட்டவை ஆகும். ஆர்15 எம் ஆனது அதிக பேனல்கள் நிறைந்த ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். அதுவே, அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 ஆனது கரடுமுரடான பயணங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இருப்பினும், விலையை கிட்டத்தட்ட ஒரே அளவில் கொண்டுள்ள இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

price hiked yamaha r15 m vs tvs apache rtx 300

விலையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆர்15 பைக்குகளிலேயே பவர்ஃபுல்லான ஆர்15 எம் பைக்கை காட்டிலும் டபுள் மடங்கு பவர் மற்றும் டார்க் திறன் மிக்கது அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 ஆகும். ஏனெனில், ஆர்15 எம் பைக்கை காட்டிலும் கிட்டத்தட்ட டபுள் மடங்கு பெரியதான 300சிசி என்ஜினை அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பெறுகிறது.

ஆர்15 எம் பைக்கின் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் SOHC லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 10000 ஆர்பிஎம்-இல் 18.1 பிஎச்பி மற்றும் 7500 ஆர்பிஎம்-இல் 14.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அதுவே, அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்கில் 299.1சிசி சிங்கிள்-சிலிண்டர் DOHC லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

price hiked yamaha r15 m vs tvs apache rtx 300

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-இல் 35.5 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-இல் 28.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இயக்க ஆற்றல் அளவுகளில் இந்த அளவிற்கு வேறுப்பாடுகள் இருந்தாலும், இந்த பைக்குகள் இரண்டுமே 6-ஸ்பீடு கியர்பாக்ஸை தான் பெறுகின்றன.

அட்வென்ச்சர் பைக் என்பதால் அப்பாச்சி மாடலில் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி 200மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. ஆனால், ஆர்15 எம் பைக்கில் 170மிமீ உயரத்தில் பைக்கின் அடிப்பகுதி உள்ளது. அதேபோல், தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரமும் ஆர்15 எம் பைக்கை காட்டிலும் அப்பாச்சி பைக்கில் 20மிமீ அதிகமாக உள்ளது.

முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் இந்த இரு பைக்குகளிலும் பெரிய அளவில் வித்தியாசத்துடன் உள்ளது. சஸ்பென்ஷனுக்கு இரு பைக்குகளிலும் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் செட்-அப் தான் வழங்கப்படுகின்றன. என்றாலும், அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக் 4மிமீ பெரிய அளவிலான யுஎஸ்டி ஃபோர்குகளை பெறுகிறது.

Specs Yamaha R15M Apache RTX 300
Displacement in cc 155 299.1
Engine Type Single-Cylinder Single-Cylinder
Engine Head SOHC DOHC
Valves / Cylinder 4 4
Cooling Liquid-Cooled Liquid-Cooled
Power in bhp 18.1 35.5
RPM @10000 RPM @9000 RPM
Torque in Nm 14.2 28.5
RPM @7500 RPM @7000 RPM
Transmission 6-speed 6-speed
Wheelbase in mm 1325 1430
Ground Clearance in mm 170 200
Seat Ht in mm 815 835
Kerb Wt in Kg 141 180
Fuel Tank in liters 11 12.5
Wheels Alloy Alloy
Front Tyre 100/80-R17 110/80-R19
Rear Tyre 140/70-R17 150/70-R17
Front Brake 282 mm Disc 320 mm Disc
Rear Brake 220 mm Disc 240 mm Disc
ABS Dual-Channel Dual-Channel
Front Suspension 37mm USD 41mm USD
Rear Suspension Mono-Shock Mono-Shock
Headlight LED LED
Taillight LED LED
Turn Indicators LED LED
Instrument Cluster Digital, TFT Digital, TFT
Bluetooth Features Yes Yes
Music Control Yes Yes
Navigation Turn-By-Turn Google Maps
Price in Lakh (ex-sh, Delhi) 1.71 - 1.96 1.99 - 2.34

அதேபோல், இந்த இரு பைக்குகளிலும் டிஸ்க் பிரேக்குகள் தான் வழங்கப்படுகின்றன என்றாலும், டிஸ்க்குகளின் அளவானது அப்பாச்சி பைக்கில் பெரியதாக உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் என மூன்றும் இந்த பைக்குகளில் எல்இடி தரத்தில் வழங்கப்படுகின்றன. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது டிஜிட்டல் தரத்தில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு பைக்குகளையும் வெவ்வேறான இரசனை கொண்ட வாடிக்கையாளர்களே வாங்குவர் என்றாலும், இந்த இரண்டில் எதை வாங்குவது என்கிற குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்றால் இதில் ஒன்றை தேர்வு செய்வது என்பது உங்களது தேவையை பொறுத்தது ஆகும். அதாவது, யமஹா ஆர்15 எம் ஆனது அன்றாட குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்றது ஆகும். அதுவே, ஆர்டிஎக்ஸ் 300 ஆனது நெடுஞ்சாலைகளில் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கும் கரடுமுரடான பயணங்களை மேற்கொள்வதற்கும் ஏற்றதாகும்.

Article Published On: Tuesday, May 12, 2026, 11:08 [IST]
English summary
Price hiked yamaha r15 m vs tvs apache rtx 300 check all details here
மேலும்... #yamaha #tvs apache #new apache #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+