யமஹா கம்பெனி காரனே பார்த்து ஷாக் ஆன இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை அதிகரிப்பு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்துவரும் நிலையில், ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 436 இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரிவர் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூருவில் இருந்து பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்றான ரிவர் மொபிலிட்டி கடந்த மாத விற்பனையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வரிசையில் 7வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 8வது இடத்தையே ரிவர் மொபிலிட்டி பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

river indie electric scooters sales

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 436 யூனிட் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ரிவர் இண்டி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு இண்டி என்கிற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், மேற்கூறப்பட்ட 4,436 விற்பனை எண்ணிக்கை மொத்தமும் ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடையது மட்டுமே ஆகும்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து செயல்பட துவங்கிய ரிவர் மொபிலிட்டி நிறுவனம் ஒரு மாதத்தில் பதிவு செய்த அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக கடந்த 2026 மார்ச் மாதத்தில் 4 ஆயிரத்து 273 வாகனங்களை விற்பனை செய்ததே இதற்கு முன் அதிகப்பட்சமாக இருந்தது.

river indie electric scooters sales

முதல்முறையாக 2023 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கடந்த ஜூன் வரையில் மொத்தம் 43 ஆயிரத்து 805 யூனிட் ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 17 ஆயிரத்து 20 இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு இருந்தன.

இதன் மூலமாக, கடந்த 2025ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக ரிவர் மொபிலிட்டி ஒன்பதாவது இடத்தை பிடித்து இருந்தது. இது அப்படியே நடப்பு 2026ஆம் ஆண்டிற்கும் தொடர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 9 ஆயிரத்து 607 இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

இது, 2025ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களை காட்டிலும் சுமார் 62% அதிகமாகும். இதற்கடுத்த 2026 ஏப்ரல் - ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மேலும் கூடுதலாக 11 ஆயிரத்து 776 இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 4,436 யூனிட்கள் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கிடைத்துள்ளன.

இந்த 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே சுமார் 21 ஆயிரத்து 383 ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும், இந்த 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே அதிக இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிவர் இண்டியின் பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.55 லட்சமாக உள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம், இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்வதற்கான ஷோரூம்களை நாடு முழுவதும் பல்வேறு புதிய இடங்களில் ரிவர் மொபிலிட்டி நிறுவனம் திறப்பதாகும். அதுமட்டுமின்றி, இண்டியின் உற்பத்திக்காக பிரபலமான யமஹா நிறுவனத்துடனும் ரிவர் மொபிலிட்டி கூட்டணி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, July 16, 2026, 11:39 [IST]
English summary
River mobility sold 4436 unit indie electric scooters in june 2026 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out