டிவிஎஸ் ஜூப்பிட்டருக்கே சவால் விடும் ஸ்கூட்டர்.. விலை என்ன தெரியுமா?

சாலைகளில் இலகுவாகப் பயணம் செய்வதற்கு ஏற்ற வாகனம் ஸ்கூட்டர் தான். அதுவும் குறைவான தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ஸ்கூட்டரைப் போல சொகுசான வாகனம் வேறு எதுவும் இல்லை. இதனாலேயே உலகம் முழுவதும் பைக்குகள் அளவிற்கு விதவிதமான ஸ்கூட்டர்களும் பல்வேறு வடிவில், பல்வேறு படிநிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு ஸ்கூட்டர் மாடல் தான் LTR 50.

சீனாவைச் சேர்ந்த QJ மோட்டார் என்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் மாடல் LTR 50. QJ மோட்டார் நிறுவனம் உலகம் முழுவதும் 150-க்கும் மேலான நாடுகளில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் லைன்-அப்பில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டும் நாற்பதுக்கும் மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

QJ Motor LTR 50

அந்த ஸ்கூட்டர் லைன்-அப்பின் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு மாடல் தான் LTR 50. மிகவும் சிறிய 50 சிசி இன்ஜினுடன், குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டராக இந்த LTR 50 இருக்கிறது. QJ மோட்டார் நிறுவனம் இந்தியாவிலும் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. எனவே இந்த LTR 50 ஸ்கூட்டரையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்தால் நன்றாகத் தான் இருக்கும். சரி, இப்போது இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

மேலே கூறியது போலவே இந்த LTR 50 ஸ்கூட்டரில், 50 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 6,500 rpm-ல் 3 hp பவர் மற்றும் 5,500 rpm-ல் 3.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனை இந்த சிறிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

QJ Motor LTR 50

ஐரோப்பாவில் 16 வயதுடையவர்கள் கூட ஓட்டும் வகையிலான ஒரு எரிபொருள் ஸ்கூட்டராக இதனை வெளியிட்டிருக்கிறது QJ மோட்டார். ஐரோப்பாவில் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பல்வேறு படிநிலைகளாக வழங்கப்படுகிறது. அதில் 16 வயது நிரம்பியவர்கள் பெறும் A1 ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இந்த 50 சிசி ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது QJ மோட்டார்.

LED விளக்குகள், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டம், ப்ரீமியமான டெக்சர்டு சீட், இரண்டு பக்கமும் 12 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் ஆகிய மேம்பட்ட அம்சங்களையே இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் டெலிஸ்கோபிக் காயில் ஸ்பிரிங் யூனிட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்குக்கு முன்பக்கம் டிஸ்க்கும், பின்பக்கம் டிரம்மும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் 1,800 யூரோ என்ற விலையில், அதாவது இந்திய மதிப்பிற்கு 2 லட்சம் ரூபாய்க்கு இணையான விலையில் இந்த QJ மோட்டாரின் LTR 50 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிளாஸியான ரெட்ரோ லுக்கைக் கொண்டிருந்தாலும், விலை அதிகம் என்பதால் அங்கே இந்த ஸ்கூட்டருக்கு டிமாண்டு சற்று குறைவாகத் தான் இருக்கிறதாம். இந்தியாவிற்கு இந்த ஸ்கூட்டரைக் கொண்டு வந்தால் நீங்கள் வாங்குவீர்களா?

டிரைவ்ஸ்பார்க் கருத்து: LTR 50 சிறப்பான ஸ்கூட்டர் தான். ஆனால் இதன் திறனுக்கேற்ப விலை குறைவாக இருந்தால் இந்தியாவில் நன்கு விற்பனையாகும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் 110 சிசி மற்றும் 125 சிசி ஸ்கூட்டர்களை விடக் குறைவான விலையில் இதனை வெளியிட முடியாது. எனவே இது மட்டுமின்றி வேறு எந்த ஸ்கூட்டர் மாடலையும் QJ மோட்டார் இந்தியாவில் வெளியிடும் வாய்ப்புகள் குறைவு தான்.

Article Published On: Saturday, June 13, 2026, 10:19 [IST]
English summary
Qj motors ltr 50 scooter will you buy it if launched in india
மேலும்... #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out