வெறும் 1.20 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்! 50 கிமீ-க்கும் அதிகமா மைலேஜ் தரும்! செல்போன் மாரி விக்க போகுது!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் எய்ச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ஒரு அங்கமாக இயங்கி கொண்டுள்ளது. அதாவது எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம்தான், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் (Parent Company) ஆகும்.

இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பு காரணமாக, தங்கம் விலை (Gold Price) உயர்வதை போல் , ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் உச்சமாக கடந்த 2025ம் ஆண்டில் 1 மில்லியனுக்கும் (1 Million) அதிகமான, அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

2025 Royal Enfield Hunter 350 Side View

துல்லியமாக சொல்வதென்றால், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10,71,809 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரு வருடத்தின் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை (Highest-ever Sales) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக வெறும் 8,57,378 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டில் விற்பனையில் 25 சதவீத வளர்ச்சியையும் ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்து அசத்தியுள்ளது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Royal Enfield Hunter 350

இங்கே மற்றொரு மிக முக்கியமான விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ந்து 3வது ஆண்டாக ஒட்டுமொத்தமாக 8 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) கடந்துள்ளது என்பதுதான் அந்த விஷயம் ஆகும்.

அதாவது கடந்த 2023ம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 8,22,295 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. அதன் பின் வந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் முறையே நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 8,57,378 மற்றும் 10,71,809 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருவது கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் ஆகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 40 சதவீதம் கிளாசிக் 350 பைக் மூலமாக கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 25 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

அதே நேரத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனையில் ஒட்டுமொத்தமாக 35 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பது அதன் 350 சிசி பைக்குகள்தான் என்பது தெளிவாகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்காலத்தில் 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்க கூடிய 250 சிசி ஹைப்ரிட் பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதன் விலை (Price) வெறும் 1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த பைக் வந்தால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 28, 2026, 8:19 [IST]
English summary
Royal enfield 1 million units sales in 2025 check all details here
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+