எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எஸ்யூவி.. இப்போ இதோட விற்பனை தான் பிச்சிக்கிட்டு போகுது!

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளில் ரிவர் மொபிலிட்டியும் (River Mobility) ஒன்று. முன்னர் வெளியே தெரியாத ஸ்டாப்ட்-அப் நிறுவனமாக இருந்து வந்தது ரிவர் மொபிலிட்டி. ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். இதனால் கடந்த ஓராண்டின் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வெகுவாக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் சுமார் 4,436 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது ரிவர் மொபிலிட்டி. இந்தியாவில் ஒரே மாதத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்த அதிகபட்ச அளவு இது தான். இதற்கு முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம் தான் 4,273 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகபட்சமாக இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

River Indie

2023ல் இருந்து தற்போது வரை மொத்தமாக 43,805 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரிவர் மொபிலிட்டி இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் தான், அதாவது இந்த 2026ல் தான் இதன் விற்பனை வெகுவாக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் மாதாந்திர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை 15,000 யூனிட்டுகளுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹீரோ (விடா) நிறுவனமே மாதம் 4,000 யூனிட்டுகள் வரை தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தப்போது அந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 20,000 யூனிட்டுகளுக்கும் மேல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

River Indie

இதுவரை மொத்தமாக 43,805 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரிவர் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்ததாக மேலே குறிப்பிட்டிருந்தோம் இல்லையா, அதில் 54 சதவீதம், அதாவது 23,722 யூனிட்டுகள் இந்த 2026ன் முதல் ஆறு மாதங்களிலேயே வந்திருக்கிறது. இது ரிவர் மொபிலிட்டி நிறுவனத்திற்கு பாஸிட்டிவ்வான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த 2026ம் ஆண்டு முடிவிற்குள் ஒரே ஆண்டில் 50,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற மைல்கல்லை ரிவர் மொபிலிட்டி கடந்துவிடும்.

இந்தியாவில் தற்போது இன்டீ (Indie) என்ற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே ரிவர் மொபிலிட்டி விற்பனை செய்து வருகிறது. 1.55 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது சற்று அதிக விலை தான் என்ராலும், அதற்கேற்ற மதிப்பை இந்த இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

மிகவும் பிராக்டிகலான வசதிகள் கொண்ட மற்றும் தனித்துவமான லுக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதன்மையானதாக இந்த ரிவர் இன்டீயைக் கூறலாம். மேலும், 160 கிமீ ரேஞ்சு, 5 மணி நேரத்தில் வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடிகிற வசதி மற்றும் 9 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் என ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்ட ஸ்கூட்டராக ரிவர் இன்டீ உள்ளது.

இதுவே சற்று கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், இந்த ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனை ஸ்கூட்டர்களின் எஸ்யூவி என செல்லமாக அழைக்கிறது ரிவர் மொபிலிட்டி. அந்தப் பெயருக்கு தகுதியான ஒன்றாகவும் இதனை நாம் கூறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக காலூன்றி வருகிறது ரிவர் மொபிலிட்டி. தற்போது முதன்மையான நகரங்களில் எல்லாம் இதன் ஷோரூம்கள் செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் அதிகளவில் இதன் செயல்பாடுகளை நீங்கள் பார்க்கலாம். பார்த்தால் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்ய மறக்காதீங்க.

Article Published On: Wednesday, July 15, 2026, 18:32 [IST]
English summary
River indie electric scooter sales doubled this year in 2026
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out