பஜாஜ் கம்பெனிக்கு போட்டியாக ஸ்கூட்டர் உருவாக்குறது எல்லாம் பெரிய விஷயம்! ஸ்டார்ட்-அப் கம்பெனி அசத்தல்!

ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3வது ஜென்ரேஷன் அப்கிரேட் உடன் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு என்பதை சமீபத்தில் விரிவான ரிவியூவாக நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த தொகுப்பில் என்ன பார்க்க போகிறோம் என்றால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் 3501 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய ரிவர் இண்டீ எந்த அளவிற்கு சிறந்ததாக விளங்குகிறது என்பதை பற்றி ஆகும்.

தோற்றம் & பரிமாண அளவுகள்: தோற்றத்தை வைத்து பார்த்தோமேயானால், ரிவர் இண்டீ ஆனது பெரிய அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, பஜாஜ் சேத்தக் 3501 உடன் ஒப்பிடுகையில் கூடுதல் நீளமானது, அகலமானது, எடைமிக்கது மற்றும் சற்று நீளமான வீல்பேஸை கொண்டதாக உள்ளது.

river indie gen 3 vs bajaj chetak 3501
Dimension / Detail Chetak 3501 River Indie
Seat Height 775mm 787mm
Ground Clearance 168mm 165mm
Kerb Weight 134kg 143kg

தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதி அமைந்துள்ள உயரமானது இந்த இரு ஸ்கூட்டர்களிலும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது என்றாலும், ரைடர் அமரும் இருக்கை ஆனது சேத்தக் ஸ்கூட்டரில் கிட்டத்தட்ட 12மிமீ தாழ்வாக உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில் இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் முற்றிலும் வேறுப்பட்டவை ஆகும். சேத்தக் ஆனது எளிமையான நியோ-ரெட்ரோ டிசைனையும், ரிவர் இண்டீ ஆனது முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டுள்ளது.

எலெக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி: இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் வெவ்வேறு விதமான எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. அதேபோல், மோட்டாரில் இருந்து இயக்க ஆற்றல்கள் சக்கரங்களுக்கு சேத்தக் மாடலில் நேரடி டிரைவ் ஆகவும், ரிவர் இண்டீயில் செயின் டிரைவ் ஆகவும் செல்கின்றன. சேத்தக்கில் 3.5kWh பேட்டரியும், ரிவர் இண்டீயில் 4kWh பேட்டரியும் பொருத்தப்படுகிறது.

river indie gen 3 vs bajaj chetak 3501

பயண அனுபவம் & ஹேண்ட்லிங்: பெரிய அளவிலான 14-இன்ச் சக்கரங்களை பெறுவதால், ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெவ்வேறு விதமான நிலப்பரப்புகளில் பயன்படுத்தலாம். டயர்களும் நன்கு அகலமாக வழங்கப்படுவதால் சாலையில் கூடுதல் பிடிமானத்தை பெறலாம். அதேநேரம், சேத்தக் 3501 ஆனது அடிப்படையான செட்-அப் உடன் தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

Specification Chetak 3501 River Indie
Front Suspension Single-sided leading-link Telescopic fork
Rear Suspension Monoshock Twin hydraulic shocks with dual sided swingarm
Front Brake 200mm Disc Brake 240mm Disc Brake
Rear Brake 130mm Drum Brake 200mm Disc Brake
Wheels 12-inch alloys 14-inch alloys
Front Tyre 90/90-12 tubeless 110/80-14 tubeless
Rear Tyre 90/90-12 tubeless 120/70-14 tubeless
Braking Safety Combined Braking System Combined Braking System

தொழிற்நுட்ப வசதிகள்: தொடுத்திரை டிஸ்பிளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் ஆப்ஷனலாக டெக்பேக் உள்ளிட்டவற்றுடன் சேத்தக் 3501 ஆனது தொழிற்நுட்ப அம்சங்கள் மிக்கதாக விளங்குகிறது. ரிவர் இண்டீயின் எல்சிடி திரை ஆனது மாடர்ன் தரத்தில் இல்லாவிடினும், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நேரலையாக வாகன அப்டேட்கள் போன்ற அத்தியாவசியமான வசதிகளை வழங்கக்கூடியதாக உள்ளது.

Feature Chetak 3501 River Indie
Headlight LED Twin-beam LED
Display TFT touchscreen LCD console
Connectivity Bluetooth, app connectivity Bluetooth, App connectivity
Navigation Full Google Maps (with TecPac) -
Music control Yes (with TecPac) -
Keyless access Yes Yes
Ride modes Eco, Sport Eco, Ride, Rush
Reverse mode Yes Yes
Regenerative braking Yes Yes, Adaptive
Hill hold Yes Yes
Underseat storage 35-litre 43-litre
Front storage 5-litre glovebox 12-litre glovebox

விலை & உத்தரவாதம்: ரிவர் இண்டீயை விட சேத்தக் 3501 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது கிட்டத்தட்ட ரூ.8,000 விலை குறைவானதாக உள்ளது. இண்டீ ஸ்கூட்டருக்கு 3 வருடங்கள்/ 30 ஆயிரம் கிமீ வாரண்டியை ரிவர் நிறுவனம் வழங்குகிறது. அதுவே, சேத்தக் 3501 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது.

Electric Scooter Price (Ex-Showroom, Bengaluru)
Chetak 3501 Rs 1,44,305
River Indie Rs 1,52,399

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டில் எதை வாங்குவது என கேட்டால், நீங்கள் ஸ்டைலிஷான, காம்பாக்ட்டான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் சேத்தக் 3501 ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமின்றி, மெட்டாலிக் உடலமைப்பு, நியோ-ரெட்ரோ டிசைன் மற்றும் டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் உள்ளிட்டவை இந்த சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கூடுதல் பலம் ஆகும்.

மறுப்பக்கம், ரிவர் இண்டீ ஆனது பல்வேறு விதமான சாலைகளுக்கு கொண்டு செல்லக்கூடியதாக உள்ளது. பெரிய பெட்டகம் வடிவிலான தோற்றம் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு ஏற்றதாக இருக்காது. ஆதலால், நெரிசல் மிகுந்த சாலைகளை கொண்ட நகர்புறத்தில் வசிக்கிறீர்கள் என்றால் பஜாஜ் சேத்தக் 3501 ஏற்றதாகவும், அதிக பொருட்களை கொண்டு செல்ல விரும்பும் கிராமவாசிகளுக்கு ரிவர் இண்டீ ஏற்றதாகவும் இருக்கும்.

Article Published On: Sunday, May 24, 2026, 21:13 [IST]
English summary
River indie gen 3 vs bajaj chetak 3501 electric scooters comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+