160 கிமீ ரேஞ்சு தரும் இந்த எலெக்ட்ரிக ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்.. அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வாங்க வேண்டும். ஆனால் இப்போது அதிகமாக விற்பனை செய்யப்படும் முன்னணி ஸ்கூட்டராக இல்லாமல் தனித்துவமான ஒன்றாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாத வகையில் நம்பகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் நீங்கள் வாங்க வேண்டியது ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தான்.

பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரிவர் மொபிலிட்டி (River Mobility). இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தான் இன்டீ (Indie). தனித்துவமான டிசைன் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது. எனினும் மிகவும் குறைவான அளவிலேயே இது தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

River Indie Backside

மிகவும் குறைவான அளவு விற்பனையாகிறது என்றால் எப்படி நம்பகத்தன்மை நிறைந்ததாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது கூறப்போகும் தகவல் நம்பிக்கையளிக்கலாம். இந்த இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தியாவில் தற்போது யமஹா விற்பனை செய்து வரும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான EC-06 உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை உருவாக்கி தயாரித்து வருவதும் மேலே கூறிய ரிவர் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான்.

இந்த ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றாக யமஹா இருக்கிறது. எனவே இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தை யமஹா பயன்படுத்திக் கொண்டது. யமஹாவின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், தாராளமாக இந்த ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.

River Indie Front

சரி, இந்த இன்டீ ஸ்கூட்டரை வாங்குவதற்குப் பதிலாக இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கும் யமஹாவின் EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமே என்று உங்களுக்குத் தோன்றும். கண்டிப்பாக, பிராண்டு வேல்யூ மற்றும் பரந்துபட்ட சர்வீஸ் உள்ளிட்ட காரணங்களுக்காக அதனை வாங்கலாம். ஆனால் EC-06ஐ விட இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சில அம்சங்கள் மேம்பட்டதாகவே இருக்கிறது. மேலும், 20,000 ரூபாய் வரை இன்டீ ஸ்கூட்டர் குறைவான விலையையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் என எட்டு நகரங்களில் 12 ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களைக் கொண்டிருக்கிறது ரிவர் மொபிலிட்டி. இந்த நகரங்களில் இருப்பவர்கள் மற்றும் இந்த நகரங்களுக்கு அருகில் இருப்பவர்கள் ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதைக் குறித்து பரிசீலனை செய்யலாம்.

தற்போது 1.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ்யூவி என்று அழைக்கப்படும் வகையில், தனித்துவமான, பிரம்மாண்டமான டிசைனைக் கொண்டிருக்கிறது இன்டீ. இந்த பிரம்மாண்டம் பார்வைக்கு மட்டும் அல்ல பிராக்டிகாலிட்டிக்கும் தான். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே 43 லிட்டர் என்ற அதிகளவு ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும் ஒரே ஸ்கூட்டர் இந்த ரிவர் இன்டீ தான்.

இது அண்டர்சீட் ஸ்டோரேஜ் மட்டுமே. இதுதவிர 12 லிட்டர் ஃப்ரண்ட் ஏப்ரன் ஸ்டோரேஜ் ஸ்பேஸும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளது. இவையும் போதாது என்பவர்களுக்கு பக்கவாட்டில் பேனியர்கள் மற்றும் டாப் பாக்ஸை வைத்துக் கொள்வதற்கான வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர் மொபிலிட்டி நிறுவனம் கொடுத்திருக்கிறது. அதிகளவில் பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டிய தேவை இருப்பவர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கண்களை மூடிக் கொண்டு வாங்கலாம்.

இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்களுடன் மிகவும் நிலையான ஹேண்டிலிங்கை வழங்குகிறது ரிவர் இன்டீ. 4 kWh பேட்டரி பேக்குடன், 90 கிமீ வரையிலான தினசரி பயன்பாட்டு ரேஞ்சைக் கொடுக்கிறது ரிவர் இன்டீ. 90 கிமீ என்பது இந்த ஸ்கூட்டரை அதிகபட்ச வேகத்தில் ஓட்டினால் கூட கிடைக்கும் ரேஞ்சின் அளவாகும். 160 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. பார்த்து பக்குவமாக ஓட்டினால் 90 கிமீ மேலான ரேஞ்சைக் கூடப் பெற முடியும்.

6.7 kW (9 hp) பவர் மற்றும் 26 Nm டார்க்குடன் போதுமான இழுவைத் திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. இதனால் மேலே கூறியது போல அதிகளவிலான பொருட்களை எளிதாக ஏற்றிச் செல்ல முடியும். இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

மான்சூன் ப்ளூ, சம்மர் ரெட், ஸ்பிரிங் யெல்லோ, விண்டர் ஒயிட் மற்றும் ஸ்டார்ம் கிரே ஆகிய ஐந்து தனித்துவமான நிறங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஷோரூம் உங்கள் ஊரில் எங்கே இருக்கிறது என்பதனை அதன் வலைத்தளப் பக்கத்தில் (rideriver.com) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல தனித்துவமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இந்த ரிவர் இன்டீயைத் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகையிலும் சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இது இருக்கிறது. என்ன விலை தான் கொஞ்சம் அதிகம். ஆனால அந்தக் கூடுதல் விலைக்கு கூடுதல் பிராக்டிகாலிட்டியும் நமக்குக் கிடைப்பதை மறந்து விட முடியாது. வாங்குகிறீர்களோ இல்லையோ ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்து தான் பாருங்களேன்.

Article Published On: Wednesday, May 20, 2026, 23:05 [IST]
English summary
River indie electric scooter why you should consider buying this one
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+