மணிக்கு 50கிமீ வேகம் மேல் தாண்டாது... ஒருமுறை ஃபுல்லா சார்ஜ் போட்டா 80கிமீ பயணம் நிச்சயம்!!

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் கமர்ஷியல் டெலிவிரி (Commercial Delivery) துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், குவாண்டம் எனர்ஜி லிமிடெட் (Quantum Energy Limited) மற்றும் எமோ எனர்ஜி (EMO Energy) நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்த வியூக ரீதியான கூட்டணியின் விளைவாக, 'குவாண்டம் பிசினஸ் எமோ' (Quantum Bziness EMO) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது 'லாஸ்ட் மைல்' (Last Mile) மற்றும் பெரிய போக்குவரத்து நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குவாண்டம் நிறுவனத்தின் வாகனப் பொறியியல் திறன்களுடன் எமோ நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற திரவ-குளிரூட்டப்பட்ட பேட்டரி தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு, செலவு குறைந்த போக்குவரத்துக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக புதிய குவாண்டம் பிசினஸ் எமோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

quantum energy and emo energy launch high-performance electric scooter

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இதயப் பகுதியாக எமோ எனர்ஜி நிறுவனத்தின் 2 kWh 'சென்பேக்' (ZenPac) பேட்டரி திகழ்கிறது. இந்த பேட்டரி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் வரை ஸ்கூட்டரை இயக்கும் திறன் கொண்டதுடன், அதிகப்பட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தையும் எட்ட வைக்கும்.

எமோவின் அதிநவீன Swft ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, ZenPac பேட்டரியை வெறும் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இது விரைவான வணிகச் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது. கூட்டணி நிறுவனங்களின் அறிக்கையின்படி, ZenPac பேட்டரி நிஜ உலக செயல்பாடுகளில் 15 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் இயங்கியுள்ளது.

quantum energy and emo energy launch high-performance electric scooter

இந்த நீண்ட காலப் பயன்பாட்டில், 300 முறை சார்ஜிங் செய்த பிறகு பேட்டரியில் வெறும் 1.2% மட்டுமே தேய்மானம் ஏற்பட்டது. மேலும், 400 சார்ஜிங் சுழற்சிகளுக்குப் பின்னரும் 2%-க்கும் குறைவான தேய்மானத்தையே பேட்டரி அடைந்துள்ளது. இந்த பேட்டரி அமைப்பானது சுற்றிலும் கூலிங் சிஸ்டம், மேம்பட்ட ஆற்றல் மேலாண்மை மற்றும் பேட்டரியை சமநிலை படுத்தும் மேலாண்மை அமைப்புகளைக் உள்ளடக்கியது ஆகும்.

இந்த மேம்பட்ட அம்சங்கள் 25 உலகளாவிய காப்புரிமைகளால் ஆதரிக்கப்படுகின்றன. மேலும், எமோ எனர்ஜி தற்போது இந்தியாவின் 12 முக்கிய நகரங்களில் 1,300-க்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை வெற்றிகரமாக செயல்படுத்துகிறது. குவாண்டம் பிசினஸ் எமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2,500 வாட்ஸ் உச்ச திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், 12 அங்குல சக்கரங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது.

மேலும், நகர்ப்புற மற்றும் சிறு நகர்ப்புற டெலிவிரி பணிகளின் சவால்களைச் சமாளிக்கும் வகையில், 200 கிலோகிராம் வரை சுமைகளை தாங்கும் திறன் கொண்டது இது ஆகும். குவாண்டம் எனர்ஜி நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு மையங்களைக் கொண்டுள்ளது.

தெலுங்கானாவின் மகேஷ்வரத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலையில் செயல்பாடுகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தின் கீழ், 2026 மார்ச் மாதத்திற்குள் 55,000 சதுர அடி பரப்பளவிலான கட்டுமானம் முடிந்து, மாதத்திற்கு 10,000 யூனிட்கள் உற்பத்தித் திறன் எட்டப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டாம் கட்ட தொழிற்சாலை கட்டுமான பணிகளும் நிறைவு பெற்றுவிட்டால், மாதத்திற்கு 20,000 யூனிட்கள் உற்பத்தித் திறனை எட்டி இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக குவாண்டம் எனர்ஜி மாறிவிடும். இதற்கிடையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள குவாண்டம் பிசினஸ் எமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது கமர்ஷியல் துறையிலும் இந்த நிறுவனத்தை கவனம் பெற வைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2026, 21:35 [IST]
English summary
Quantum energy and emo energy launch high performance electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+