ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகும் புதிய பைக் இது தான்

உலகம் முழுவதும் பெர்ஃபாமன்ஸை அள்ளிக் கொடுக்கும் பவர்ஸ்போர்ட் பைக்குகளை விற்பனை செய்து வரும் QJ மோட்டர் (QJ Motor) நிறுவனமானது இந்தியாவில் புதிய பைக் ஒன்றை சோதனை செய்து வருகிறது. நிறுவனத்தின் பார்வையில் இருந்து இது ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் ஒரு பைக் தான். ஆனால் இந்தியாவிற்கு இது புதிய பைக் மாடல்.

சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'SRV 600 V2' என்ற புதிய பவர்ஸ்போர்ட் பைக்கையே இந்தியாவில் விற்பனை செய்வதற்காக அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாடி பேனல்களில் எந்தவித மறைப்பும் இல்லாமல் இந்த பைக் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் புதிய பைக் குறித்த முழுமையான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

QJ Motor SRV 600 V2

ரெட்ரோ லுக் மற்றும் மாடர்ன் லுக் இரண்டும் சேர்ந்த கலவையாகவும், ஃபிரஷ்ஷாகவும் இருக்கிறது SRV 600 V2 பைக். பார்த்தவுடனேயே அனைவருக்கும் பிடித்துவிடும் படியான டிசைனையே இந்த பைக் கொண்டிருக்கிறது. இதன் ட்வின் எக்சாஸ்ட் சிஸ்டம், பார் எண்டு மிரர்கள், பெரிய இன்ஜின் ஆகிய அனைத்தும் பைக்கின் டிசைனுக்கு சேர்த்து கூடுதலாக உழைக்கின்றன.

இன்ஜின் என்று சொல்லும் போது தான் ஞாபகம் வருகிறது, இந்த பைக்கில் 550.4 சிசி, V-ட்வின், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது QJ மோட்டார். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 8,000 rpm-ல் 49.6 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 53 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

QJ Motor SRV 600 V2

சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள், பிரேக்கிங்கிற்காக 320 மிமீ மற்றும் 360 மிமீ டிஸ்க்குகளுடன் டூயல் சேனல் ABS, இரண்டு பக்கமும் 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது SRV 600 V2 பைக். வட்ட வடிவில் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒன்றும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

705 மிமீ என்ற அளவில் மிகவும் குறைவான சீட் உயரத்தையே இந்த பைக் கொண்டிருக்கிறது. எனவே உயரம் குறைவானவர்கள் கூட இந்த பைக்கை எளிதாகக் கையாள முடியும். எடையும் 205 கிலோ என்ற அளவிலேயே இருக்கிறது. 350 சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட 10 கிலோ வரை அதிகம். சீட் உயரம் குறைவு என்பதால் கையாளுதலில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

ஃபுட் பெக் முன்னே நகர்த்தி வைக்கப்பட்டிருப்பதால் மிகவும் ரிலாக்ஸ்டான ரைடிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது இந்த 600 சிசி பைக். பாபர் க்ரூஸர் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு மீட்டியாக் 650 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இந்த QJ மோட்டார் SRV 600 V2 பைக்கைக் கூறலாம்.

இந்தியாவில் தற்போது SRC 250, SRC 500, SRV 300 மற்றும் SRK 400 ஆகிய நான்கு QJ மோட்டார் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா என்ற நிறுவனமே QJ மோட்டார் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. SRV 600 V2 பைக்கையும் இந்த நிறுவனமே இந்தியாவில் விற்பனை செய்யும்.

இந்த SRV 600 V2 பைக்கின் சிறிய வெர்ஷனாக ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் SRV 300 பைக்கைப் பார்க்கலாம். SRV 600 V2 போலவே டிசைன், ஆனால் சற்று சிறிய 296 சிசி, V-ட்வின், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய இன்ஜின் கொண்ட பைக்கை 3.29 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். புதிய 600 சிசி பைக்கை 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச அளவில் 150 நாடுகளுக்கும் மேல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது QJ மோட்டார். கிட்டத்தட்ட 150-க்கும் மேலான பைக் மாடல்களை தங்களுடைய லைன்-அப்பில் வைத்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை நேரடியாகக் களமிறங்கவில்லை. QJ மோட்டாரின் மற்ற பைக்குகளைப் போலவே இந்த SRV 600 V2 பைக்கும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெறும் வாய்ப்புகள் குறைவு தான்.

Article Published On: Wednesday, June 10, 2026, 11:19 [IST]
English summary
Qj motor testing srv 600 v2 cruiser boober style bike in india may be launching soon
மேலும்... #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out