தரமான வசதிகளுடன் இந்தியாவில் வெளியான சிறப்பான 300 சிசி பைக்.. இப்போவே ஷோரூம் வாசல்ல கூட்டம் அள்ளுது!

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் 'SRV 300' பைக்கை அப்டேட் செய்துள்ளது QJ மோட்டார் (QJ Motor). சீனாவைச் சேர்ந்த பல்வேறு பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் மூலமாக தங்களுடைய பைக்குகளை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றன. அதில் இந்த QJ மோட்டாரும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பைக்குகளை இந்தியாவில் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சீனாவைச் சேர்ந்த மற்றொரு பைக் தயாரிப்பு நிறுவனமான கீவேயின் பைக்குகளையும் இந்தியாவில் இந்த நிறுவனமே விநியோகம் மற்றும் விற்பனை செய்து வருகிறது. கீவேயில் 300 சிசி பைக் மாடல் சமீபத்தில் தான் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டது. தற்போது அதனைத் தொடர்ந்து QJ மோட்டார் நிறுவனத்தின் 300 சிசி பைக் மாடல் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.

SRV 300

2026ம் ஆண்டிற்கான அப்டேட்டில் புதிய SRV 300 பைக் மாடலில், டூயல் எக்சாஸ்ட் சிஸ்டத்தைக் கொடுத்து மேம்படுத்தியிருக்கிறது QJ மோட்டார். பைக்கில் புதிய டீகல்களுடன், புதிய நிறங்களையும் கொடுத்துள்ளது. வசதிகள் ரீதியில் புதிய SRV 300 பைக்கில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மெக்கானிக்கலாக புதிய SRV 300 பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. அதே 296 சிசி, லிக்விட்-கூல்டு, V-ட்வின் இன்ஜின் தான. 300 சிசி பிரிவில் V-ட்வின் இன்ஜினைப் பார்ப்பது அரிது. அந்த வகையில் இந்த வகையான இன்ஜின் வடிவமைப்பு கொண்ட சில பைக் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது SRV 300. இந்த இன்ஜினானது 9,000 rpm-ல் 30.3 hp பவர் மற்றும் 5,000 rpm-ல் 26 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

QJ Motor SRV 300

2026ம் ஆண்டிற்காக மேம்படுத்தப்பட்ட புதிய பைக் மாடலை ரூ.3.29 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். கடந்தாண்டு ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல்படுத்தப்பட்ட போது, 300 சிசிக்கும் கீழான இன்ஜினைக் கொண்டிருந்ததால் இந்த SRV 300 பைக் மாடலின் விலையும் ரூ.2.97 லட்சமாகக் குறைக்கப்பட்டது. தற்போது புதிய அப்டேட்களுடன் பைக்கின் விலையை ஜிஎஸ்டி வரிக்குறைப்பிற்கு முந்தைய அளவிற்கும் மேலாக உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பிற்கு முன்னாள் இந்த SRV 300 பைக் மாடலானது ரூ.3.19 லட்சம் விலையைக் கொண்டிருந்தது. தற்போது அதனை விட கொஞ்சம் அதிமாக ரூ.3.29 லட்சமாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிளாஸி ரெட் மற்றும் மேட் பிளாக் ஆகிய இரண்டு தனித்துவமான நிறங்களில் இந்த 300 சிசி ரெட்ரோ லுக்கிங் பைக்கை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

இந்தியா முழுவதும் இருக்கும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாக இந்த SRV 300 பைக்குகளை இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கலாம். QJ மோட்டார் மற்றும் கீவே ஆகிய நிறுவனங்களைத் தவிர்த்து, பெனல்லி, ஸான்டீஸ் மற்றும் மோட்டோ மொரினி ஆகிய பிராண்டுகளின் பைக்குகளையும் இந்த நிறுவனமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. பெனல்லி நிறுவனம் QJ மோட்டாரின் துணை நிறுவனமாகவே 2005ல் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த QJ மோட்டார் மற்றும் கீவே ஆகிய நிறுவனங்களின் பைக் மாடல்கள் சிறப்பாக இருந்தாலும், போதுமான சர்வீஸ் செண்டர்கள் மற்றும் ஷோரூம்கள் இல்லாதது, இந்த பைக்குகளை வாடிக்கையாளர்கள் அனுகுவதைக் குறைக்கிறது. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இதன் சர்வீஸ் செண்டர்கள் இருந்தால், இந்த QJ மோட்டார் பைக்குகளை வாங்குவதைக் குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம் என்பதே எங்கள் கருத்தாக இருக்கிறது.

Article Published On: Monday, May 4, 2026, 22:10 [IST]
English summary
Qj motor srv 300 bike model updated in india check all details here
மேலும்... #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+