சென்னையில் 3 தளங்களுடன் பிரம்மாண்ட ராப்டி EV பைக் ஷோரூம்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!

சென்னையை சேர்ந்த மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Raptee.HV, தனது புதிய ஷோரூமை சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) திறந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்ட ஷோரூமை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் காணொலி வாயிலாக இன்று
திறந்து வைத்தார்.

ஏற்கெனவே பெங்களூருவில் தனது விற்பனை மையத்தை தொடங்கியுள்ள இந்நிறுவனம், தற்போது சொந்த ஊரான சென்னையிலும் வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவையை வழங்கும் வகையில் இந்த பிரம்மாண்ட ஷோரூமை திறந்துள்ளது. முந்தைய விற்பனை மையத்தைவிடப் பெரியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மையம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது வாடிக்கையாளர்களுக்கான அனுபவ மையமாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Raptee Showroom Inaguration

இந்த புதிய அனுபவ மையத்தில் வாடிக்கையாளர்கள் Raptee.HV மின்சார மோட்டார்சைக்கிளை நேரடியாகப் பார்வையிடலாம். அதன் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் குழுவினரிடம் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, மோட்டார்சைக்கிளின் உயர் மின்னழுத்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Raptee.HV நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் 240V உயர் மின்னழுத்த கட்டமைப்பு (High Voltage Architecture) குறித்த விளக்கங்களையும் வாடிக்கையாளர்கள் இங்கு பெறலாம். மேலும், நேரடியாக வாகனத்தை ஓட்டிப் பார்க்கும் சோதனை ஓட்ட (Test Ride) வசதியும் இந்த மையத்தில் வழங்கப்படுகிறது.

Also Read

இதுகுறித்து Raptee.HV நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான தினேஷ் அர்ஜுன் கூறுகையில், சென்னையில்தான் தங்களது பயணம் தொடங்கியது என்றும், இங்குள்ள வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான தொடர்பை உருவாக்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர்களில் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப தயாரிப்புகளை மேம்படுத்துவது தங்களது முக்கிய நோக்கம் என்றும், புதிய அனுபவ மையம் அந்த முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Raptee Showroom Inaguration

Raptee.HV நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமான TIDCO ரூ.25 கோடி முதலீட்டை வழங்கி உள்ளது. டைட்டன் நிறுவனத்திற்குப் பிறகு, நான்கு தசாப்தங்களில் இத்தகைய முதலீட்டைப் பெற்ற முதல் நிறுவனம் Raptee.HV என அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே உலகத் தரத்திலான மின்சார வாகனத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனத்தின் முயற்சிக்கு இந்த முதலீடு அரசின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் புதிய தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

சென்னை மற்றும் பெங்களூருவைத் தொடர்ந்து கோவை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் புதிய அனுபவ மையங்களைத் திறக்க Raptee.HV திட்டமிட்டுள்ளது. இதுதவிர, இலங்கை, பிரேசில், துருக்கி உள்ளிட்ட சர்வதேசச் சந்தைகளிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், Raptee.HV தனது விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, சென்னையில் புதிய மூன்று தளங்கள் கொண்டதாக பிரம்மாண்ட அனுபவ மையம் திறக்கப்பட்டிருப்பது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

Article Published On: Wednesday, November 11, 2026, 18:26 [IST]
English summary
Raptee hv new experience centre chennai omr cm vijay inauguration
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out