150கிமீ வரை ரேஞ்ச் தரும் புதிய எலெக்ட்ரிக் பைக்... இப்போதைக்கு ரூ.499 இருந்தால் ஒன்றை சொந்தமாக்கிடலாம்!

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஜூலை 2ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரெவோல்ட் பைக்குகள் வரிசையில் RV பிளேஸ் எக்ஸ் மற்றும் RV400 எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய முதன்முதலாக ஆரம்பித்த நிறுவனங்களுள் ரெவோல்ட் மோட்டார்ஸ் ஒன்றாகும். மற்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய விரும்பிய காலத்திலேயே, மிகவும் சில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கி விற்பனை செய்ய துவங்கின. அத்தகைய ஒரு சில நிறுவனங்களுள் ரெவோல்ட் ஒன்றாகும்.

revolt motors launches rvx electric bike

இந்த நிலையில், ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் பைக்காக RVX என்கிற மாடலை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இது RV பிளேஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கை காட்டிலும் விலைமிக்கதாக, அதேநேரம் ரெவோல்ட் நிறுவனத்தின் பிரதமான, விலையுயர்ந்த பைக்கான RV400-ஐ காட்டிலும் விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் பைக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய ரெவோல்ட் RVX பைக்கில் பேட்டரியை தனியாக கழற்றி வெளியே எடுக்க முடியும். இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகளும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.

revolt motors launches rvx electric bike

விருப்பம் உள்ளவர்கள் ரூ.499 என்கிற டோக்கன் தொகையை செலுத்தி ரெவோல்ட் RVX எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். எக்லிப்ஸ் சிவப்பு, எலெக்ட்ரிக் நீலம் மற்றும் பேர்ல் கருப்பு என்கிற மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த புதிய ரெவோல்ட் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய RVX எலெக்ட்ரிக் பைக்கும் வழக்கமான ரெவோல்ட் பைக்குகளின் தோற்றத்திலேயே உள்ளது. அதன்படி, முன்பக்கத்தில் DRL-கள் உடன் சிக்னெச்சரான டிசைனில் LED ஹெட்லைட், முரட்டுத்தனமான தோற்றத்தில் போலியான டேங்க் பகுதி, ஸ்போர்டியான டிசைனில் இருக்கைகள், நீட்டிக்கப்பட்ட பின்பக்க டெயில் பகுதி உள்ளிட்டவற்றை இந்த பைக் பெற்றுள்ளது.

இதில், போலியான டேங்க் பகுதி ஆனது பெட்ரோல் டேங்க் ஆக இல்லாமல், பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான ஸ்டோரேஜ் பகுதியாக உள்ளது. பைக்கின் பின்பகுதி மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே பைக்கின் பேனல்கள் வெளியே நீண்டு, பைக்கிற்கு பருத்த உடலமைப்பை வழங்கியுள்ளன. இந்த எலெக்ட்ரிக் பைக் தாழ்வாக வடிவமைக்கப்பட்டு இருப்பினும், தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி நன்கு உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஆதலால், குறைவான புவியீர்ப்பு விசையினால் இந்த பைக்கை கரடுமுரடான சாலைகளிலும் எளிதாக கையாளலாம். இதற்கேற்ப, இந்த பைக்கின் அகலமான டயர்கள் கூடுதல் பிடிமானத்தையும், கண்ட்ரோலையும் வழங்கக் கூடியவைகளாக உள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக் செட்-அப்பும் உள்ளது. பிரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 4.1 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பைக்கின் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 170 என்.எம் வரையிலான டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. ஸ்போர்ட், ஈக்கோ மற்றும் நார்மல் என்கிற மூன்று ரைடிங் மோட்களை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 90கிமீ ஆகும். 3.24kWh பேட்டரியை கொண்ட இந்த பைக்கின் அதிகப்பட்ச ரேஞ்ச் 150கிமீ என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற எலெக்ட்ரிக் பைக்குகளை போன்று புதிய RVX எலெக்ட்ரிக் பைக்கிலும், பைக் மற்றும் அதன் பேட்டரிக்கு வாரண்டியை ரெவோல்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் ஆனது ஏற்கனவே கூறியதுபோல் செயல்திறன்மிக்கதாக விளங்கினாலும் அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கு இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.

Article Published On: Thursday, July 2, 2026, 23:56 [IST]
English summary
Revolt motors launches rvx electric motorcycle price features range details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out