விலையை பார்த்து ஏமாறாதீங்க... இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே விலை தான், ஆனால் பெர்ஃபார்மன்ஸ் வேற!

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய RVX எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதை பற்றி கேளவிப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ரோர் எவோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனையில் நேரெதிர் போட்டியாக உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்துவரும் நிலையில், இவை இரண்டுமே இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஸ்டைலாக உருவாக்கப்படுகின்றன. அதேபோல், நவீன தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்ததாக விளங்கும் இவற்றின் விலைகள், ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் திறன் உள்ளிட்டவை எந்த அளவிற்கு உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

revolt rvx vs oben rorr

பேட்டரி & ரேஞ்ச்
ஒபென் ரோர் எவோ எலெக்ட்ரிக் பைக்கில் 4.4kWh திறன் கொண்ட லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 8 வருட வாரண்டி உடன் கிடைக்கும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 180கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 0-இல் இருந்து 80% சார்ஜை வெறும் 90 நிமிடங்களில் நிரப்பிவிடக் கூடிய ஃபாஸ்ட் சார்ஜரை இந்த பைக் ஏற்கக்கூடியதாக உள்ளது.

மறுப்பக்கம் ரெவொல்ட் RVX எலெக்ட்ரிக் பைக்கில் சற்று சிறிய அளவிலான பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பைக்கின் எடையும் குறைவாக உள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள 3.24kWh திறன் கொண்ட பேட்டரியை பைக்கில் இருந்து தனியாக கழற்றி வெளியே எடுக்கவும் முடியும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

revolt rvx vs oben rorr

செயல்படுதிறன்
ஒபென் ரோர் எவோ பைக் அதன் சிறப்பான செயல்படுதிறனுக்காக பைக் ஆர்வலர்களால் பாராட்டப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மணிக்கு 40கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக் கூடியதாக இந்த எலெக்ட்ரிக் பைக் உள்ளது. அதுவே, ரெவோல்ட் RVX பைக்கில் வேகமான ஓவர்டேக்கிற்கு ஏற்ப உடனடி முடுக்கம் கிடைக்காது என்றாலும், மென்மையான பவர் டெலிவிரியை பெறலாம்.

இந்த ரெவோல்ட் பைக்கில் மணிக்கு 40கிமீ வேகத்தை எட்ட 3.7 வினாடிகள் ஆகும். ஒபென் ரோர் எவோ பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 110கிமீ வேகத்தை எட்டும் நிலையில், ரெவோல்ட்டின் புதிய பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 90கிமீ மட்டுமே ஆகும்.

revolt rvx vs oben rorr

விலை
ரெவோல்ட் RVX எலெக்ட்ரிக் பைக் ரூ.1.24 லட்சத்திலும், ஒபென் ரோர் எவோ ரூ.1.25 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, விலையில் இரண்டிற்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை. இருப்பினும், இவை இந்த பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் மாநிலத்தை பொறுத்து வேறுப்படும்.

Feature Revolt RVX Oben Rorr Evo Performance Delta
Battery Size 3.24 kWh 4.4 kWh Oben +35.8% larger
Top Speed 90 kmph 110 kmph Oben +20 kmph faster
IDC Range 160 km 180 km Oben +20 km more range
Start Price Rs 1.24 Lakh Rs 1.25 Lakh Revolt is Rs 1,000 cheaper

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, செயல்படுதிறன்மிக்க எலெக்ட்ரிக் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒபென் ரோர் எவோ பைக் ஏற்றதாக இருக்கும். வெப்பமான பகுதிகளிலும் வெப்பநிலையை ஒரே சீராக வைக்க இந்த ஒபென் பைக்கில் LFP பேட்டரி தொழிற்நுட்பம் வழங்கப்படுவதையும் மறந்துவிட வேண்டாம்.

அதுவே, மென்மையான இயக்கத்தை எதிர்பார்ப்பவர்களும், எளிதாக ஹேண்ட்லிங் & கண்ட்ரோல் செய்யக்கூடிய எலெக்ட்ரிக் பைக்கை விரும்புபவர்களுக்கு ரெவோல்ட் RVX ஏற்றதாக இருக்கும். மேலும், இந்த ரெவோல்ட் பைக்கில் இருந்து பேட்டரியை கழற்றி வெளியே எடுத்து சார்ஜ் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.

Article Published On: Friday, July 10, 2026, 11:31 [IST]
English summary
Revolt rvx vs oben rorr evo electric bike comparison design features range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X